
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மேட்ச் பிக்சிங்கில் (சூதாட்டம்) ஈடுபட்டதால் இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டது. அவர்தற்போது காங்கிரசில் சேர்ந்து எம்.பி. ஆகிஇருக்கிறார்.
அசாருதீன் தனது முதல்- மனைவி நஸ்ரினை விவாகரத்து செய்து விட்டு சங்கீதா பிஜ்லானியை 2-வதாக திருமணம் செய்து இருந்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்ததிருமணம் நடந்தது.
இதற்கிடையே அசாருதீனுக்கும், பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக சங்கீதா பிஜ்லானியை அசாருதீன் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்தனர்.
இந்த நிலையில் ஜூவாலா தனது கணவரும் உலகின் 13-ம் நிலை பேட்மின்டன் வீரருமான சேட்டன் ஆனந்திடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை ஜூவாலா உறுதி செய்துள்ளார். இதன் மூலம் அவர் அசாருதீனை திருமணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கூறும் போது நான் விவாகரத்து கேட்டு மனு செய்து இருப்பது உண்மைதான். இதற்கு அசாருதீனுடன் உள்ள தொடர்புதான் என்று கூறப்படுகிறது வதந்தியே. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றார்.
No comments:
Post a Comment