Tuesday, November 3, 2009

திருமணமான 4-வது மாதத்தில் கள்ளக்காதலனை நாடிய புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: உல்லாசத்துக்கு பிறகு காதலனே கொன்றான்


திருச்சி லால்குடி கொத்தமங்கலத்தை சேர்ந்த அன்பரசிக்கு வயது 21தான். திருமண வயது வந்ததும் அன்பரசியை அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி முத்துக்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

2.7.2009ல் உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த புரோகிதர்கள் மாங்கல்யம் தந்துனானே... என மந்திரம் ஒத... நல்ல நேரம் பார்த்து முத்துக்குமார் கட்டிய தாலியை கழுத்தில் வாங்கினாள் அன்பரசி.

பாவம் அப்போது அன்பரசிக்கு தெரியவில்லை. இன்னும் 4 மாதத்தில் இதே கழுத்தில் எமன் கள்ளக்காதலன் ரூபத்தில் துப்பட்டாவால் இறுக்கி கொல்லப்போகிறான் என்று.

3 மாதம் கணவர் முத்துக்குமாருடன் திருமண வாழ்க்கையை ஜாலியாக அன்பரசி அனுபவித்தார். அதற்குள் உறவினர்கள்... என்ன அன்பரசி... ஏதும் விஷேசம் உண்டா? என்று விசாரிக்க தொடங்கினார்கள்.

பக்கத்தில் இருந்தவர்கள்... சின்னபொண்ணுதானே.. இப்பதானே...திருமணம் ஆச்சு... இளசு... என்ஜாய் பண்ணட்டும். குழந்தையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள்.

விருந்து உபசரிப்பு... நல விசாரிப்பு, குழந்தை விசாரிப்பு என... உபசரிப்புகளால் அன்பரசி திக்குமுக்காடிப்போனாள்.

பால் வியாபாரத்திற்கு செல்லும் கணவர் முத்துக்குமாருக்கு அன்பரசியுடன் அடிக்கடி பேசாமல் இருக்க முடியவில்லை. ரூ.3 ஆயிரம் செலவு செய்து செல்போன் வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில்தான் ஒரு நாள் இரவு... அன்பரசியின் செல்போனுக்கு ஒரு மிஸ்டுகால் வந்தது. யாரோ... என்று அதே எண்ணுக்கு அன்பரசி தொடர்பு கொண்டாள்.

எதிர் முனையில்.... சில நிமிடம் மவுனம்..அன்பரசி ஹலோ... ஹலோ... என்றாள். ஆனால் எதிர்முனை மீண்டும் மவுனமாகவே இருந்தது.

சில நாட்கள் கழித்து... மீண்டும் அதே எண்ணில் இருந்து மிஸ்டுகால் வந்தது. அன்பரசிக்கு ஆர்வம் அதிகரித்தது.

மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஹலோ என்றாள். அது எமனுக்கு சொல்லும் ஹலோ என்பது தெரியாமலேயே...

மறு முனையில் தயங்கியபடி ஹலோ... என்றான். அவன்..! அன்பரசிக்கு அந்த குரலை கேட்டதும் உடலுக்குள் பட்டாம் பூச்சு பறப்பது போல உணர்வு.

எதிர் முனையில் ஹலோ... என்றவன்... தன்னை அங்கமுத்து என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். அன்பரசிக்கு... இவனிடம் ஏன் பேசுகிறோம்... என தோன்றியது.

ஆனால்... பேசினாள் அங்கமுத்து தினமும் மிஸ்டுகால் விட்டான். அன்பரசி.., உடனே தொடர்பு கொண்டாள்.

தன் மனைவி... அன்பரசி... மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பது உண்மையா... வேறு ஒரு முகம் தெரியாத வாலிபருடன் போனில் பேசுகிறாள் என்பது தெரியாமல்... முத்துக்குமார் வீடு, வீடாக சென்று பால் ஊற்றிக் கொண்டிருந்தான்.

இதற்கிடையே எவ்வளவு நாள் தான். போனிலேயே பேசுவது. நேரில் பார்க்க வேண்டாமா, என்று அன்பரசிக்கு அழைப்பு விடுத்தான் அங்கமுத்து.

அன்பரசியும்... மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல... அங்கமுத்துவை தேடி திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர், காமராஜர்புரத்தில் உள்ள வீட்டுக்கே வந்தாள். அன்பரசியை பார்த்ததும்... அவள் அழகில் மயங்கிப் போனான் அங்கமுத்து.

தனிமை...! இளமை.. பஞ்சும்... நெருப்பும் பற்றிக்கொள்ள தொடங்கியது. அப்போதுதான். அன்பரசியின் கழுத்தில் இன்னமும் மஞ்சள் காயாத... தாலிக் கொடி கிடப்பதை அங்கமுத்து பார்த்தான். ஆனாலும்... அன்பரசி.. தனக்கு... தற்காலிகம் தானே... என மனதை தேற்றிக்கொண்டாள்.

ரணம்..! பெயிண் டரான அங்கமுத்து, ஏற்கனவே... அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணிடம் காதல் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தான்.

அதன்பிறகு... கணவர்... முத்துக்குமாரிடம் ஏதாவது பொய் சொல்லி விட்டு முத்தரசநல்லூருக்கு கள்ளக்காதலன் அங்கமுத்துவை பார்க்க புறப்பட்டு சென்று விடுவாள்.

அங்கமுத்து தாய்வேறு ஒருவருடன் சென்று விட்டார். தந்தை விவசாயம். ஒரு தங்கை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். காமராஜர்புரத்தில் காட்டுக்குள் தனிமையில் இருந்த அங்கமுத்து வீடு இவர்கள் சந்திப்புக்கு வசதியாகி விட்டது.

நாளடைவில் கள்ளக்காதலன் அங்கமுத்து கொடுத்தசுகம். கணவர் முத்துக்குமாரையே தூக்கி எறிய அன்பரசிக்கு தைரியம் கொடுத்து விட்டது. இதற்கிடையே முத்துக்குமாருக்கு அரசல் புரசலாக விஷயம் கசிய தொடங்கி உள்ளது.

தனது... குட்டு அம்பலமானதால் அன்பரசி கள்ளக்காதலன் அங்கமுத்துவை... தேடி... கடந்த 27-ந்தேதி முத்தரசநல்லூர் வந்தாள்.

அங்கமுத்துவிடம்.. 90 நாள் கணவனை தூக்கி எறிந்து விட்டேன். என்னை மனைவியாக ஏற்றுக்கொள் என்று அன்பரசி அடம்பிடித்தாள். அடடா... இவளை தற்காலிகம் என்று நினைத்தோம். ஆனால் இப்போது நிரந்தர தாரமாக துடிக்கிறாளே.. என அங்கமுத்து அன்பரசி மீது கோபம் பொங்கினான்.

2 நாட்கள் அங்கமுத்து வீட்டிலேயே... அன்பரசி தங்கினாள்.

இதற்கிடையே... திருமணமான 120 நாளில் மனைவியை காணாமல் முத்துக்குமார் திடுக்கிட்டார். லால்குடி போலீசில் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்தார்.

இந்த நிலையில்தான்... சினிமாவில் வரும் திருப்பம் மாதிரி.. அங்கமுத்து , அன்பரசி, இருந்த போது நந்தினி வந்தாள். அங்கமுத்துவுடன் அன்பரசி இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தாள்.

சினிமாவில் இதுபோன்ற காட்சி வந்தால் இடைவேளை விடுவார்கள். அங்கமுத்துவுக்கோ... தொல்லை வேளையாகி விட்டது.

நந்தினியை சமாதானம் செய்ய முயன்றான். ஆனால் அவள் கோபித்துக் கொண்டு சென்று விட்டாள்.

காதலி சமாதானமாகி(?) சென்று விட... கள்ளக்காதலி... அன்பரசியோ... தன்னை உடனே திருமணம் செய்து கொள் என்று அடம்பிடிக்க தொடங்கினாள். கண்ணீர் விட்டாள். கணவனையே உன்னை நம்பி கைகழுவி விட்டேன். என்னை ஏமாற்றி விடாதே... என கெஞ்சினாள்.

கெஞ்சிய... அன்பரசியை கொடூரபார்வை பார்த்தான் அங்கமுத்து, உன்னால் காதலியை இழந்து விடுவேன்...என நினைத்தான்.

திடீரென்று அன்பரசியின் கழுத்தில் துப்பட்டாவை வைத்து இறுக்கினான்.

அன்பரசிக்கு மூச்சு திணறியது. யாரோ... காதில்... ஹலோ... ஹலோ... என்று போனில் அழைப்பது போல இருந்தது.

அது 1மாதத்துக்கு முன்பு மிஸ்டுகால் எண்ணை தொடர்பு கொண்டபோது... கேட்ட குரல் போல இருந்தது சில நிமிடத்தில் நிரந்தரமாக மூச்சை நிறுத்திக் கொண்டாள் அன்பரசி.

இது நடந்தது அக்டோபர் 30-ந்தேதி வீட்டில் கிடந்த அன்பரசி பிணத்தை இருட்டியதும் அப்புறப்படுத்த முடிவு செய்தான்.

6 மணிக்கு மழை தூறத்தொடங்கியது. தன் வீட்டிற்கு 200 மீட்டர் தொலைவில் உள்ள தோப்பில் 2 அடி குழி தோண்டி அன்பரசி உடலை புதைத்தான். ஆனால்... சரியாக புதைக்கப்படாததால்.. அன்பரசி உடல் வெளியே... தெரிய, போலீஸ் வந்து விசாரித்தது.

அங்கமுத்து சிக்கிக் கொண்டான்.

2.7.2009... அன்பரசி கழுத்தில் தாலிகட்டிய முத்துக்குமார் நேற்று 2.11.2009ல் முத்தரசநல்லூர் தோப்பில்... அழுகி பிணமாக கிடந்த மனைவி அன்பரசியை பார்த்து கதறி... அழுதான்...

அப்போது... சட்டென... துறத்தொடங்கிய மழை... முத்துக்குமாரின் கண்ணீரை கழுவி விட்டது.

அந்த மழை.... அழாதே... கட்டிய மனைவிக்கோ... கணவனுக்கோ... துரோகம் செய்பவர்களின் வாழ்க்கை... முடிவு இப்படிதான் ஆகும் என்று தேற்றுவது போல இருந்தது.

முதலில் அன்பரசியை கொன்று விட்டு அவள் விஷம் குடித்து தற்கொலை செய்தான் என நாடகம் ஆடினான் அங்கமுத்து. ஆனால்... அவன் அன்பரசியிடம் ஆடிய நாடகமும் போலீசில் ஆடிய நாடகமும் தோற்றுப் போனது.

அன்பரசியின் 120 நாள் திருமண வாழ்க்கையை போலவே!

3 comments:

பித்தனின் வாக்கு said...

தன்வினை தன்னைச் சுடும். சுட்ட அப்பம் வீட்டைச் சுடும் என்ற பட்டினத்து அடிகளின் வார்த்தையைப் போன்றது இது.

Jesus Joseph said...

முற்றிலும் உண்மை
நன்றி

ஜோசப்

தமிழ். சரவணன் said...

இதுபோல் ஐந்து நிமிட சுகத்துக்கு ஆசைப்பட்டு காம மிருகம் கட்டிய கணவனை ஏமாற்றி கள்ளக்காதலனிடம் உயிரை இழந்த கொடுமை!!