Tuesday, December 30, 2008

அரவாணியை கரம் பிடித்தார் கூலித்தொழிலாளி


தூத்துக்குடி: திருச்செந்தூரில், கூலித் தொழிலாளி, அரவாணியை திருமணம் செய்து கொண்டார். "அரவாணிகளை குடும்பத்தினர், சமுதாயம் வெறுக்கக்கூடாது' என, அவர் வேண்டுகோள் விடுத்தார். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த சட்டநாதன் மகன் ஆகாஷ்(27). 10 ஆண்டாக, திருச்செந்தூரில் கட்டட வேலை, சமையல் வேலை செய்கிறார்.
இவருக்கும், கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அரவாணி நாகராணிக்கும்(35) பழக்கம் ஏற்பட்டது. திருச்செந்தூரில், ஒரே வீட்டில் வசித்து வந்த இரு வரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று முன்தினம், ஆகாஷ் - நாக ராணி திருமணம் அரவாணிகள் முன்னிலையில் நடந்தது.
ஆகாஷ் கூறும்போது, "அரவாணிகளும் மனிதர்கள்தான். அவர்களை, குடும்பத்தினரும், சமுதாயமும் வெறுக்கக் கூடாது. அதற்கு முன் மாதிரியாக, முழுமனதோடு நான் நாக ராணியை திருமணம் செய்து கொண்டேன். கடினமாக உழைத்து அவரை கண் கலங் காமல் காப்பாற்றுவேன்' என்றார். தங்களுக்கு அரசு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கவேண்டுமென புதுமணத்தம்பதியர் தெரிவித்தனர்.


No comments: