Tuesday, December 30, 2008

எய்ட்ஸ் நோயாளிகள் நடத்தும் ஓட்டல்


மைசூரு:மைசூரில் எய்ட்ஸ் பாதிப்பிற்குள் ளான சிலர் ஒன்று சேர்ந்து "அசோதயா'என்ற ஓட்டலை நடத்தி வருகின்றனர். இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.எய்ட்ஸ் பாதிப்பிற்குள்ளானவர்களை, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் அவலம் நீடித்து வருகிறது. இதை தடுக்க, அரசு எத்தனை நடவடிக்கை மேற்கொண்டாலும், பொதுமக்களிடம் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை.
சமூகத்தின் இந்த தவறான மனப்பான்மையை உடைத்து நொறுக்கும் வகையில், மைசூ ரைச் சேர்ந்த சில எய்ட்ஸ் நோயாளிகள் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 12க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து "அசோதயா'என்ற ஓட்டலை துவக்கியுள்ளனர்.
இவர்கள் அனைவருமே எய்ட்ஸ் பாதிப்பிற்கு ஆளானவர்கள். மைசூரு அரண்மனைக்கு அருகில் இந்த ஓட்டல் உள்ளது. உலக வங்கி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது.ஆண்கள் சர்வர்களாக பணிபுரிந்து வருகின்றனர். பெண்கள் சமையல் வேலையையும், அக்கவுண்ட் பொறுப்பையும் கவனித்துக் கொள்கின்றனர். தினமும் 60க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். தினமும் 3,000 வருமானம் கிடைக்கிறது.
இதுபற்றி பிரகாஷ் என்பவர் கூறுகையில், "ஓட்டலை துவக்கியதும், வாடிக்கையாளர்கள் வரத் தயங்கினர். கொஞ்ச நாட்கள் ஆனதும் வாடிக்கையாளர்கள் வரத் துவங்கி விட்டனர். எங்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கிறது. அசோதயா சமிதி என்ற அமைப்பின் சார்பில் ஓட்டலை நடத்தி வருகிறோம்'என்றார்.


No comments: