Friday, November 20, 2009

மகாபாரதம் கதைபோல மனைவியை ரூ.35ஆயிரத்துக்கு பணயம் வைத்து சூதாடிய கணவன்: தோல்வி அடைந்ததால் சூதாடியவர் இழுத்துச் சென்றார்


இந்த பாலாஜிப் பயல அவன் பொண்டாட்டியும்,வெங்கடேசனும் சேர்ந்து நாடகமாடி ஏமாத்திட்டாங்க என்று நினைக்கிறேன். பலாஜிப்பய தண்ணியும் போட்டிருப்பான். அவன உசுப்பிவிட்டு நாடகமாடி அழகான அவன் பொண்டாட்டிய துக்கிட்டுவர பிளான் பண்ணி கள்ளக்காதலர்கள் ஒன்று சேர்ந்திடாங்கடோய்

தர்மர் துரியோதனனுடன் சூதாடும்போது முதலில் நாடு, 4 சகோதரர்களை பணயம் வைத்து தோற்று விடுவார். அதன்பிறகு அவரிடம் பணயம் வைக்க வேறு சொத்து எதுவும் இல்லை என்பதால் மனைவி திரவுபதியை பணயம் வைப்பார். அதிலும் அவர் தோற்று விடுவார்.

இதனால் துரியோதனன் தனது சகோதரன் துச்சாதனனை ஏவி திறவுபதியின் புடவையை அவிழ்ப்பார். புடவையை இழுக்க இழுக்க வந்து கொண்டே இருக்கும். இது மகாபாரத கதை.

இதேபோல தற்போது ஆந்திராவில் ஒரு சூதாட்ட சம்பவம் நடந்துள்ளது. சித்தூர் மாவட்டம் மதன பள்ளியை சேர்ந்தவர் பாலாஜி (30). இவரது மனைவி உஷா. இவர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்.

பாலாஜி சூதாட்ட பிரியர். அடிக்கடி அப்பகுதியில் உள்ள விடுதிக்கு சென்று சூதாடுவார். இவர் அப்பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஸ்ரீராமுலு, வெங்கடேஷ் ஆகியோருடன் சூதாடினார். பாலாஜி வெங்கடேஷிடம் ரூ.35 ஆயிரம் வரை தோற்றுப்போனார். அப்போது வெங்கடேஷ் மீண்டும் சூதாட வேண்டும் என்றால் பணயம் வைப்பதற்கு உன்னிடம் சொத்து ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டார்.

சிறிது நேரம் யோசித்த பாலாஜி, என் மனைவியைத்தவிர பணயம் வைக்க வேறு எதுவும் இல்லை என்றார். உடனே வெங்கடேஷ், அப்படியானால் உன் மனைவியை வைத்து சூதாடலாம். நீ தோற்றால் நாங்கள் உன் மனைவியை தூக்கிச்சென்று விடுவோம் என்றார். இதற்கு பாலாஜி ஒப்புக்கொண்டார்.

மனைவியை பணயம் வைத்ததால் ஒருவித பதட்டத்துடன் சூதாடினார். ஆனால் அதிலும் அவருக்கு தோல்விதான் மிஞ்சியது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

வெற்றிபெற்ற வெங்கடேஷ், நீ சூதாட்டத்தில் தோற்றதால் மனைவியை இங்கு அழைத்து வா என்றார். அதற்கு பாலாஜி மறுத்துவிட்டார்.

இதனால் ஆவேசம் அடைந்த வெங்கடேசும், ஸ்ரீராமுலுவும் பாலாஜி வீட்டுக்கு வேகமாக சென்றனர். அங்கு சமையல் செய்து கொண்டிருந்த உஷாவிடம் சென்று, உன் கணவன் எங்களிடம் சூதாடும்போது உன்னை பணயம் வைத்தான். அவன் தோற்றுவிட்டதால் உன்னை எங்களுடன் அழைத்துச் செல்ல வந்துள்ளோம் என்றனர்.

இதை கேட்டதும் உஷா அதிர்ச்சி அடைந்தார். வரமாட்டேன் என்று அழுது புரண்டார். ஆனாலும் இருவரும் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி பக்கத்து ஊரில் உள்ள தங்களது வீட்டிற்கு இழுத்துச்சென்றனர். இதனால் பாலாஜி செய்வதறியாது திகைத்தார்.

வெங்கடேஷ் உஷாவை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று நன்றாக கவனித்தார். விதவிதமான உணவு வகைகள் கொடுத்தார். நிறைய புடவைகள், நகைகள் வாங்கி கொடுத்தார். இதில் மயங்கிய உஷா வெங்கடேசுடனே தங்கிவிட்டார்.

மனைவியை சூதாட்டத்தில் பறிகொடுத்த பாலாஜி மதனபள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உஷாவை தேடி வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் வெங்கடேஷ், ஸ்ரீராமுலு ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் உஷாவை மீட்டு பாலாஜியுடம் ஒப்படைத்தனர். உஷாவோ போலீசாரிடம், நான் வெங்கடேசுடன் வாழவே ஆசைப்படுகிறேன் என்றார்.

இதனால் போலீசார் உஷாவை யாரிடம் ஒப்படைப்பது என்று குழப்பம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் மதனபள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: