
ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் போத்தி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சிவய்யா (26) எலெக்ட்ரீசியன். இவரது மனைவி அஞ்சனம்மா(22) இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.இதையடுத்து அஞ்சனம்மா அஞ்சம்பேட்டை கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு அவர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து வழங்கியது. நீதிபதி தனது தீர்ப்பில் சிவய்யா, மனைவிக்கு மாதந்தோறும் ரூ.500 ஜீவ னாம்சம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
ஆனால் அஞ்சனம்மா தற்போதுள்ள விலைவாசி யில் ரூ.500 ஜீவனாம்சம் போதாது ரூ.1000 வேண்டும் என்று மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது.
நீதிபதி ஜெயந்தி வழக்கை விசாரித்தார். அப்போது சிவய்யா நீதிபதியிடம் நான் எனது சம்பாத்தியத்தை வைத்து தான் பெற்றோர் தம்பி, தங்கையை காப்பற்ற வேண்டி உள்ளது. இதனால் மனைவிக்கு ரூ.1000 கொடுக்க முடியாது என்று கூண்டில் நின்ற படியே வாதம் செய்தார். சிறிது நேரம் கழித்து அவர் திடீ ரென தான் கொண்டு வந்திருந்த விஷ பாட்டிலை எடுத்து கூண்டுக்குள் நின்றபடியே குடித்தார்.இதைப் பார்த்ததும் நீதிபதி ஜெயந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது சிவய்யா கூறும்போது நம் நாட்டில் உள்ள சட்டம் பெண்களுக்கு ஆதர வாகத் தான் உள்ளது. பெண்கள் தவறு செய்தாலும் தப்பி விடுகிறார்கள்.
இந்த சட்டத்தால் ஆண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். எனக்கு இந்த கோர்ட்டில் நியாயம் கிடைக்கவே கிடைக்காது என்பதால் என் உயிரை துறக்கிறேன் என்று கூறிவிட்டு மயங்கி விழுந்தார்.அவரை வக்கீல்கள் ஊழியர் கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக அவர் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவய்யா உயிருக்கு போராடுவது தெரிந்தும் அஞ்சனம்மா எந்த வித கவலையும் இல்லாமல் சொந்த ஊர் புறப்பட்டு சென்றார். சிவய்யா பெற்றோர் கூறும்போது என் மகனின் தற்கொலை முயற்சிக்கு காரணமான அஞ்சனம்மாவை சும்மாவிடமாட்டோம். அவர் மீது வழக்கு தொடருவோம் என்றனர்.
No comments:
Post a Comment