திருவனந்தபுரம் : சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் எக்கச்சக்க சம்பள கனவு மங்கி வருவதால், "ஐ.டி.,' மாப்பிள்ளை வேண்டாம் என்று, அந்த துறையில் பணியாற்றும் பெண்களே மறுக்கும் நிலை அதிகரித்து வருகிறது. கேரளாவில் சமீப காலமாக, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் மாப்பிள்ளைகள் என்றால், அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது.
பெண்ணை பெற்ற பல பெற்றோரும், ஐ.டி.,மாப்பிள்ளை வந்தால் தங்கள் பெண் நிம்மதியாக இருப்பாள்; சந்தோஷமாக,வசதியாக வாழ்வாள் என்று எண்ணியிருந்தனர். ஆனால், அவர்கள் கனவு மங்கி வருகிறது. ஐ.டி.,மாப்பிள்ளை என்றாலே பலரும் பயப்படுகின்றனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த பலரும் இப்போது ஐ.டி.,மாப்பிள்ளை என்றால் அவர்களுக்கு பெண் கொடுக்க தயங்குகின்றனர். சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒருவருக்கு பெண்ணை தருவதை விட, விவசாயம் பார்க்கும் யாருக்காவது தரலாம் என்று பழைய எண்ணத்துக்கு தூசி தட்டவும் ஆரம்பித்துள்ளனர் சிலர். கேரளாவில் 150 சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன; ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. 25 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இந்த நிறுவனங்களில், ஊழியர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைத்தும் வந்தது. ஆனால், சமீப காலமாக அவர்களுக்கு சம்பள உயர்வும் குறைவு; வேலையில் நீடிக்கும் நிலையும் நிச்சயமில்லாமல் இருக்கிறது. முன்னணி நிறுவனங்களை தவிர, நடுத்தர, சிறிய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் அளவாவது நீக்கி விட்டன. இன்னும் சிலரை நீக்கும் முடிவில் தீவிரமாக உள்ளன. நிறுவன வருவாயில் அடி விழுந்தது தான் இதற்கு காரணம். அதிலும் சில நிறுவனங்களில், ஊழியர்களிடம் இருந்து அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொள்ளும் போதே, அவர்களுக்கு தாங்கள் நீக்கப்படுவோம் என்று தெரிந்துவிடுகிறது. அதனால், பல நடுத்தர நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் பீதியுடன் வேலையில் நீடிக்கும் நிலை உள்ளது.

No comments:
Post a Comment