ஆண்கள் இனம் முழுவதும் அழிவதற்கான அபாயம், இன்னும் 30 கோடி ஆண்டுகளில் ஏற்படாது' என்று, புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் இணையும் போது தான், கருவில் ஆண் குழந்தை உருவாகிறது. ஆனால், ஒய் குரோமோசோம்களில், ஏராளமான மரபணுக்கள் அழிந்து வருவதால், ஒய் குரோமோசோம்களே முற்றிலும் அழியும் நிலை உருவாகலாம். அப்படிப்பட்ட நிலையில், ஆண் இனமே உலகில் அழிந்து விடும் என்று, இதுவரை நடந்து வந்த பல்வேறு ஆய்வுகளில் கூறப்பட்டது. அடுத்த 1.25 லட்சம் ஆண்டுகள் முதல், ஒரு கோடி ஆண்டுகளுக்குள் ஆண்கள் இனம் முழுவதும் அழிந்துவிடும் என்று, அந்த ஆய்வுகளில் தெரியவந்தது.
ஒய் குரோமோசோம்கள் : ஆனால், தற்போது, ஒய் குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் முழுவதும் அழியும் அபாயம் 30 கோடி ஆண்டுகளில் ஏற்படாது என்று, புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின், சான் டியாகோ பல்கலைகக்கழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி டோரிஸ் பச்டிரோக் இந்த ஆய்வு அறிக்கையை, ஐதராபாத்தில் நடந்த மனித மரபணு அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்துள்ளார்.எக்ஸ் மற்றும் ஒய் ஜோடி குரோமோசோம்கள், 30 கோடி ஆண்டுகளில் இருந்து 15 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, ஒய் குரோமோசோம்களில், ஆயிரத்துக்கு மேற்பட்ட மரபணுக்கள் இருந்தன. ஆனால், தற்போது, 30 முதல் 50 மரபணுக்கள் மட்டுமே ஒய் குரோமோசோம்கள் உள்ளன.
மரபணுக்கள் அழிவது : இதன் அடிப்படையில் தான், ஒய் குரோமோசோம்களின் மரபணுக்கள் முழுவதும் அழிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கணித்தனர். அப்படிப்பட்ட நிலையில், ஒய் குரோமோசோம் களே இல்லாத நிலை ஏற்பட்டு, ஆண்கள் இனமே அழிந்து விடும் என்பது இறுதி கணிப்பு.ஆனால், ஒய் குரோமோசோம் கள் உருவான முதல் ஐந்து கோடி ஆண்டுகளில் தான், பெரும்பாலான மரபணுக்கள் அழிந்ததாகவும், அதன் பிறகு, மரபணுக்கள் அழிவது பெரிதும் குறைந்து விட்டதாகவும், டோரிஸ் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.மரபணுக்கள் அழிவது பெரிதும் குறைந்து இருப்பதால், இன்னும் 30 கோடி ஆண்டுக்கு பிறகும் கூட, ஒய் குரோமோசோம்களில் குறைந்தபட்சம் 20 மரபணுக்கள் இருக்கும் என்கிறது, டோரிசின் ஆய்வறிக்கை.
ஒருவேளை, மரபணுக்கள் அனைத்தும் அழிந்து, ஒய் குரோமோசோம்கள் இல்லாத நிலை ஏற்பட்டாலும் கூட, ஆண் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவரது ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி பிறக்கும் ஆண்கள், வழக்கமான ஆண்களாகவே இருப்பார்கள்; அவர்களிடம் ஒய் குரோமோசோம்களுக்கு பதிலாக, வேறு வகை குரோசோம்கள் உருவாகி விடும் என்றும், டோரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment