லண்டன்: பருப்பு சேர்த்து செய்யப்பட்ட உணவு தான் சிறப்பானது என பிரிட்டன் எழுத் தாளர் சைமன் மஜும்தார் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நர்சுக்கும், கோல்கட்டா டாக்டருக்கும் பிறந்தவர் சைமன் மஜும்தார். இவரது தாய் வென்ஜான் வேல்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த போது, அங்கு பயிற்சிக்காக வந்த டாக்டர் பிரதீப் மஜும்தாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவருடன் கோல்கட்டா வந்த வென்ஜான், பெங்காலி உணவு வகைகளை சமைப்பதில் கை தேர்ந்தவரானார். பின்னர் இந்த தம்பதியர் மீண்டும் பிரிட்டன் திரும்பினர். அங்கு பிறந்தவர் தான் சைமன் மஜும்தார்.
தாயின் கை பக்குவத்தில் சாப்பிட்டு பழகி போன சைமன் மஜும்தாருக்கு உணவு வகைகளின் மீது அலாதி பிரியம். எனவே, பார்த்த தொழில்களையெல்லாம் விட்டு விட்டு ஒவ்வொரு நாடாக சென்று அந்த நாட்டு உணவு வகைகளை பற்றி ஆராய்ந்து ருசி பார்த்து, அதை பற்றி கட்டுரையாக எழுதி வந்தார் சைமன். 30க்கும் அதிகமான நாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளின் அசைவ மற்றும் சைவ உணவுகளை சாப்பிட்டு பார்த்து அவ்வுணவுகளின் தன்மை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
பெரும்பாலான நாடுகளை சுற்றி பார்த்து, அந்த ஊர்களின் உணவுகளையெல்லாம் ருசி பார்த்த பின், சைமன் தனது கட்டுரையில் குறிப்பிடுகையில், "கிழக்கு நாடுகளாகட்டும், மேற்கத்திய நாடுகளாகட்டும் எனக்கு பிடித்தது பருப்பு உணவு மட்டுமே. பருப்பு சேர்த்து சமைக்கப்பட்ட உணவு, ருசியில் மட்டுமல்ல, உடலுக்கும் நிறையவே நன்மை அளிக்கிறது' என, தெளிவுப்படுத்தியுள்ளார். "பருப்பை உயிர் காக்கும் உணவு' என்றே அழைக்கிறார் சைமன்.

Source: http://www.dinamalar.com
2 comments:
பகிவிற்கு நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி
ஜோசப்
Post a Comment