
மான்டெரி: உலகிலேயே மிக அதிக எடையுடைய மனிதர் என்ற பெருமையைப் பெற்ற மெக்சிகோ நபர், விரைவில் தனது காதலியைத் கரம் பிடிக்கவுள்ளார். மெக்சிகோவைச் சேர்ந்தவர் மானுவல் உரிப். கடந்த 2006ல் இவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத் தகத்தில் இடம் பெற்றது.குண்டான உடல் அமைப்பு தான், அவருக்கு இந்த பெருமையைப் பெற்றுத் தந்தது. 2006ல் அவரது மொத்த எடை எவ்வளவு தெரியுமா? 560 கிலோ.இவரால் நடக்க முடியாது. இவருக்காக ஸ்பெஷலாக ஒரு படுக்கை தயார் செய்யப்பட்டது. அதில் தான், இவர் எப்போதும் அமர்ந்து அல்லது படுத்திருக்க வேண்டும். எங்காவது வெளியில் போக வேண்டுமானால், கிரேன் உதவியுடன் படுக்கையை வெளியே தூக்கிக் கொண்டு போக வேண் டும்.
சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடு : மானுவலுக்கு தற்போது 42 வயதாகிறது. நீண்ட நாளா கவே இவருக்கு ஒரு கவலை இருந்து வந்தது. இன்னும் தனக்கு திருமணமாகவில்லையே என்பது தான் அந்த கவலை.தற்போது அந்த கவலையும் நீங்கி விட்டது. நீண்ட நாளாக காதலித்து வந்த கிளாடியா சோலிஸ் என்ற விதவைப் பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். கிளாடியாவும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட் டார்.
இதுபற்றி மானுவல் கூறுகையில், "திருமணத்தன்று அனைவரும் வகை வகையான உணவுகளை சாப்பிடுவர். ஆனால், நான் அப்படி சாப்பிட முடியாது. என் அன்பு காதலியின் ஆலோசனைப் படி, தற்போது உணவு சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறேன் என்றார்.
No comments:
Post a Comment