
பாக்தாத், அக். 15-
ஈராக்கில் 2003-ம் ஆண்டு அமெரிக்கா படையெடுப்பு நடத்தி நாட்டை கைப்பற்றியது. ஆட்சியில் இருந்த சதாம்உசேன் தூக்கி எறியப்பட்டார். அதில் இருந்து அங்கு குண்டு வெடிப்புகள் போன்ற கலவரங்கள், வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றன.
2004-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்பு, மற்றும் வன்முறை சம்பவங்களால் மட்டும் 85 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
2006 மற்றும் 2007-ல்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2006-ல் 32 ஆயிரத்து 622 பேரும், 2007-ல் 19 ஆயிரத்து 155 பேரும் பலியானார்கள்.
பலியானவர்களில் 15 ஆயிரம் பேர் யார்? என்பதை இதுவரை அடையாளம் காணவில்லை.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment