Thursday, October 15, 2009

ஈழத் தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டும்? உலகம் முழுவதும் கருத்துக்கணிப்பு



வாஷிங்டன், அக். 15-
தமிழர்களுக்கான ஒபாமா என்றொரு அரசியல் அமைப்பு அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில், ஈழத்தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு கருத்துக்கணிப்பு நடந்து வருகிறது.

இக்கருத்துக்கணிப்புக்கான ஓட்டுப்பதிவு புதினம் இணையத்தளம் மூலம் நடந்து வருகிறது. நேற்று இந்த கருத்துக்கணிப்பு தொடங்கியது. அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி வரை இந்த கருத்துக்கணிப்பு நடைபெறும்.

உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் இதில் பங்கேற்று பதில் அளிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பில் மொத்தம் 7 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்களுக்காக ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமா? அது நாடு கடந்த அரசாக இருக்க வேண்டுமா? அல்லது புகலிட அரசாக இருக்க வேண்டுமா?

நாம் உருவாக்கும் அரசு தற்காலிகமாக எந்த நாட்டில் இருந்து செயல்பட வேண்டும்? ஈழத்தமிழர்களின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டுமா? தமிழர்களின் இறுதியான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பது உள்பட 7 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இதில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் ஈழத்தமிழர்கள் http://www.tamilsforobama.com/ என்ற இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.


No comments: