
ஹார்வர்டு பல்கலை.யில் பயின்ற முன்னாள் மாணவர்கள் நடப்பு 2010ல் 62 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது கடந்த ஆண்டு 54 ஆக இருந்தது. எனவே இந்த பட்டியலில் அதிக எண்ணிக்கையுடன் ஹார்வர்டு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து ஸ்டேன்ட்போர்டு பல்கலை. 28 பேருடன் 2ம் இடத்தையும், கொலம்பியா பல்கலை. 20 பேருடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.
தற்போதைய பிரபல கோடீஸ்வரர்களான சிடாடெல் நிறுவனர் கெனீத் கிரிபின், நியூயார்க் மேயர் மிச்செல் புளூம்பெர்க், எண்ணெய் மற்றும் வங்கி நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள ஜார்ஜ் கெய்சர், ஈபேய்ஸ்சின் மெக் ஒயிட்மேன், அப்பலோ மேனேஜ்மென்ட் லியோன் பிளாக், பிளாக்ஸ்டோனின் ஹாமில்டன் ஜேம்ஸ் ஆகியோர் ஹார்வர்டு பல்கலை. முன்னாள் மாணவர்களாகும்.
யாகூ இணை நிறுவனர் யான்க், கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரைன் மற்றும் லேரி பேஜ், சன் இணை நிறுவனர் வினோத் கோஸ்லா, கேப் நிறுவன தலைவர் ராபர்ட் பிஷெர், நைக் நிறுவனர் பிலிப் நைட், ஆகியோர் ஸ்டேன்ட்போர்டின் முன்னாள் மாணவர்களாகும்.
இந்த பட்டியலில் பென்சிலொவேனியா பல்கலை. 18 பேருடன் 4வது இடத்தையும், சிகாகோ பல்கலை., நார்த்வெஸ்டன் பல்கலை. ஆகியவையும் முன்னணி 10 இடத்தில் இடம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment