
காட்டுத் தீயை அணைக் கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை.
எனவே, விமானம் மூலம் வானில் பறந்த படியே தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.
இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. இது ரஷிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானத்தில் விமானியாக இருந்துள்ளார். அது தான் தற்போது இவருக்கு கை கொடுத்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ரஷியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அப்பகுதிகளுக்கு சென்ற பிரதமர் புதின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
வருகிற 2012-ம் ஆண்டு ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவர் தயாராகிறார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment