ஹெலினா தீவு: அட்லாண்டிக் கடலின் தென்பகுதியில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில், உலகிலேயே மிக வயதான 176 வயது ஆமை உயிர் வாழ்கிறது. கடந்த 1899 மற்றும் 1902ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பிரிட்டிஷ் அரசுக்கும் போயர் என்ற சிறிய குடியரசுக்கும் இடையே சண்டை நடந்தது. இந்தச் சண்டை "போயர் வார்' என அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் காவலர் ஒருவராலும், கைதி ஒருவராலும் இந்த ஆமை, செஷல்ஸ் தீவிலிருந்து பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஹெலினா தீவிற்கு கொண்டு வரப்பட்டது. ஜோனாதன் என, அழைக்கப்படும் இந்த ஆமைக்கு அப்போது வயது 50. ஹெலினா தீவில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில், டேவிட், ஸ்பீடி, எம்மா, பிரட்ரிக்கா மற்றும் மைர்டில் என்ற வேறு ஐந்து ஆமைகளுடன் வசிக்கிறது. வயதாகி விட்டாலும், ஜோனாதன் ஆமை, பெண் ஆமைகளுடன் உறவு கொள்கிறது.
குறிப்பாக இளம் வயதுள்ள மூன்று பெண் ஆமைகளுடன் கூடிப் பழகுகிறது என, ஹெலினா தீவின் சுற்றுலா வாரிய தகவல் தொடர்பாளர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த 1882ம் ஆண்டில், ஜோனாதன் உட்பட மூன்று ஆமைகள் ஹெலினா தீவிற்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஜோனாதன் மட்டுமே உயிர் வாழ்கிறது. செயின்ட் ஹெலினா தீவு அரசு, இந்த ஆமையை பராமரித்து வருகிறது. 50 வயதாக இருக்கும் போது கொண்டு வரப்பட்ட ஜோனாதனுக்கு தற்போது வயது 176. உலகிலேயே மிக வயதான ஆமை இதுதான். ஹெலினா தீவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னும், நீண்ட நாட்கள் இந்த ஆமைக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. 1930ம் ஆண்டுதான், அப்போதிருந்த கவர்னர் சர் ஸ்பென்சர் டேவிஸ் இதற்கு பெயர் வைத்தார். வயதாகி விட்டாலும், இந்த ஆமை இன்னும் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. ஆமைக்கு ஒரு கண்ணில் பார்வை பறி போய் விட்டாலும், மற்றொரு கண்ணுடன் அது சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு முன், மடகாஸ்கரில் இருந்த துய் மாலிலா என்ற ஆமைதான், உலகிலேயே மிக வயதான ஆமையாக நம்பப்பட்டது. அந்த ஆமை 1966ம் ஆண்டு தன் 189வது வயதில் இறந்தது. ஜோனாதன் ஆமை தன் வாழ்நாளில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் எட்டு மன்னர்களையும், 50 பிரதமர்களையும் பார்த்துள்ளது. ஜோனாதன் ஆமை உயிரோடு இருப்பதே, போயர் வார் தொடர்பான படங்களை இன்னஸ் என்பவர் சேகரித்த போதுதான் தெரியவந்தது.
இந்த ஆமையின் படமும் சமீபத்தில் கணிசமான தொகைக்கு ஏலம் போனது. அத்துடன் அது உயிருடன் இருப்பதும் தெரியவந்தது. அட்லாண்டிக் கடலின் தென்பகுதியில் தொலை தூரத்தில் உள்ளதுதான் ஹெலினா தீவு. நாடு கடத்தப்படுவோர்தான் இங்கு அடைக்கப்படுவர். இந்தத் தீவில் 4,200 பேர் வசிக்கின்றனர். மாவீரன் நெப்போலியன் 1815ல் நாடு கடத்தப்பட்டபோது, இங்குதான் வசித்தார். 1821ல் இறந்த போது, அவரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது

No comments:
Post a Comment