
சென்னை: சென்னை தொலைபேசி நிறுவனம் வித்தியாசமான 1520 செல்போன் எண்களை ஏலம் விட உள்ளது. இந்த எண்கள் வித்தியாசத்திற்கு ஏற்ப (உதாரணம்: 94458 66666 முதல் வகை) , ((94458 67777 2வது வகை), (94458 68000 3வது வகை) என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணி முதல் ஒரு வாரத்துக்கு ஏலம் நடைபெறும். செல்போன் மூலம் ஏலம் கேட்கலாம். இதற்கு எஸ்எம்எஸ் மூலம் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ரூ.50 கட்டணம். பிறகு விரும்பும் எண்ணை அதற்கான தொகையை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். எண்களின் வித்தியாசத்திற்கு ஏற்ப ரூ.1000, 2000, 3000 என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து நூறின் மடங்குகளாக ஏலம் கேட்கலாம். ஒவ்வொரு எஸ்எம்எஸ்சுக்கும் ரூ.1.50 கட்டணம். ஏலத்தில் பங்கேற்கும் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.300 வைத்திருக்க வேண்டும்.
Source : http://www.dinakaran.com
No comments:
Post a Comment