
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் இருந்து இறங்கிய பய ணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருவொற்றியூரைச் சேர்ந்த முதுமது ரபீக் (29) என்ப வர், சுற்றுலா பயணியாக சிங்கப்பூர் சென்று திரும்பினார்.
அவரிடம் இருந்த 2 சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நீர் நிரப்பிய பாலிதீன் கவரில் 184 வாஸ்து மீன்கள், அலங்கார மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ^2 லட்சத்து 50 ஆயிரம். அவரிடம் விசாரித்ததில், சிங்கப்பூரில் ^50 ஆயிரத்துக்கு வாங்கியதாக கூறினார். இந்த மீன்களால் இந்தியாவில் நோய்க் கிருமிகள் பரவும் என்பதால், அதை சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, காலை 11.45 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment