
அகமதாபாத், : குஜராத்தில் 1988ம் ஆண்டு மும்பையில் இருந்து அகமதாபாத் வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கோட்டார்பூர் என்ற இடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இதில் 124 பேர் பலியாயினர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.2 லட்சம் அளிக்கப்பட்டது. நஷ்டஈடு தொகையை அதிகரிக்கக் கோரி, இறந்தவர்களில் 34 பேரின் குடும்பங்கள் சார்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், 34 பேரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6 கோடி நஷ்ட ஈடு வழங்குமாறு இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு கடந்த 2003ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. 34 பேரின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்றும் இதில் 90% இந்தியன் ஏர்லைன்சும் 10% விமான நிலையங்கள் ஆணையமும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Source : www.dinakaran.com
No comments:
Post a Comment