
அமெரிக்காவின் ஆக்லகாமா பகுதியின் 3 நகரங்களில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் பதவிக்கு (நம்மூர் நாட்டாமை போல) தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஜான் மன்தூத் நிற்கிறார். மும்முனை போட்டி நிலவும் தேர்தலில், ‘எனது அப்பாவுக்கு ஓட்டு போடாதீர்கள்’ என ஜானின் மகள் ஜேன் பிரசாரம் அனல் பறக்கிறது.
நல்ல குடும்பஸ்தராக உள்ளவருக்கே நீதி சொல்லும் பதவியை அளிப்பது மக்களின் வழக்கம். எனவே, ‘எனக்கு 3 மகள்கள், நிறைய பேரன், பேத்திகள்’ என்று ஜான் விளம்பரம் செய்து வருகிறார். ஆனால், ‘இதுபோன்ற எந்த சொந்தத்துடனும் ஜானுக்கு தொடர்பே இல்லை. அவர் நம் பகத்தன்மை இல்லாதவர். அவரால் சரியாக நீதி வழங்க முடியாது’ என்று மகள் ஜேன், தனது கணவர் ஆண்ட்ரூவுடன் இணைந்து பத்திரிகை களில் விளம்பரம் தருகிறார். இதற்காக ஒரு இணைய தளத்தையே இந்த தம்பதி தொடங்கியுள்ளது. இதுபற்றி ஜான் மன்தூத் கூறுகையில், ‘‘1981ல் மனைவியை விவாகரத்து செய்தேன். அப்போது சிறுமியாக இருந்த ஜேன், அந்த பிரிவால் இப்போது என்னை வெறுக்கிறாள். அது வும் காரணமாக இருக்கலாம்’’ என்றார்.
No comments:
Post a Comment