நைரோபி, அக். 15-
உலகம் முழுவதும் 30 நாடுகளில் மிக, மிக கடுமையான உணவு பஞ்சம் நிலவுகிறது. இந்த நாடுகளில் தினமும் ஒரு நேர உணவு கிடைப்பதே மக்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது.
பசி, பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளில் 20 நாடுகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளன. இது பற்றி ஐ.நா. சபை புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில், உலகில் தினமும் சுமார் 100 கோடி பேர் பட்டினி கிடப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சிறுவர், சிறுமிகள் பள்ளி செல்வது தடைபட்டுள்ளது. மருத்துவ வசதிகள் கிடைக்காமல் போய் விடுகிறது.
உலகில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கையை 2015-ம் ஆண்டுக்குள் பாதியாக குறைத்து விட உலகின் வளர்ந்த நாடுகள் தீர்மானித்துள்ளன. என்றாலும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 30 நாடுகள், விவசாய உற்பத்தியில் அக்கறை காட்டாவிட்டால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிடும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஆசிய- பசிபிக் பகுதியில்தான் அதிக அளவில் மக்கள் பட்டினியோடு இருக்கிறார்கள்

Source: http://www.maalaimalar.com/
No comments:
Post a Comment