Monday, October 26, 2009

பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு


நெல்லை : அம்பை, ஆலங்குளம் வட்டாரத்தில் பள்ளி இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர் க்க ஆசிரியர் பயிற்றுனர் கள் 60 பேர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். பள்ளி வயது குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்து கல்வி அளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்திட்டத்துக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளி இடைநிற்கும் குழந்தைகளுக்காக உண்டு உறைவிடப்பள்ளிகள், மாற்றுப்பள்ளிகள், குழந் தை தொழிலாளர் பள்ளி களை தொடங்கி, தன்னார்வத்துடன் வரும் பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை படித்த நபர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 94 பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத் தில் கடந்த ஆண்டு சிறப்பு பள்ளிகளில் படித்த பள்ளி இடைநின்ற 1001 பேர் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர். 301 பள்ளி வயது குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளிகளில் நேரடியாக சேர்க்கப்பட்டனர். தற்போது சிறப்பு பள்ளிகளில் 1,659 பேர் படித்து வருகின்றனர். சிறப்பு பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங் கள், சீருடை, காலணி, நோட்டு புத்தகம், புத்தகப் பை உள்ளிட்டவை வழங்க இந்த ஆண்டு ரூ.69 லட் சத்து 63 ஆயிரம் அரசு நிதி ஒதுக்கி இது வரை 50 சதவீத நிதியை அளித்துள் ளது. இப்பள்ளிகளில் கற்பிக்கும் நபர்களுக்கு செயல்வழிக்கற்றல் பயிற்சி, படைப்பாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்பை, ஆலங்குளம் சுற்று பகுதிகளில் பள்ளி இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக் கை அதிகரித்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெற்றோரிடையே விழிப்புணர்வு குறைவா லும், வருமானத்தை எதிர்பார்த்து வேலைக்கு அனுப்புவதாலும் பள்ளி இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நெல்லை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகரித்துள்ளது.ஆலங்குளம் சுற்றுப்பகுதியில் 90 பேரும், அம் பை பகுதியில் 60 பேரும், கீழப்பாவூர் பகுதியில் 90க்கும் மேற்பட்ட பள்ளி இடைநின்ற, பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதில் சிலர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களது பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை மீட்டு பள்ளிகளில் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற் காக ஆசிரியர் பயிற்றுனர் கள் 60 பேர் அந்த பகுதிகளில் முகாமிட்டு விழிப்புணர்வு பணியை மேற்கொண்டுள்ளனர். முறை யான பள்ளிகளில் படிக் கும் குழந்தைகளுக்கு ஈடாக சிறப்பு பள்ளிகளில் படித்து வருபவர்களின் கல்வித்திறனை அதிகப்படுத்த நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.

No comments: