Thursday, January 15, 2009

'6' ஐ இழுத்துக் கொண்டு போன '7' துணைக்கு அஞ்சு வயசு பிஞ்சு


பெர்லின்:"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா; ஓடிப்போய் கல்யாணம் தான் கட் டிக்கலாமா?' என்று சினிமாவில் தமாஷாக பாட்டை கேட்டிருப்பீர்கள்; ஆனால், ஆறு வயதே ஆன காதலியை, ஏழு வயதான காதலன் கூட்டிக் கொண்டு ஓடிய சம்பவம் பற்றி கேட்டதுண்டா?ஒரு ஆறுதல்; இது இந்தியாவில் நடக்கவில் லை; ஜெர்மனியில் நடந்துள்ளது.
படியுங்கள்:வடக்கு ஜெர்மனியில் உள்ள ஹனோவர் பகுதியை சேர்ந்தவர் கள் இந்த பிஞ்சுக்காதல் ஜோடி. காதலன் பெயர் மைகா; வயது ஏழு. காதலி பெயர் அன்னா; வயது ஆறு. மாதக்கணக்கில் பேசி, பழகி, "டிவி' சினிமாப்படங்களை பார்த்து, இந்த பிஞ்சுகளுக் குள்ளும் காதல் அரும்பியது.இரண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்று சீக்ரெட்டாக முடிவெடுத்தனர். இதற்கு அன்னாவின் தங்கையும் துணையாக இருந்தாள்.
பணக்கார வீட்டு குழந்தைகளான இவர்கள், தங்கள் பெற்றோருடன் ஒவ்வொரு விடு முறைக்கும் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று அனுபவித்துள்ளனர். இந்த வகையில், "தென் ஆப்ரிக்காவுக்கு போய் வெதுவெதுப்பான சூரிய வெளிச்சத்தில் சுற்றுலா தலம் ஒன்றில் திருமணம் செய்யலாம் என்று பிளான் போட்டனர்.
புத்தாண்டு பிறந்த நாளின் முதல் நாள் அதிகாலை, பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த போது, ஓட்டம் பிடித்தனர்.முதல் நாளே, பணம் மற்றும் பைனாகுலர், ஐபாட் போன்ற சமாச்சாரங்களையும் "பேக்கிங்' செய்து விட்டனர். அதிகாலையில், தங்கையுடன் அன்னா, ஹனோவர் ரயில் நிலையத்துக்கு வந்து விட்டாள்; சிறிது நேரத்தில் மைகாவும் வந்து விட்டான். அதிகாலை நேரத்தில் மூன்று பிஞ்சுகள், தனியாக, அதுவும் பெரிய பைகளுடன் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனவே என்று சந்தேகப்பட்டு, ரயில்வே பாதுகாவலர், போலீசுக்கு தகவல் தந்தார்.
இரண்டு போலீசார் வந்து, குழந்தைகளுடன் பேச்சு கொடுத்தனர். எதற்கும் பயப்படாமல், "ஆமாம், நாங்கள் ஆப்ரிக்காவுக்கு போகப்போகிறோம்' என்றனர். "விமான டிக்கெட் இல்லாமல் போக முடியாதே' என்று போலீசார் சொன்னதை அவர்கள் கண்டுகொள்ள வில்லை.பின், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். தகவல் தெரிவித்ததும், அவர்களின் பெற்றோர்கள் வந்து விட்டனர்.
விஷயம் கேள்விப்பட்டதும், அவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், மேற்கத்திய கலாசாரமா ஆயிற்றே... அதனால், குழந்தைகளை திட்டாமல், அன்புடன் தெளிவுபடுத்தி, வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.போலீசார் கூறுகையில், "நாங்கள் கண்டிப்பாக திருமணம் செய்வோம் என்று கூறுகின்றனர். அவர்களின் பெற்றோர்களிடம் இதை சொல்லி விட்டோம்' என்று சிரித்தபடி கூறினர்.

No comments: