Saturday, October 4, 2008

ரசிகர்களுக்கு 'பெப்பே' காட்டப்போகிறார் ரஜினி? ரணகளமாகும் அகில இந்திய தலைமை மன்றம்


அக்டோபர் முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகிகளையும், ரசிகர்களையும் ரஜினிகாந்த் சந்திக் காமல், "எந்திரன்' படப்பிடிப்பிற்காக நேற்று (4ம் தேதி) திடீரென கோவாவிற்கு கிளம்பிவிட்டார். "எங்களை தலைவர் சந்திக்காததற்குக் காரணம், எங்களது உண்மையான உணர்வுகளை, மாநிலத் தலைவர் சத்யநாராயணா எடுத்துச் சொல்லாதது தான்' என ரஜினி ரசிகர்கள் குமுறுகின்றனர். அதனால், அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் ரணகளப்படுகிறது. கடந்த மாதம் 3ம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், "ரஜினியை சந்தித்தே ஆகவேண்டும்' என்ற தீர்மானத்தோடு ஒன்று கூடினர்.

"தலைவரைச் சந்திக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம்' என்று தர்ணா நடத்தினர். அவர்களிடம் அமெரிக்காவில் இருந்த ரஜினிகாந்த், அக்டோபர் முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்திப்பதாக மொபைல் போனில் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். கோவை மாவட்டத்தில், இவற்றுகெல்லாம் ஒரு படி மேலே போய், அக்டோபரில் ஆலோசனை; 2011ல் அரியணை போன்ற "அரசியல் நெடியுடன்' கூடிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே, கடந்த 27ம் தேதி அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். ஆனால், அக்டோபர் முதல் வாரத்தில் எந்த நாளில் ரசிகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கவில்லை. இந்நிலையில், "எந்திரன்' படப்பிடிப்பிற்காக நேற்று (4ம் தேதி) திடீரென கோவா கிளம்பிச் சென்றார். அங்கிருந்து 12ம் தேதி அல்லது 15ம் தேதி சென்னை திரும்புவார். 16 அல்லது 17ம் தேதிகளில் கண்டிப்பாக ரசிகர்களை சந்திப்பார் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு, மாநிலத் தலைமை மன்றம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, "ரஜினி ரசிகர்களை சந்திக்காததற்கு காரணம் மாநிலத் தலைவர் சத்யநாராயணா தான். அவர் தான் எங்களது உணர்வுகளை தலைவரிடம் சரிவர எடுத்துச் சொல்லவில்லை. ரஜினியை சந்திக்கவிடாமல் அவர்தான் எங்களை தடுக்கிறார். ரஜினி எப்போது வருவார்; போவார் என்ற அடிப்படை தகவல்களை கூட, நாங்கள் கேட்டால், தெரிவிப்பதில்லை. ரஜினி சென்னைக்கு வரும் தேதியை கூட உருப்படியாக சொல்லவில்லை. இவர் இருக்கும்வரை நாங்கள் ரஜினியை சந்திப் பது குதிரை கொம்புதான்' என கொதிக் கின்றனர் சில மாவட்ட நிர்வாகிகள். சத்யநாராயணாவிற்கு நெருக்கமான நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:

"ரஜினி எங்கு செல்கிறார்; எப்போது வருகிறார் என்பது குறித்து சத்யநாராயணாவுக்கே தெரிவிக்கப்படுவதில்லை. அப்புறம் எப்படி ரசிகர்களுக்கு தெரிவிக்க முடியும்? ரசிகர்களுக்கும் ரஜினிக்கும் இடையில், இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறார் சத்யநாராயணா.ரசிகர்களை ரஜினி சந்தித்த பிறகு, சத்யநாராயணா மீதுள்ள அனைத்து கறைகளும் நீங்கும். உண்மை என்னவென்று விரைவில் ரசிகர்களும், மாவட்ட நிர்வாகிகளும் அறிந்துகொள்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

Unknown said...

ரசிகர் மன்ற தலைவர் பாவம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.
ரஜினி அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்?
மின் பிரச்சனை தீரப் போகிறதா?
ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப் போகிறாரா? இல்லை
நாம் உழைக்காமல் வாழப் போகிறோமா?ந்ன்ர்

IlayaDhasan said...

ரஜினி ரசிக மக்களே , அவர் படம் வந்தால் , நன்றாக ரசியுங்கள், பாராட்டுங்கள் ..மற்றபடி இந்த மாதிரி அவர் பின்னால் திரிவதை நிறுத்திவிட்டு அவர் எப்படி அவர் வேலையில் கண்ணும் 'கருத்துமாக' இருக்கிறாரோ அதை போல் உங்கள் வேலை எதுவோ அதை பார்த்து விட்டு போவமே !