வாஷிங்டன்: சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக, சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு பெருத்த அடி விழுந்த நிலையில், கால் சென்டர்களுக்கு தொடர்ந்து அடிமேல் அடி விழும் என்று அஞ்சப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா உட்பட வெளிநாடுகளில் அமைத்துள்ள கால்சென்டர்களை மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப கொண்டு போக ஆரம்பித்து விட்டன. அமெரிக்காவில் உள்ள மொபைல் போன், வங்கி கணக்கு, இன்சூரன்ஸ் பாலிசி வாடிக்கையாளர்கள், தங்களுக்கு உள்ள சந்தேகங்கள், கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் "கால் சென்டர்' போன் நம்பரை சுழற்றலாம். ஆனால், அவர்களுடன் பேசும் கால் சென்டர் ஊழியர், இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவார். இப்படி, அமெரிக்க நிறுவனங்களுக்காக, இந்தியாவில் பல இடங்களில் "கால் சென்டர்' கள் அமைக்கப்பட்டன.
அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிப்பது தான் இந்த கால் சென்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணி. அமெரிக்காவை பொறுத்தவரை, அங்கு பகல் என்றால், இந்தியாவில் இரவு நேரம். அதனால், பெரும்பாலான கால் சென்டர்கள், இரவில் தான் சுறுசுறுப்பாக பணியாற்றும். இந்தியாவில் கால் சென்டர்களை அமெரிக்க நிறுவனங்கள் அமைக்க காரணம், செலவு 50 முதல் 75 சதவீதம் வரை மிச்சமாகிறது என்பதால் தான். ஆனால், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு, இந்திய கால் சென்டர் ஊழியர்கள் பலரும் பேசுவதில் திருப்தியில்லை; அதுபோல, நிதி நெருக்கடியும் அமெரிக்க நிறுவனங்களை படுத்துவதால், மீண்டும் பழைய நிலைக்கே போக சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அமெரிக்காவில் தலைமையகத்தை கொண்ட டெல் நிறுவனம், இந்தியாவில் உள்ள பெங்களூரு, பிலிப்பைன்சில் உள்ள மணிலா மற்றும் பல நாடுகளில் அமைத்துள்ள கால் சென்டர்களை மூடி விட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கே மாற்ற திட்டமிட்டு அதற்கான வேலையையும் ஆரம்பித்து விட்டது.
கம்ப்யூட்டர் நிறுவனமான இதில், நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்க வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டதுடன், இந்திய கால் சென்டர்களில் இருந்து பதில் பெறுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது டெல். அமெரிக்கரின் உதவி தேவையா, அப்படியானால், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தும், அமெரிக்கர் பலரும் அதை பொருட்படுத்தாமல், அமெரிக்க கால் சென்டர்களின் உதவியை பெறவே விரும்புகின்றனர். டெல் நிறுவனத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் பழம் பெரும் மொபைல் நிறுவனம் "ஜிட்டர்பர்க்'கும் தன் வெளிநாட்டு கால் சென்டர்களை மூடி வருகிறது.

No comments:
Post a Comment