
பெண் குழந்தையை சுமையாக நினைத்து சிசுவிலேயே கொலை செய்து வீதிகளில் வீசும் மாபாதக செயல் தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடந்து வந்தன.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.
இந்ததிட்டத்தின் மூலம் பெண் குழந்தையை வளர்க்க விரும்பாத பெற்றோர்கள் அரசு தொட்டிலில் விட்டு விடலாம். அப்படிப்பட்ட குழந்தைதான் அக்ஷயா.
10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை பெற்றோரின் வறுமை, ஏழ்மையின் காரணமாக வளர்க்க முடியாமல் அனாதையாக விடப்பட்டவர் அன்று தொட்டிலில் அழுது புலம்பிய அக்ஷயா இன்று வளர்ந்து ஆளாகி 18 வயது நிரம்பிய இளம் பெண்ணாக காட்சியளிக்கிறார்.
1992-ம் ஆண்டு தொட்டிலில் வீசப்பட்ட அக்ஷயா அரசின் அரவணைப்பில் சிறிது காலம் இருந்தார். பின்னர் தாம்பரம் “சாஸ்” குழந்தைகள் கிராமம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அவள் உள்பட 14 குழந்தைகள் 1994-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் இருந்து தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்ட முதல் குழந்தைகளாகும் இவைகளே ஆகும்.
சிறுவயதிலே தாயின்பாசம், அரவணைப்பு இல்லாத தொட்டில் குழந்தைகளுக்கு “சாஸ்” தொண்டு நிறுவனம் அடைக்கலம் கொடுத்து அரவணைத்தது. அம்மாவை போல பரிவு காட்ட வளர்ப்பு தாய் நிய மிக்கப்பட்டு அவரது பாசத்திலும் அன்பிலும் அக்ஷயா வளர்ந்தாள். அவரது வளர்ப்பு தாயின் பெயர் ரஜினி.
அவர் தான் இதுவரை அவளிடம் பாசம்காட்டி வந்தார். சிவசங்கர வித்யாலயா பள்ளியில் படித்து வந்த அக்ஷயா பள்ளி படிப்பை முடித்து கல்லூரி படிப்புக்கு தயாரானார்.
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர விணப்பித்தார். அவளுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாதம்மாள் ஷீலா என்ஜினீயரிங் கல்லூரியில் கலந்தாய்வில் இடம் கிடைத்தது.
என்ஜினீயரிங் கல்லூரியில் தொட்டில் குழந்தை மாணவி சேர்ந்து படிப்பது இதுவே முதல் முறையாகும். அந்தபெருமை அக்ஷயாவுக்கு கிடைத்துள்ளது.
இது குறித்து மாணவி அக்ஷயா கூறியதாவது:-
எனது பெற்றோர்யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு உலகம் “சாஸ்” குழந்தைகள் கிராமம்தான். அங்குதான் வளர்ந்து ஆளானேன். 9 வயதில் மற்ற குழந்தைகளுடன் ஜெயலலிதா அம்மாவை பார்த்தஞாபகம் உள்ளது. எனது அம்மா, அப்பாவை பற்றி நினைப்பதே இல்லை. எனக்கு வளர்த்த ரஜினி தான் எனக்கு அம்மா. நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். என்ஜினீயரிங் படித்து முடிந்து எல்லோரும் வருகிற மாதிரி நல்ல இடத்திற்கு வருவேன்.
இவ்வாறு அக்ஷயா கூறினார்.
தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நம்பி வரதராஜன் கூறுகையில், இந்திரகுமாரி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த போது அக்ஷயாவுடன் மற்ற குழந்தை களையும் ஒப்படைத்தார்.
இப்போது அக்ஷயா பெரிய பெண் ஆகிவிட்டாள். இது பெண்களுக்கு பெருமையாக இருக்கிறது. இங்கு 14 வீடுகளில் 148 குழந்தைகள் படித்து வருகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment