
நியூயார்க், அக்.15-
போர்டு கார் நிறுவனம் “வின்ஸ்டர்” ரக கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்தது. சமீபத்தில் 45 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த காரில் சுவிட்சில் கோளாறு இருந்தது தெரிய வந்தது. சுவிட்சை “ஆன்” செய்யும்போது கார் தீப்பிடித்தது. இதனால் 55 கார்களில் தீப்பிடித்ததாகவும், சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது. சுவிட்சில் கோளாறு இருப்பதாக 1500 பேர் புகார் கூறினார்கள்.
இதுதொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான பெடரல் இன்வெஸ்டி சேசனும் விசாரணை நடத்தியது.
இதையடுத்து 45 லட்சம் கார்களையும் திரும்ப பெற போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. வருகிற 26-ந்தேதி முதல் வாபஸ் பணிகள் தொடங்குகின்றன.
திரும்ப பெறும் பணி முடியும்வரை இந்த கார்களை கார் பார்க்கிங் மற்றும் வீடுகள் அருகே நிறுத்த வேண்டாம் என்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரே நிறுவனம் 45 லட்சம் கார்களை திரும்ப பெறுவது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.
சுவிட்சில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சம்பவங்களால் உயிரிழப்போ, காயமோ இதுவரை ஏற்படவில்லை என்று போர்டு நிறுவனம் கூறியுள்ளது.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment