பெரிய பட்டியல் தான் போட வேண்டும்
கருணாநிதி
அம்மா
ஸ்டாலின்
ராமதாஸ்
விஜய் காந்த்
அழகிரி
கார்த்திக்
சரத்குமார்
காங்கிரஸ் (ஒரு பத்து கோஸ்டி தலைவர்கள் இருக்கிரர்கள் காமராஜர் அட்சி கொடுபதற்கு)
இப்போது ரஜினி காந்த் அவர்களும் இந்த சங்கத்தில் சேர்ந்திருக்கிறார்
இப்படி பட்டியல் நீண்டு கொண்ட .....
புது செய்தி :
கோவை:
தமிழகத்தை, 2011ல் ஆளப்போகும் "முதல்வர்கள்' பட்டியலில் நடிகர் ரஜினிகாந்தும் இடம்பிடிக்கப் போகிறார். கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில், நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.மத்தியிலும், மாநிலத்திலும் இனி கூட்டணி ஆட்சிதான் என்றாகிவிட்ட நிலையில், எந்தக் கட்சி, யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது விரைவில் தெரிந்து விடும். அடுத்த வாரம் தேர்தல் என்பது போல் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ., உள்ளிட்ட சில கட்சிகள், இப்போதே சுவர் "புக்கிங்' உள்ளிட்ட தேர்தல் பணிகளில் இறங்கி விட்டன.
ஒவ்வொரு தேர்தலிலும் பிற கட்சிகளுக்காக "வாய்ஸ்' மட்டுமே கொடுத்து வந்த ரஜினி, இந்த முறை தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக
வாய் திறக்கப் போகிறார் என, பரவலான பேச்சு அடிபடுகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், தனது ரசிகர்களை சந்திக்கப் போவதாகவும், அப்போது, தான் எடுக்கப் போகும் அரசியல் அவதாரம் குறித்த அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் கூறப்பட்டது. குசேலன் பட சர்ச்சையில், தலைவர் சந்தித்த அவமானத்தால் நொந்து போயிருந்த தொண்டர்கள், இந்த அறிவிப்பால் சுறுசுறுப்பாகி உள்ளனர். "அக்டோபரில் ஆலோசனை... 2011ல் அரியணை' என்ற வாசகங்களுடன் கோவை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள ரஜினி போஸ்டர், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் பிரபல நடிகர் சிரஞ்சீவி துவங்கியுள்ள "பிரஜா ராஜ்யம்' கட்சியையும் இணைத்து, "ஆந்திராவில் பிரஜா ராஜ்யம்... தமிழ்நாட்டில் ரஜினி ராஜ்யம்' என ரஜினி, சிரஞ்சீவி படங்களுடன் இந்த போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன. கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் மன்றம் சார்பில், போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளதால், இந்த முறை ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகி விட்டதாகவே ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால், கட்சி துவக்கம் குறித்த அறிவிப்பு வருவதற்குள், "2011ல் முதல்வர்' எனும் வாசகம் தான் வழக்கம்போல் நகைப்பை ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment