உ.பி.
மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ரூப்சந்த்பூர் கிராமத்தை சேர்ந்த கீதாதேவி (38). வயிற்று வலிக்காக ஜான்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு கடந்த ஜூலை 7ம் தேதி ஆபரேஷன் மூலம் கட்டி அகற்றப்பட்டது. ஆனாலும், வயிற்று வலி குறையவே இல்லை. மீண்டும் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்ற கீதாதேவிக்கு ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, வயிற்றில் கட்டிக்கு பதிலாக மர்ம பொருள் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், கீதா தேவிக்கு உடனடியாக ஆபரேஷன் செய்தனர். வயிற்றை அறுத்து பார்த்தபோது, ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட சிறிய டவல் (துண்டு) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை உடனடியாக அகற்றினர். கட்டியை அகற்றிவிட்டு, கவனக் குறைவாக டவலை உள்ளே வைத்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment