
நியுயார்க் : இந்தியா தான் எக்கசக்க கடனில் இருக்கிறது என்று சொன்னதெல்லாம் அந்த காலம். இப்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவுக்கே எக்கச்சக்கமான கடன் இருக்கிறது. அமெரிக்கா எவ்வளவு கடனில் இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, நியுயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் ஒரு எலக்ட்ரானிக் போர்டை வைத்திருக்கிறார்கள். அதற்கு நேஷனல் டெபிட் கிளாக் என்று பெயர். அந்த போர்டில் 9.99 லட்சம் கோடி ( அதாவது 10 டிரில்லியனுக்கும் குறைவாக ) ( ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ) வரை மட்டுமே குறிக்க முடியும். அதாவது மொத்தம் 13 டிஜிட் மட்டுமே குறிக்க முடியும். கடன் 10 டிரில்லியன் டாலராகி விட்டால் அதில் குறிக்க முடியாது. ஏனென்றால் அதற்கு மேல் கடன் உயராது என்று அப்போது எண்ணியதால் அவ்வாறு வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கடந்த மாதத்தில் ( செப்டம்பர் ) அமெரிக்காவின் கடன் 10 டிரில்லியனையும் தாண்டிவிட்டது. எனவே அந்த கடன் கிளாக் கில் அதை குறிக்க முடியவில்லை. கிளாக்கில் அடங்க முடியாத அளவுக்கு அங்கு கடன் அதிகமாகி விட்டது. எனவே அந்த போர்டை ( நேஷனல் டெபிட் கிளாக் ) வைத்தவர்கள் அதில் இன்னும் டிஜிட்டை கூட்ட இருக்கிறார்கள். இந்த நேஷனல் டெபிட் கிளாக் 1989 ல் முதன் முதலில் அங்கு வைக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் கடன் 2.7 டிரில்லியன் டாலராக இருந்தது. 10 டிரில்லியனுக்கும் குறைவாக மட்டுமே குறிக்க கூடிய வகையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கிளாக் இனிமேல் ஒரு குவாடிரில்லியன் ( அதாவது 10 கோடி, கோடி ) வரை குறிக்ககூடியதாக மாற்றப்படுகிறது.
இந்த கடன் கிளாக்தை உருவாக்கிய, காலஞ்சென்ற சேமோர் டர்ஸ்ட் என்பவரின் மகன் டக்ளஸ் டர்ஸ்ட் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இப்போது தற்காலிகமாக அதில் சில டிஜிட்கள் கூட்டப்பட்டுள்ளது. அதில் இப்போதைய அமெரிக்க கடன் 10.15 டிரில்லியன் டாலர் என்று காண்பிக்கிறது. ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் 86,017 டாலர் கடன்பட்டிருப்பதாக அந்த போட்டு சொல்கிறது. சமீபத்தில் அதிபர் புஷ் கொண்டு வந்த 700 பில்லியன் டாலர் கடனுதவி திட்டத்தால், அமெரிக்காவின் கடன் 11 டிரில்லியன் டாலரை நெருங்கி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
2 comments:
me the first
useful Info(!!!!!)
தவறு. முன்பும் அதிக கடங்காரங்க அவங்கள் தான். இப்ப கணக்கு கூடீற்றுது.அவ்வளவு தான்.
Post a Comment