
பாக்தாத்: அமெரிக்க அதிபர் புஷ் மீது ஷூவை வீசிய, "டிவி' நிருபர், ஈராக் ராணுவத்திடம் ஒப்ப டைக்கப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஷூவை வீசியவருக்கு ஆதரவாக ஈராக்கில் பல இடங்களில் பேரணிகள் நடைபெற்றன. அவரை விடுவிக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்தனர். அமெரிக்க அதிபர் புஷ், நேற்று முன்தினம் ஈராக் சென்றிருந்தார். அங்கு பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அவர், ஈராக் பிரதமருடன் சேர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, முந்ததர் அல்- ஜெய்தி என்ற "டிவி' நிருபர் ஒருவர், அவர் மீது ஷூக்களை வீசினார். ஆனால், புஷ் தலையை குனிந்து கொண்டதால், காயமின்றி தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடன் ஷூவை வீசிய நபரை பாதுகாவலர்களும், மற்றவர்களும் மடக்கிப் பிடித்தனர். அவர் ஈராக் ராணுவத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அல்- ஜெய்தி மீது வெளிநாட்டுத் தலைவரை அவமதித்தது மற் றும் ஈராக் பிரதமரை அவமதித்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், புஷ் மீது ஷூவை வீசிய அல்- ஜெய்தி, ஒரு முறை பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாகவும், அதன் பின் அவரிடம் அமெரிக்க ராணு வத்தினர் விசாரணை நடத்தியதாகவும் அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தினால், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த, 28 வயதான அல்- ஜெய்தி, ஈராக்கில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக் கையையும், ஈராக் விவகாரத் தில் ஈரான் தலையிடுவதையும் வெறுத்து வந்துள்ளார். அதுவே புஷ் மீது ஷூவை வீச காரணமாம்.
இதற்கிடையில், அதிபர் புஷ் மீது ஷூவை வீசிய அல்-ஜெய்தி ஒரு தேசிய ஹீரோவாக மாறியுள்ளார். ஈராக்கில் ஆறு ஆண்டுகளாக நீடிக்கும் அமெரிக் காவின் ஆக்கிரமிப்பை வெறுக் கும் பலர், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். கைதான அல்- ஜெய்தியை விடுவிக்க வேண்டும் எனக்கோரி, நேற்று பாக்தாத்திலும் மற்ற நகரங்களிலும் பேரணிகள் நடைபெற்றன. முக்கிய நகரங்களில் உள்ள காபி கடைகள், வர்த்தக அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட அரபு நாடுகள் முழுவதிலும் நேற்று அல்-ஜெய்தியைப் பற்றிய பேச்சே அதிக அளவில் இருந்தது. அல்-ஜெய்தியின் தைரியத் தைப் பாராட்டி, அவருக்கு பதக் கம் வழங்கப் போவதாக அறிவித்துள்ள அறக்கட்டளை ஒன்று, அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள் ளது. இந்த அறக் கட்டளை லிபியா தலைவர் கடாபியின் மகளால் நடத்தப் படுகிறது. அல்- ஜெய்தி மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் படி பார்த்தால், அவருக்கு அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். கைகள், விலா எலும்புகள் சேதம்: அதிபர் புஷ் மீது ஷூவை வீசிய,"டிவி' நிருபர் அல்- ஜெய்தியின் கை மற்றும் விலா எலும்புகளை ஈராக் பாதுகாப்புப் படையினர் முறித்து விட்டனர் என, அவரின் சகோதரர் துர்காம்-ஜெய்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "எனது சகோதரரின் முகத்திலும், கைகளிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஈராக் ராணுவத்தினர் அவரை பிடித்து வைத்துள்ளனர்' என்றார். சகோதரி உம் பிராஸ் கூறுகையில், "கடவுள் மீது ஆணையிட் டுக் கூறுகிறேன். என் சகோதரனே ஹீரோ; கடவுள் அவனை காப்பாற்றுவார். வேண்டும் என்றே அல்-ஜெய்தி இதைச் செய்யவில்லை. ஏதோ வேகத் தில் செய்துள்ளான்' என்றார். புஷ் மீது ஷூவை வீசியதும், அல்- ஜெய்தியின் மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும், பாக்தாத்தில் உள்ள அவரின் வீட்டில் கூடினர். லத்தீன் அமெரிக்க புரட்சித் தலைவர் செ குவேராவின் போஸ்டரை ஒட்டி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அல்-ஜெய்தியின் செயலை பாராட்டிய அவர்கள், ஈராக் ராணுவத்தினரின் காவலில் அவர் துன்புறுத்தப்படலாம் என்றும் கவலை தெரிவித்தனர்.
2 comments:
http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_7844.html
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்"....
நீங்கள் கூறியது உண்மை
தங்கள் வருகைக்கு நன்றி
ஜோசப்
Post a Comment