
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாயை சேர்ந்த 24 வயது இந்திய பெண் தனது 3 1/2 வயது மகளை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் தனது 2 வயது மகள் நாஷுவாவை குத்தி கொல்ல முயன்றாள்.
ஆனால் தீவிர சிகிச்சைக்குப் பின் அக்குழந்தை உயிர் பிழைத்தது. இதை தொடர்ந்து அப்பெண் மீது துபாய் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பெண் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கோர்ட்டு அப்பெண்ணுக்கு 15 ஆண்டுகளாக ஜெயில் தண்டனையை அதிகரித்து தீர்ப்பு கூறியது. இவர் நல்ல மனநிலையுடன் இருந்துதான் பெற்ற மகளை கொலை செய்து இருக்கிறார். மேலும் ஒரு குழந்தையை கொல்ல முயன்று இருக்கிறார்.
எனவே இவருக்கு கீழ் கோர்ட்டில் அளித்த தண்டனை போதாது என்று கூறி தண்டனை காலத்தை அதிகரித்து தீர்ப்பு கூறியது. தனது மனைவிக்கு எதிராக அவரது கணவர் வாக்குமூலம் கொடுத்து இருந்தார். தனது மனைவி நல்ல மனநலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment