
திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த மேல குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் ஞான அருள்ராஜ். இவர் மனைவி காசியம்மாள் (37). இவர்களின் மகள் சத்யா (15). 10ம் வகுப்பு படித்து வருகிறார். காசியம்மாளின் உறவினர் பழனிவேல் மகன் குமரமதி (23). இவருக்கு சத்யாவை திரு மணம் செய்து கொடுப்பது என இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த நடேசன் மனைவி ராஜகுமாரி (32). அதிமுகவைச் சேர்ந்த இவர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும் குமரமதிக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு உள்ளது. குமரபதியை சத்யா திருமணம் செய்துகொண்டால், தன்னுடன் உள்ள உறவு பாதிக்கப்படும் என்று ராஜகுமாரி கருதினார். இதையடுத்து தனியார் கிளினிக் உதவியாளர் சரஸ்வதி (40) என்பவர் உதவியுடன் எச்ஐவி தொற்று உள்ள செல்வி என்பவரின் ரத்தத்தை சிரிஞ்சில் எடுத்துக்கொண்டார். சத்யாவை மயக்கமடைய செய்து ஒரு காரில் ராஜகுமாரி, சரஸ்வதி மற்றும் கிருஷ்ணசமுத்திரம் விஏஓ அலுவலக உதவியாளர் கண்மணி ஆகியோர் அழைத்து சென்றனர். புளியஞ்சோலை பகுதிக்கு சென்றபோது ஊசி உடைந்துவிட்டதால் எய்ட்ஸ் ரத்தத்தை சத்யாவின் உடலில் செலுத்த முடியாது என்று சரஸ்வதி கூறிவிட்டார். இதையடுத்து சத்யாவுடன் ஊருக்கு திரும்பிய அவர்கள் நடந்த விவரத்தை கூறக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல் காணப்பட்ட சத்யாவிடம் கேட்ட போது நடந்த விவரங்களை கூறினார். காசியம்மாள் இதுபற்றி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒன்றிய கவுன்சிலர் ராஜகுமாரி, சரஸ்வதி ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
Source: http://www.dinakaran.com
1 comment:
மேலும் பல கள்ளக்காதல்கள் தகவல்களை பற்றி அறிய http://tamil498a.blogspot.com என்ற வலைபூ பக்கத்திற்க சென்று பார்வையிடவும்.
Post a Comment