
சென்னை: போக்குவரத்து நெரிசல் இருக்கும் இடங்கள் பற்றி செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் கூறினார். நகரில் போக்குவரத்து நெரிசல் உள்ள தெருவில் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம். மாற்று பாதையில் செல்ல வேண்டும்ÕÕ என்பது பற்றி, 13 எம்எப் ரேடியோவில் அறிவிக்கும் திட்டத்தை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் நேற்று அறிமுகம் செய்தார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் சாலையின் அகலம் குறைவாக இருந்தாலும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும், மாற்று வழி ஏற்படுத்தவும், மழை காலங்களில் உள்ள சிரமங்களை போக்கவும் எப்எம் ரேடியோ மூலம் போக்குவரத்து விவரத்தை அறிவிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். வாகனங்கள் நெரிசல், ஊர்வலம் ஆகியவற்றால் நெரிசல் ஏற்பட்டாலும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இதற்காக சிறப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விரைவில் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் சென்னையில் உள்ளவர்களுக்கு நெரிசல் குறித்து அறிவிக்கும் திட்டத்தை 20 நாட்களுக்குள் தொடங்க உள்ளளாம். அதேநேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சென்று நெரிசல்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் நம்பர் பிளேட் இல்லாமல் சென்றதாக 40 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல விதிமுறை மீறியதாக 40 ஆயிரம் ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 458 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த ஆட்டோக்களை ஏலம் விடுவது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு ஷகீல் அக்தர் கூறினார். பேட்டியின்போது துணை கமிஷனர்கள் மனோகரன், ஜெயகவுரி, முத்துச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Source: http://www.dinakaran.com
No comments:
Post a Comment