Wednesday, August 11, 2010

மதுபானங்கள் படையல்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateதேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு சுயம்பு வடிவத்தில் சனி பகவான் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இக்கோயிலில் சோணை கருப்பணசாமிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஆடி மாதம் 4வது சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு  பூஜை நடைபெறும். அதற்கு மறுநாள் சோணை கருப்பணசாமிக்கு இரண்டு நாள் விழா நடைபெறும். அதன்படி கடந்த 9ம் தேதி மாலை சோணை கருப்பணசாமிக்கு விழா தொடங்கியது.

நேற்று முன்தினம் மாலையில் சோணை கருப்பணனுக்கு செய்முறை விழா தொடங்கியது. இதில் பக்தர்கள் 2 ஆயிரம் மதுபாட்டில்களை செய்முறையாக (காணிக்கை) வழங்கினர். மதுபாட்டில்களை வழங்கும் பக்தர்களின் பெயர், ஊர், மதுபான அளவு போன்றவை குறித்தும் கோயில் நிர்வாகத்தினர் செய்முறை நோட்டில் எழுதி வைத்தனர்.  இந்த மதுபானங்களை கோயில் மூலஸ்தானத்தில் அடுக்கி வைத்து சாமிக்கு படையல் போட்டு பூஜை நடந்தது. பின்னர் கோயிலில் வாணவேடிக்கை நடந்தது. தொடர்ந்து கோயில் கதவுகளை சாத்திக் கொண்டு சாமியின் முன்புறம் உள்ள ஒரு சிறிய குடுவையில் ஒவ்வொரு பாட்டிலாக உடைத்து ஊற்றினர். இதில் ஊற்றப்படும் மதுபானம் எங்கு செல்கிறது என்பதை யாரும் அறிய முடியவில்லை. இந்த பூஜை நேற்று அதிகாலை வரை நடந்தது.  விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மது பாட்டில்களுடன் குவிந்தனர்.

மெக்காவில் உலகின் பெரிய கடிகாரம்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateமுஸ்லிம் இனத்தவர்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பிரமாண்டமான மசூதியில் உலகின் பெரிய கடிகாரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. புனித மாதமான ரம்ஜான் மாதத்தின் முதல் வாரத்தில் இது முறைப்படி இயக்கி வைக்கப்படும். நான்கு பக்கமும் கடிகாரம் இயங்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. 601 மீட்டர் உயரம் உள்ள கடிகார டவரில் பொருத்தப்பட்டுள்ள இந்த கடிகாரத்தின் உயரம் மட்டும் 251 மீட்டர் ஆகும். இஸ்லாமிய பாரம்பரிய கலையை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாரி சொல்ல மறுத்தார் பயணி வேலை உதறினார் விமான ஊழியர்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார்.

கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி. தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார்.

விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர். தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின.

வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.
விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார்.

பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார். விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது.

ரஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட புதின்; விமானியாக செயல்பட்டார்

ரஷியாவில், விமானம் மூலம் காட்டுத் தீயை அணைக்கும்    முயற்சியில் ஈடுபட்ட புதின்;    விமானியாக செயல்பட்டார்பருவ நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தால் ரஷிய காடுகளில் தீப்பிடித்து எரிகிறது. இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள புகை மூட்டம் மாஸ்கோ நகரம் முழுவதும் பரவியுள்ளது. இது அங்கு வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
 
காட்டுத் தீயை அணைக் கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முழுமையாக தீயை அணைக்க முடியவில்லை.
 
எனவே, விமானம் மூலம் வானில் பறந்த படியே தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரஷிய பிரதமர் விளாடிமிர் புதின் நேற்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
 
மாஸ்கோவில் இருந்து தீயை அணைக்க புறப்பட்ட பீ-200 விமானத்தில் திடீரென ஏறினார். விமானியின் அருகேயுள்ள துணை விமானியின் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் விமானியாக செயல்பட்டு வானில் பறந்த படி எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தார்.
 
இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. இது ரஷிய மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போர் விமானத்தில் விமானியாக இருந்துள்ளார். அது தான் தற்போது இவருக்கு கை கொடுத்துள்ளது.
 
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ரஷியாவில் காட்டுத் தீ பரவி வருகிறது. ஆயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அப்பகுதிகளுக்கு சென்ற பிரதமர் புதின் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
 
வருகிற 2012-ம் ஆண்டு ரஷியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவர் தயாராகிறார் என்று அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஆஸ்பத்திரி, அரசு பொதுமருத்துவமனை மீது பரபரப்பு புகார்: சென்னையில் தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் ஏழை பெண்

தனியார் ஆஸ்பத்திரி, அரசு பொதுமருத்துவமனை மீது பரபரப்பு புகார்: சென்னையில் தவறான சிகிச்சையால் உயிருக்கு போராடும் ஏழை பெண்சென்னையில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையாலும், அரசு பொது மருத்துவமனையின் மெத்தன போக்காலும் ஏழை இளம்பெண் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.
 
அவர் பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பரிதாப நிலையில் உள்ளார்.
 
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் ராம்நாத் (வயது 30), டெய்லர் தொழில் செய்கிறார். இவரது மனைவி குணசுந்தரி (21). இவர்களுக்கு 2 மாத ஆண் கைக்குழந்தை உள்ளது. குணசுந்தரி கடந்த மாத இறுதியில் காய்ச்சல், இருமல், சளித்தொல்லையால் அவதிப்பட்டார். இதற்காக நங்கநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்றார்.
 
பின்னர் அங்கு பணிபுரியும் டாக்டர்கள் எழுதி கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார். அந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு குணசுந்தரிக்கு வியாதி அதிகமாகிவிட்டது. அவரது உடல் முழுவதும் சிறிய, சிறிய கொப்புளங்கள் உண்டாகியது. உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதுபோல புண்களாகிவிட்டன. இதனால் அவரது முகம் கோரமாக மாறியது. கண்பார்வையும் மங்கிவிட்டது.
 
பின்னர் குணசுந்தரியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே சாப்பிட்ட மருந்து, மாத்திரையினால் ஏற்பட்ட அலர்ஜி (டிரக் அலர்ஜி) காரணமாக இவ்வாறு உடல் முழுக்க கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும் என்றும் தெரிவித்தனர்.
 
உடனே குணசுந்தரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெறுகிறார்.
 
இந்த நிலையில், தவறான சிகிச்சை கொடுத்த தனியார் மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து குணசுந்தரியின் கணவர் நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார்.
 
ஆனால், சம்பவம் நடந்தது நங்கநல்லூர் என்பதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கும்படி கமிஷனர் அலுவலக போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். ஆனால் ஏற்கனவே பழவந்தாங்கல் போலீசில் புகார் கொடுத்து பார்த்தோம், சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
 
எனவே, தான் இங்கு புகார் கொடுக்க வந்தேன் என்று குணசுந்தரியின் கணவர் கூறினார். மறுநாள் வரும்படி போலீசார் தெரிவித்தனர். இதன்படி நேற்று குணசுந்தரியின் கணவர் ராம்நாத், தனது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேருடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டார்.
 
குணசுந்தரிக்கு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சை காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு பொது மருத்துவமனையிலும் குணசுந்தரிக்கு அவ்வளவு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது கண்பார்வை மங்கிக்கொண்டே போகிறது. கண் டாக்டர் ஒருவரை வரவழைத்து சிகிச்சை அளிப்பதாக 3 நாட்களாக சொல்லுகிறார்கள். கண் டாக்டர் வந்தபாடில்லை.
 
உடல் முழுக்க புண்ணாக இருப்பதால் குணசுந்தரியால் அவரது கைக்குழந்தைக்குக்கூட தாய்ப்பால் கொடுக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளார். எனவே இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு குணசுந்தரிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை காணவேண்டும் என்று பொதுமக்கள் பரபரப்பாக பேட்டி கொடுத்தனர்.

சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் சென்று கொள்ளையர்களிடம் இருந்து கணவரை மீட்ட வீரப்பெண்

சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் சென்று    கொள்ளையர்களிடம் இருந்து    கணவரை மீட்ட வீரப்பெண்உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் அஜித்சிங். கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 6-ந்தேதி ஆக்ரா சென்று விட்டு திரும்பியபோது சம்பல் பள்ளத்தாக்கில் செயல்படும் பீமா தலைமையிலான கொள்ளை கும்பல் அவரை கடத்தி சென்றது. பின்னர் அவர்கள் அஜீத்சிங்கை முக்கியா என்ற கொள்ளை கும்பலிடம் கொடுத்து விட்டனர்.
 
அவர்கள் அஜீத்சிங்கை சம்பல் பள்ளத்தாக்கு காட்டுக்குள் கொண்டு சென்றனர்.
 
பின்னர் அவருடைய மனைவி சாவித்திரிக்கு போன் செய்து உங்கள் கணவரை விடுவிக்க வேண்டு மானால் குறிப்பிட்ட பணம் வேண்டும். இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.
 
சாவித்திரி கொள்ளையர் களிடம் எங்கள் வீட்டில் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். இவ்வளவு பணம் தர முடியாது என்று கூறினார். அதை அவர்கள் ஏற்க வில்லை.
 
கணவரை எப்படியாவது மீட்க வேண்டும் என்று சாவித்திரி துடித்தார். போலீசுக்கு சொன்னால் கணவர் உயிருக்கு ஆபத்து என்று கருதிய சாவித்திரி தனி ஆளாக கொள்ளையனிடம் சென்று கணவரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
 
இதற்காக வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அவர் கொள்ளையர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார். அவர் வைத்திருந்த நகை, பணத்தின் மதிப்பு கொள்ளையர்கள் கேட்ட தொகையை விட மிக குறைவு, லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே அதன் மதிப்பு இருந்தது.
 
இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தனி ஆளாக காட்டுக்குள் சென்றார். கொள்ளையர்களுடன் தொடர்பு கொள்வதற்காக செல்போன் மட்டும் வைத்திருந்தார்.
 
8 மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று கொள்ளையர்கள் இருந்த இடத்தை அடைந்தார்.
 
தான் கொண்டு சென்ற பணம்-நகைகளை கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டு கணவரை விடுவிக்குமாறு கேட்டார். எங்கள் வீட்டில் இவ்வளவு தான் பணம் இருக்கிறது. நீங்கள் கேட்ட அளவு பணம் தர வேறு வழியே இல்லை என்று குடும்ப கஷ்டத்தையும் கூறினார்.
 
அவர் கூறியது கொள்ளையர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரு பெண் இவ்வளவு தூரம் காட்டுக்குள் கஷ்டப்பட்டு வந்து இருக்கிறாரே? என்று பரிதாபப்பட்டனர்.
 
எனவே கொள்ளையர்கள் சாவித்திரி கொடுத்த பணம்-நகை அனைத்தையும் அவரிடமே திருப்பி கொடுத்தனர். கணவரையும் விடுவித்தனர். அது மட்டும் அல்ல செலவுக்காக ரூ.5100-ஐ சாவித்திரியிடம் கொடுத்தனர்.
 
பின்னர் கொள்ளையர்கள் அனைவரும் சாவித்திரி காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டு கொண்டனர்.
 
சாவித்திரி கணவரை பத்திரமாக மீட்டு கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

சரியாக படிக்காததால் 11 மாணவ மாணவிகளுக்கு விறகு கட்டையால் சூடு போட்ட ஆசிரியை சிறையில் அடைப்பு

சரியாக படிக்காததால்    11 மாணவ மாணவிகளுக்கு விறகு    கட்டையால் சூடு போட்ட ஆசிரியை    சிறையில் அடைப்புஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் ஜமான்ருல் பள்ளி கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் சுருதா கீர்த்தி.
 
இப்பள்ளியில் 2 மற்றும் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் வீட்டுப்பாடம் சரியாக செய்வதில்லை. சரியாகபாடம் படிப்பதும் இல்லை.


இந்நிலையில் நேற்றும் 11 மாணவ- மாணவிகள் வீட்டுப்பாடம் படிக்காமல் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களிடம் ஏன்படிக்க வில்லை என்று கேட்டதற்கு டி.வி.யில் சினிமா பார்த்ததால் படிக்கவில்லை என்றனர்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை மதிய உணவு சமையல் கூட அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகுக்கட்டையை எடுத்து வந்து 11 பேருக்கும் சூடு போட்டார். இதில் மாணவ- மாணவிகள் அலறித் துடித்தனர். ஆனாலும் விட வில்லை. கை, கால், முதுகு போன்ற பகுதிகளில் ஓட ஓட விரட்டி சூடு வைத்தார்.
 
அவர்களது அலறல் சத்தம் கேட்டு கிராமமக்கள் ஓடி வந்து மாணவ-மாணவிகளை மீட்டனர். அவர்களுக்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இதுபற்றி மொகராபாத் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சுருதா கீர்த்தியை கைது செய்தனர். கிராமமக்கள் கூறும்போது, தலைமை ஆசிரியையின் கடுமையான தண்டனைக்கு பயந்துதான் எங்க விட்டு குழந்தைகள் பள்ளிக்கு போக மறுக்கின்றன. சுருதாவுக்கு மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்