Monday, October 26, 2009

மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஒடிஷா மாநிலம் ஆகிறது ஒரிசா


புதுடெல்லி: ஒரிசா மாநிலத்தின் பெயர் விரைவில் ஒடிஷா என்று மாறுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஷா என்று மாற்றக் கோரி அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். ஒரியா மொழியின் பெயரை ஒடியா என்று மாற்றவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன் கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், மாநிலத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக அரசியல் சட்டத்தின் முதல் மற்றும் 8வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அடுத்த மாதம் கூடும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஒப்புதல் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன்பிறகு, ஒரிசாவின் பெயர் விரைவில் மாற்றம் செய்யப்படும். ஒரிசா என்ற பெயர் தவறான உச்சரிப்பில் கூறப்படுவதாகவும் அதன் பாரம்பரிய முறைப்படி ஒடிஷா என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசு விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments: