Tuesday, January 13, 2009

பாம்புகள் பால் குடிக்குமா...


பாம்புகள் பற்றிய பலவித கதைகளும் நம்பிக்கையும் உள்ளன. அதில் பால்குடிக்கும் என்பது அதில் ஒன்று. பாம்புக்கு நீர்அருந்தும் பழக்கம் உண்டு. மிகவும் தாகத்தில் இருக்கும் பாம்புகள் ஏதாவது ஒரு நேரத்தில் சிறிதளவு பாலை பருகலாம். ஆனால் இயற்கையில் அவை பால் அருந்துவது இல்லை.
* சாரை பாம்புகள் நாகப்பாம்புகளுடன் கூடும் என்பது தவறு. இரண்டும் வெவ்வேறு வகையை சேர்ந்தவை. அதனதன் இனத்துடனேயே கூடும்.* பச்சைபாம்பு, கண்கொத்தி பாம்புகள் கண்ணை கொத்தும் என்பது தவறு.* நாகப்பாம்பு அடிபட்டு சென்றாலோ, இறந்த பாம்பை எரித்தாலோ, ஆண்/பெண் ஒன்று மட்டும் இறந்தாலோ, அது உயிர் பெற்று வரும் என்பது தவறு. அதேசமயம் நல்லபாம்பு இனப்பெருக்க காலத்தில் ஒருவித வாசனை திரவத்தை சுரக்கிறது. இத்தகைய பாம்பு அடிபட்டு இறக்கும் இடத்தில் இத்திரவம் சிந்தியிருக்கும். இதன் வாசனையால் பிற பாம்புகள் அப்பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. * பல ஆண்டுகள் வாழ்ந்த பாம்புகள் இரவில் மாணிக்க கற்களை கற்கும் என்பதும் தவறு.* பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்து செதில்கள் மூலம் உணரும் தன்மை கொண்டது.* கொம்பேறி மூக்கன் கடித்தவர்கள் இறந்தால்,அவரை புதைக்கிறார்களா அல்லது எரிக்கிறார்களா என்பதை மரத்தில் இருந்து பாம்பு பார்க்கும் என்பதும் மூட நம்பிக்கை. உண்மையில் கொம்பேறி மூக்கன் ரக பாம்புக்கு நச்சுதன்மையில்லை.*இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன. இவற்றில் 52 வகை பாம்புகள் விஷ தன்மை கொண்டவை. நாகபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், பவளபாம்பு, கடற்பாம்புகள் என்ற 5 வகைக்குள் இந்த 52 வகை பாம்புகளும் அடக்கம்.* எலிகளை அதிகமாக உண்பது சாரை பாம்பாகும். இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களில் உள்ள இனமான இப்பாம்பு 10 அடிவரை நீளம் கொண்டது.பாம்புகள் குறித்த கூடுதல் தகவல்களை பழநி அருங்காட்சியகத்தில் அறியலாம். பாடம் செய்யப்பட்ட பாம்புகளையும் இங்கு பார்வையிடலாம்.

No comments: