Thursday, October 15, 2009

டெல்லியில் போக்குவரத்து நெருக்கடியால் தினமும் ரூ.11 கோடி வீணாகிறது



புதுடெல்லி, அக். 15-
டெல்லியில் முக்கிய சாலைகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளதால் கூடுதலாக சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் கடந்த சில மாதங்களாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது.

சிக்னல்களில் மட்டுமின்றி நெரிசல் ஏற்படும் பகுதிகளில் நீண்ட நேரம்வாகனங்கள் காத்துக்கிடக்க வேண்டியதுள்ளது. இதனால் எவ்வளவு எரிபொருள் இழப்பு ஏற்படுகிறது என்று ஒரு நிறுவனம் தகவல்கள் திரட்டியது.

அதன்படி டெல்லியில் தினமும் ஆயிரம் புதுகார்கள் பயன்பாட்டுக்கு வருவது தெரிய வந்தது. இத்தகைய வாகன பெருக்கம் காரணமாக தினமும் கார்கள் அதிகரித்து நெரிசலுக்கு வழி வகுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் சிக்கி நிற்கும் வாகனங்களால் பெட்ரோல், டீசல் இழப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. அந்த வகையில் தினமும் 30 லட்சம் லிட்டர் பெட்ரோல் டீசல் வீணாகிறது.

அதன் மதிப்பு 10 கோடி ரூபாயாகும். மற்றும் அரசு துறைக்கு ரூ.1 1/2 கோடி இழப்பு ஏற்படுகிறது. மொத்தத்தில் டெல்லியில் தினமும் போக்குவரத்து நெரிசலால் ரூ.11 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது.

இதை தவிர்க்க வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: