Wednesday, October 21, 2009

சாதி இல்லே, சாமி இல்லே என்று வார்த்தைக்கு வார்த்தை முழங்கும் விவேக், இதுவரை பேசியதெல்லாம் சும்மா சினிமா வசனம்தானா?


படங்களில் ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விவேக், தனக்குப் பிரச்னை என்று வந்தவுடன் தனது ஜாதி முகமூடியை எடுத்து அணிந்துகொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடருகிறார்கள். எனக்குக் கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைக்கூடத் திரும்ப பெற சூழ்ச்சி நடக்கிறது. எனக்கு ஆதரவராக நீங்களும் களம் இறங்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். எங்கே தெரியுமா? அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுதான் இந்தப் புலம்பல்.

இது பற்றித் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சேதுராமன், தனிப்பட்ட முறையில் விவேக் மீது யாராவது வழக்குத் தொடர்ந்தால் மட்டும் இவருக்கு ஆதரவு கொடுப்பதென்றும் ஒட்டுமொத்த நடிகர்களோடு இவர் சேர்க்கப்பட்டால் அதை அவரே பார்த்துக்கொள்ளட்டும் என்றும் முடிவு செய்திருக்கிறாராம்.

சாதி இல்லே, சாமி இல்லே என்று வார்த்தைக்கு வார்த்தை முழங்கும் விவேக், இதுவரை பேசியதெல்லாம் சும்மா சினிமா வசனம்தானா? நல்லாயிருக்குப்பா நாடகம்..!

No comments: