Wednesday, October 28, 2009

டெல்லி-கொல்கத்தா இடையே 2 அடுக்கு ஏ.சி. ரெயில் அடுத்த ஆண்டு ஓடத்தொடங்கும்


ரெயில்வே பட்ஜெட்டில் 2 அடுக்கு ஏ.சி. ரெயில் விடப்படும் என்று ரெயில் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து இருந்தார். இதை நிறைவேற்றும் வகையில் டெல்லி-கொல்கத்தா மற்றும் மும்பை- டெல்லி இடையே 2 அடுக்கு ஏ.சி. ரெயில் விட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக 2 அடுக்குடன் கூடிய ஏ.சி. ரெயில் பெட்டிகள் கபூர்தலாவில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இது சாதாரண ரெயில் பெட்டிகளை விட 6 இஞ்ச் உயரமே அதிகமாக இருக்கும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ளது போல் இருக்கை வசதிகளும் உண்டு. கீழ் தளத்தில் இருப்பது போல் மேல் தளத்திலும் நடந்து செல்லக்கூடிய வகையில் இடம் இருக்கும்.

இந்த ரெயில் 150 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒவ்வொரு 2 அடுக்கு பெட்டியிலும் 108 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும்.

வருகிற ஜனவரி 26-ந் தேதிக்குள் 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் தயாரிக்கும் பணி முடிவடைந்து விடும். அதன் பிறகு டெல்லியில் இருந்து மும்பைக்கும், கொல்கத்தாவுக்கும் விடப்படும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

Source: http://www.maalaimalar.com

No comments: