சென்னை, அக். 15-
விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் கண்ணன் (27), இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த தனபாக்கியம் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத் துக்கு முன்பு திருமணம் நடந்தது. தனபாக்கியத்தின் அண்ணனுக்கு கண்ணனின் தங்கையை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கண்ணன் கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் உள்ள பிரபல ஜவுளி நிறுவன ஷோரூமில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் கண்ணன் வேலை பார்த்த கடைக்கு சென்று கண்ணனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். இரவில் வெகு நேரம் ஆகியும் அவர் கடைக்கு திரும்ப வில்லை.
இது பற்றி கடை நிர்வாகத்தினர் கண்ணனின் வீட்டுக்கு தகவல் கொடுத்தனர்.
அவரை காணாததால் புதுப்பெண் தனபாக்கியம் உறவினர்களும் தேட ஆரம் பித்தனர்.
இந் நிலையில் கண்ணன் சூளைமேடு நேரு தெருவில் இருட்டரை பகுதியில் கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கண்ணனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கண்ணனின் உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தனர். கொலை செய்யப்பட்டது கண்ணன் என்பதை உறுதி செய்தனர்.
இது பற்றி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜகபர் சாலி, இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
கண்ணன் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்று தெரியவந்தது. இதற்காக ஜெயிலுக்கு சென்று திரும்பியுள்ளார். ஜெயிலில் அவருக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆனார்கள்.
எனவே கண்ணனை கடத்தி கொலை செய்த 2 பேர் யார் என்று போலீசார் விசாரித்தனர். அதே பகுதி வாலிபர் ஒருவரும், நண்பர் ஒருவரும் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நண்பரின் காதலியை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கண்ணனின் செல்போனுக்கு மாலை 5.30 மணிக்கு பிறகு 2 பேர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அந்த எண்கள் மூலம் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்காக இன்ஸ்பெக்டர்கள் சுரேந்திரன், மோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment