துபாய் : * துபாயில் அமைக்கப் பட்ட செயற்கை தீவில், "இந்திர லோகம்' போல ஜொலிக்கும் ரிசார்ட்டின் திறப்பு விழாவின் இரவு விருந்து செலவு 160 கோடி ரூபாய்.* சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் கண்ணாடி அறையின் ஒரு நாள் கட்டணம் மட்டும் 20 லட்சம் ரூபாய்.* விருந்தில் வாண வேடிக்கைக்கு மட்டும் செலவு 56 கோடி ரூபாய்; முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்களால் 700 இடங்களில் இருந்து நடத்தப்பட்டன.
அமெரிக்காவில் நிதி நெருக்கடி, நிறுவனங்கள் மூடல், ஆயிரக்கணக்கில் ஆட் குறைப்பு என்று அதிரடியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இங்கு பார்த்தால், தலைகீழாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.உண்மை தான்; ஆனால் பாதிப்பு, உலக கோடீஸ்வரர்களுக்கு இல்லையே. அவர்களுக்காக அமைக்கப்பட்டது தான் இந்த செயற்கை தீவு ரிசார்ட் வளாகம்.துபாயில் செயற்கை தீவு அமைக்கப்பட்டு, அதில் அமைக்கப்பட்டுள்ளது தான், அட்லாண்டிஸ் பாம் ஜுமைரா ரிசார்ட் வளாகம். இதை கட்டி முடிக்க ஆன செலவு 8,000 கோடி ரூபாய்.
பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட இந்த தீவு, பனைமரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள், சர்வதேச கோடீஸ்வரர்கள், தாங்கள் பொழுதை போக் குவதற்காக வந்து தங்க ரிசார்ட்டில் தனி பங்களாக் களை வாங்கியுள்ளனர்.இந்த ரிசார்ட்டில் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கலாம். ஆனால், அறை வாடகை லட்சக்கணக்கில் இருக்கும். குறைந்தபட்ச கட்டணமே ஒரு இரவுக்கு எட்டு லட்சம் ரூபாய்; அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய். இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. உலகம் முழுக்க உள்ள கோடீஸ்வரர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான், யாஷ் சோப்ரா, நடிகைகள் பிரியங்கா சோப்ரா, மல்லிகா ஷெராவத், ராணி முகர்ஜி உட்பட சிலர் கலந்து கொண்டனர்.திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக, அமெரிக்க "டிவி'யில் ரியாலிட்டி �ஷா நடத்தி பிரபலமான ஓபரா வின்ப்ரே அழைக்கப்பட்டிருந்தார். வளைகுடா நாடுகளில் உள்ள பெண்களிடையே அவர் பிரபலமானவர் என்பதால் அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால், அவர் கடைசி நேரத்தில் வரவில்லை. அதனால், அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த கண்ணாடி சொகுசு அறை, ஷாருக்கானுக்கு ஒதுக்கப்பட்டது. ரிசார்ட்டில் பங்களா வாங்கியிருந்த அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டார்.ரிசார்ட் ஓட்டல் கட்டடத்தில் இரு கோபுரங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி அறை அவருக்கு ஒதுக்கப் பட்டது. சுவர்கள், தரை, மேற்கூரை எல்லாம் விலை உயர்ந்த கண்ணாடிகளால் அமைக்கப்பட்டது. அங்கிருந்து துபாய் முழுவதும் பார்க்கலாம். இதன் ஒரு நாள் வாடகை 20 லட்சம் ரூபாய்.
கோடீஸ்வரர்கள் வந்திறங்க விமான செலவு மட்டும் 24 கோடி ரூபாய் செலவானது. ஹாலிவுட்டில் இருந்து நடிகர்கள் ராபர்ட் டீ நீரோ, சார்லிஸ் தெரோன், டென்சில் வாஷிங்டன், இசையமைப்பாளர்கள் ஜானட் ஜாக்சன், ஷிர்லி பாசி மற்றும் விளையாட்டு சேம் பியன்கள் மைக்கேல் ஜோர் டன், போரிஸ் பெக்கர் உட்பட பல கோடீஸ்வரர்கள் பங்கேற்றனர்.நள்ளிரவு 12 மணி ஒலித்ததும், கம்ப்யூட்டர்கள் மூலம் வாண வேடிக்கைகள் நடத் தப்பட்டன. தீவைச்சுற்றி 700 இடங்களில் இருந்து வண்ண வண்ண ராக் கெட்கள், கம்ப்யூட்டர்கள் மூலம் இயக்கப்பட்டு, இரவில் இந்திரலோகம் போல தீவு ஜொலித்தது. இதற்கு மட்டும் 65 கோடி ரூபாய் செலவானது.
பீஜிங் ஒலிம்பிக்கை விட, பல மடங்கு பிரமாண்டமானது.இரண்டு டன் கடல் நண்டுகள், 4,000 "ஆயிஸ்டர்' உணவுச்சிப்பி, 3,000 கிலோ வஞ்சிர மீன் ஆகியவற்றை கொண்டு உலக மெகா விருந்து அளிக் கப்பட்டது. 1,000 பாட்டில் மிக விலை உயர்ந்த ஷாம் பைன் ஆறாய் ஓடியது. விருந்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான உலக மகா கோடீஸ்வரர்களுக்கு , உணவு வகைகளை சமைக்க 500 சமையல் கலைஞர்கள் , ஆயிரம் வெயிட்டர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். பல நாடுகளின் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டன. 100 சதவீதம் அசைவம் தான்.ரிசார்ட்டில், நீச்சல் குளங்கள், பல வகை மதுக்கூடங்கள், கேளிக்கை பிரிவுகள், உடற்பயிற்சி தளங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விலை உயர்ந்த சிலைகள், விளக்குகள் அமைக்கப் பட்டுள் ளன. சாமானிய மக்களால், "டிவி'யில் தான் பார்க்க முடியும்.நிதி நெருக்கடி உள்ள நிலையில், இப்படிப்பட்ட விருந்து தேவை தானா என்று சர்ச்சை கிளம்பாமல் இல்லை. இந்த ரிசார்ட் வளாகத்தை அமைத்த கெர்ஸ்னர் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் கெர்ஸ்னர் கூறுகையில், "உண்மை தான். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் நான் இதை கட்டவில்லை. உலகில் துபாய், சுற்றுலா இடத்தில் முக்கிய இடத்தை பெற வேண்டும் என்று நினைத்து கட்டினேன்' என்று தெரிவித்தார்.துபாய், ஐக்கிய அரபு குடியரசில் உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Sunday, November 30, 2008
இரவு விருந்து செலவு ரூ.160 கோடி; ஷாருக் அறை வாடகை 20 லட்சம் *துபாய் செயற்கை தீவில் ரூ. 8,000 கோடி ரிசார்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment