Monday, October 12, 2009

ஊட்டி தாவரவியல் பூங்காவில் தங்க நிறத்தில் 'மெரிகோல்டு'


ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக வளர்க்கப் பட்ட பெரும்பாலான மலர்கள் பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடும் மழைப் பொழிவு இருந்து வந்ததாலும், பன்றிகாய்ச்சல் பீதி இருந்ததாலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், தற்போது, காலநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, மரவியல் பூங்கா ஆகியவற்றில் இரண்டாம் சீசனுக்காக வளர்க்கப்பட்ட அனைத்து மலர்களும் பூத்து மிகவும் பொலிவாக காட்சியளிக்கின்றன. இந்த பூங்காக்களுக்கு வரும், சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்கா, 6,000 மலர் தொட்டிகளில் வைக்கப்பட்ட பெரும்பாலான "மெரிகோல்டு' பூக்கள் காண்பவரை வெகுவாக கவரும் விதத்தில் பூத்துள்ளன.

No comments: