வதோதரா: ரயில், விமான டிக்கெட் களை முன்பதிவு செய்ய இன்டர்நெட் மூலம் "எலக்ட் ரானிக் டிக்கெட்' என்று சொல்லப்படும் "இ-டிக்கெட்' வசதி உள்ளது; இதில் இப்போது புதிதாக அரங்கேறி உள்ளது எது தெரியுமா? "இ-கன்னிகா தானம்!' என்ன வியப்பாக இருக்கிறதா? பெண்ணை பெற்றவர், மருமகனிடம் மகளை, திருமணத்தின் போது தாரை வார்த்துத் தரும் வைபவம் தான் கன்னிகா தானம். "என் மகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; கண்கலங்காமல் வாழ வைக்க வேண்டும்' என்பது தான் அதன் நோக்கம்.
கடவுளை தரிசிப்பது, பூஜை செய்வது, வீட்டு சடங்குகள் செய்வது மட்டுமல்ல இப்போது, கன்னிகா தானம் தருவதும் கம்ப்யூட்டர் இன்டர்நெட் மூலம் செய்யலாம் என்ற வசதி அமலுக்கு வந்து விட்டது. அமெரிக்காவில் தொழிலதிபராக இருப்பவர் சந்திரவதன் சுதார்(48). நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்களுக்கு இடையே போட்டி போட்டு வர்த்தகம் செய்வதே பெரும் பாடு என்பதால், அவரால் தன் மகள் திருமணத்தை சொந்த மாநிலம் குஜராத்துக்கு வந்து நடத்த முடியவில்லை. அதற்கேற்ப, அவர் குடும்பத்து உறவினர், நண்பர்களும் அமெரிக்காவில் கணிசமான பேர் உள்ளனர். அவர்களும் திருமணத்துக்காக சில நாள் வந்து செல்வது பெரும் செலவாகும் என்று கவலைப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் முன் பெண்ணும், வதோதராவில் உள்ள வீட்டில், "லேப்-டாப்' முன் மாப்பிள்ளையும் சமீபத்தில் திருமண நாள் அன்று ஆஜராயினர். இரு தரப்பிலும் உறவினர், நண்பர்கள் வந்து விட்டனர். அமெரிக்காவில் உள்ள சந்திரவதன், தன் பெண் ஹமிக்சாவை, மாப்பிள்ளை அமித் வசானியிடம் கன்னிகாதானம் செய்து வைத்தார். அமெரிக்காவில் உள்ள வீட்டில் நடந்த வைபவம் எல்லாம் கம்ப்யூட்டர் இன்டர் நெட் வழியில், "இ-கான்பரன் சிங்' வசதி மூலம் ஒளிபரப்பானது.
வேதபண்டிதர், கன்னிகா தானம் தரும் மந்திரங்களை சொல்ல அதை சந்திரவதன் சொல்லி, இன்டர்நெட் வழியாகவே, மாப்பிள்ளைக்கு தன் பெண்ணை கன்னிகா தானம் செய்து வைத்தார். மற்ற சடங்குகளும் முடிந்து, கம்ப்யூட்டர் வழியாகவே, பெண்ணை தன் மனைவியாக ஏற்றுக் கொண் டார் மருமகன் அமித் வசானி. இரு பக்கமும் அவரவர் வீடுகளில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் பார்த்து, உறவினர்களும், நண்பர்களும் பூக்களை சொரிந்து வாழ்த்தினர். இந்த வைபவம் முடிந்ததும், வதோதராவில் உள்ள வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் அளித்த விருந்தை அவரின் உறவினர், நண்பர்கள் சாப்பிட்டனர். அதுபோல, நியூ ஜெர்சியில் பெண்ணின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment