Wednesday, August 4, 2010

நெட்டுக்கு அடிமையாகும் டீன்-ஏஜ்

மெல்போர்ன் : டீன்-ஏஜ் வயதினர் நெட்டை தொடர்ந்து பயன்படுத்தி, அதற்கு அடிமையாகும் நிலைக்கு மாறிவருகின்றனர். அவ்வாறு அடிமையாகும் நிலைக்கு மாறுபவர்களுக்கு, இரண்டு மடங்கு மனநிலை சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு முந்தைய ஆய்வுகளில், மணிக்கணக்கில் ஆன்லைனில் இருப்பதால், அவர்கள் வேறு வேலைகளில் ஈடுபடமுடியாத நிலை ஏற்படும் என கூறியிருந்தன. ஆனால் தற்போது, வெப் தொடர்ந்து பயன்படுத்துவதனால், மனஅழுத்தம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விடலை பருவத்திற்கான சீன பத்திரிக்கை ஒன்று, சராசரியாக 15வயதுடைய 1000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில், பெரும்பாலானவர்கள் மன உளைச்லுக்கு ஆளாகி இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. அவர்களிடம் மேற்கொண்ட கேள்வியில், ஆன்லைன் உபயோகிப்பதற்கு முன் இருந்த மன நிலையும், ஆன்லைன் உபயோகித்தபின் இருந்த மனநிலையும் குறித்த கேள்வியும் அடங்கியிருந்தது. 9மாத ஆய்விற்கு பிறகு, சோதனை செய்ததில் 1000க்கு 87 பேர் மன தொய்வு அல்லது மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர். சாதாரணமானவர்களை விட இன்டெர்நெட் பயன்படுத்தியவர்கள் இரண்டரை முறை அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். இந்த ஆய்வை, ஆஸி., சிட்னியில் உள்ள லாரன்ஸ் லாம் மருத்துவ கல்லூரி, சி-வென் பெங்க் கல்வி அமைச்சகம் மற்றும் சீனாவின் சன் யாட்-சென் பல்கலை., இணைந்து நடத்தியது. ஆய்வின் முடிவில், இளம் வயதினர் தொடர்ந்து இன்டர்நெட்டை பயன்படுத்துவதனால், மனஉளைச்சல், மற்றும் மனநலன்களில் பிரச்னைகள் ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளது.

No comments: