
இதுதொடர்பாக இந்த ஆண்டின் 7 மாதங்களில் 60 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இரு 79 ஆக இருந்தது. கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இதுவரை 241 குழந்தைகள் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதுதொடர்பாக, மலேசிய அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ÔÔஇந்த பிரச்னையை தவிர்ப்பதற்காக, அனாதை குழந்தைகள் நலத் திட்டம் உட்பட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனினும், குழந்தைகள் புறக்கணிப்பு தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ஆனால், இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கொலை மற்றும் கொலைமுயற்சி பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக தூக்கு தண்டனை வரை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதுÕÕ என மலேசிய பெண்கள் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஷரிஸத் அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார்.
பச்சிளங்குழந்தைகளை புறக்கணிப்பதில், திருமணம் செய்து கொள்ளாமல் சட்டவிரோதமாக தொடர்பு வைத்திருக்கும் தம்பதிகளுக்கு முக்கிய பங்கு இருப்பதாக ஜலில் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment