Thursday, August 12, 2010

இறந்த மாணவனுக்கு ஃபீஸ்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஆறு மாதங்களுக்கு முன் இறந்துபோன மாணவனுக்கு ஃபீஸ் கட்டுமாறு தந்தைக்கு 2 முறை பள்ளி எஸ்எம்எஸ் அனுப்பியது. வெறுத்து போன தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார். கொல்கத்தாவில் உள்ளது லா மார்டினர் பள்ளி. அதில் 6ம் வகுப்பு படித்த மாணவன் ரோவன். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவனை பள்ளி தலைமை ஆசிரியர் சுனிர்மால் சக்ரவர்த்தி, பிரம்பால் அடித்தார்.

வகுப்பறையில் குறும்பு செய்ததாக காரணம் கூறினார். சம்பவம் நடந்த 4 நாட்களில் அவமானம் தாங்காமல்  ரோவன் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா அல்லது மாணவனின் வயதுக்கேற்ற நடத்தை பற்றி அக்கறையில்லையா என விவாதங்கள் நடந்தன. அப்போது பேட்டி அளித்த தலைமை ஆசிரியர், மாணவர்களை பிரம்பால் அடிக்கக்கூடாது என சட்டம் இருப்பது தனக்கு தெரியாது என்றார்.

இந்நிலையில், மகனை இழந்து 6 மாதங்களாக சோகத்தில் தவிக்கும் ரோவனின் பெற்றோருக்கு பள்ளியில் இருந்து சமீபத்தில் எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்கள் மகனின் கல்விக் கட்டணமாக ஸி6,225 ஓரிரு நாளில் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது.
கொதித்துப் போன தந்தை அஜய் ராவ்லா, பள்ளிக்கு நேரில் சென்று நிர்வாகத்தின் லட்சணம் பற்றி புகார் செய்தார்.

இனி அதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உறுதி தரப்பட்டது. மீண்டும் ஓரிரு நாட்கள் முன் எஸ்எம்எஸ் வந்தது. அதில் ரோவன் கல்வி கட்டணமாக ஸி9,000 பிடித்தம் செய்யப்படும் என்று இருந்தது. நொந்து போன அஜய் ராவ்லா, கொல்கத்தா போலீசில் புகார் செய்தார்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனிடமும் பள்ளியின் அலட்சிய போக்கு பற்றி புகார் அளித்தார். அவற்றின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

2 comments:

சாமக்கோடங்கி said...

பிணம் தின்னும் கழுகுகள் கூட இறக்கம் படைத்தவையே.. தனது இரை இறந்த பின்னரே அவை அதனை உண்ணும்... ஆனால் இது போன்ற இரக்கமில்லாத மனிதர்களைப் பார்க்கும்போது மனம் கொதிக்கிறது... இவர்கள் மாந்தர்களாக இருக்கவே லாயக்கு அற்றவர்கள்.. எப்படி ஆசிரியர் தொழிலில் இருக்கிறார்கள்... கொடுமை.. பணம் பணம் என்று ஒரு மாயையைத் தேடி எல்லோரும் அலைகின்றோம்.. கடையில் நிம்மதியை அடையாமல் மண்ணோடு மண்ணாகின்றோம்..

Jesus Joseph said...

thanks for your comments