Friday, October 23, 2009

படகில் உலகம் சுற்றும் ஆஸி., இளம் பெண்


சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 16 வயது பெண், உலகம் முழுவதும் படகில் தனியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜெசிகா வாட்சன். 16 வயதான ஜெசிகா, படகு ஓட்டுவதில் வல்லவர். மின்னணு உபகரணங்களை கையால்வதிலும், கடல் பயணம் செய்வதிலும் தேர்ந்தவர். இந்த திறமையை வைத்து கொண்டு உலகம் முழுவதும் 240 நாட்களில் 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை படகில் சுற்றி வர கிளம்பி விட்டார்.
கடந்த வாரம் சிட்னி துறைமுகத்தில், தனது பயணத்தை துவக்கிய ஜெசிகாவை, அவரது பெற்றோர் கட்டி தழுவி கண்ணீர் மல்க விடை கொடுத்தனர். வழியனுப்ப வந்த துணை பிரதமர் ஜூலியா கிலார்டு குறிப்பிடுகையில், "ஜெசிகாவின் துணிச்சல் எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், அவர் பாதுகாப்பாக இந்த பயணத்தை முடித்து திரும்ப வாழ்த்துகிறேன்' என்றார். எந்தவித பயமும் இல்லாமல், 34 அடி நீளமுள்ள பாய்மர படகை லாவகமாக இயக்கி தன் பயணத்தை தொடர்ந்துள்ள ஜெசிகா, தான் செல்லும் இடங்களை பற்றிய தகவல்களை, தன் நண்பர்கள் மற்றும் கடற்படை வல்லுனர்களிடம் தெரிவித்து வருகிறார்.

No comments: