
இதற்காக பூசாரிகள் ரஞ்சித், சந்திரன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் 58 நாட்கள் விரதமிருந்தனர். இந்த ஆண்டு விழா கடந்த வாரம் தொடங்கியது. சிவகங்கை தெப்பக்குளத்திலிருந்து நேற்று முன்தினம் அலகு குத்தி பால்குடம் சுமந்து, ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் 7 பானைகளில் பொங்கல் வைத்து, காவல் தெய்வங்களை வழிபட்டனர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காளியம்மன் முன்பு, 23 எருமைகளை பலியிட்டு, அவற்றின் ரத்தத்தை குடித்தனர். நோயின்றி வாழ குழந்தைகளுக்கும், எருமை ரத்தத்தை குடிக்க கொடுத்தனர்.
மேலும், ஒரு எருமைக்கு 3 வெள்ளாடுகள் என்ற கணக்கில், 69 வெள்ளாடுகளையும், பலியிட்டு பூஜை நடத்தினர். இதையடுத்து, இன்று மாலை பலியிடப்பட்ட எருமை தலைகளை தட்டில் ஏந்தி, ஊர்வலம் செல்லும் மது எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
No comments:
Post a Comment