
சாக்ரமேன்ட்டோ: அதிக மின்சாரத்தை விழுங்கி, உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்று கூறி, 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள பெரிய்ய்ய "டிவி'க் களுக்கு கலிபோர்னியா மாநிலம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. உலக வெப்பமயமாதலுக்கு மின்சார பயன்பாடு முக்கிய காரணமாகிறது. அதை குறைக்க வேண்டும் என்று, கலிபோர்னியாவை சேர்ந்த பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மின்சார பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்ட இந்த மாநில எரிசக்தி கமிஷன்,"பெரிய "டிவி'க் களால் அதிக மின்சாரம் செலவாகிறது. அதை தடை செய்யலாம்' என்று பரிந்துரை செய்தது.
கவர்னர் ஆர்னால்டு ஷூவர்ஸ்நெக்கர், பிரபல ஹாலிவுட் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். குடியரசு கட்சி சார்பில் கவர்னராக பொறுப்பேற்றவர். டெர்மினேட்டர் உட்பட பல படங்களில் நடித்தவர். எரிசக்தி கட்டுப்பாட்டுக்கு இவர் ஆதரவு தெரிவித்து வருகிறார். கமிஷன் பரிந்துரையை ஏற்று, விரைவில் ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானம் போட திட்டமிட்டுள்ளார். இது நிறைவேறினால், சட்டமாக அமலுக்கு வரும். அமலுக்கு வந்தால், 2013 முதல் 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள "டிவி'க்களை தயாரித்து விற்க முடியாது.
கமிஷனின் இந்த முடிவை "டிவி' தயாரிப் பாளர்கள் எதிர்த்துள்ளனர். "பெரிய "டிவி' என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அதை தடை செய்யக்கூடாது; மேலும், மற்ற "டிவி'க்களை விட, அதன் பயன்பாடு குறைவு தான். அதனால், மின்சார தேவையும் குறைவாகத்தான் இருக் கும். இப்படி இருக்கும் போது, இதை தடை செய் வது சரியான முடிவல்ல' என்று தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா முக்கிய மாநிலம். அந்த மாநிலத்தில் கொண்டு வரப்படும் சட்ட முடிவுகள், மற்ற மாநிலங்களை பின்பற்ற வைக்கும். அதனால், பெரிய "டிவி'க்கு வரும் தடையும் மற்ற மாநிலங்களில் சட்டமாக கொண்டு வரப்படும் என்பதால், "டிவி' தயாரிப்பாளர்கள் வரிந்து கட்டி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
Source: http://www.dinamalar.com
No comments:
Post a Comment