Tuesday, October 28, 2008

பீகார் மாநிலத்தில் மகாபாரத 'நவீன' சூதாட்டம்!


பாட்னா: மகாபாரத கதையில், சூதாட்டத்தில் கவுரவர்களிடம் மனைவி திரவுபதியை இழந்தது போல, பீகார் மாநிலத்தில், சூதாட்டக்கணவன், தன் நண்பர்களிடம் மனைவியை இழந்தான்; நண்பர்கள் உரிமை கோரவே, போலீசில் தஞ்சம் அடைந்தாள் அப்பாவிப் பெண். பீகார் மாநிலம் சேகர்புரா பகுதியை சேர்ந்தவர் முகமது முக்தார்; அவர் மனைவி ஷப்ணம். நண்பர்களுடன் சூதாடும் பழக்கம் உள்ளவர் முக்தார். இதில் ஏகப்பட்ட பணம், வீட்டில் உள்ள பொருட்களை இழந்து விட்டார். சமீபத்தில், வீட்டில் எந்த பொருளும் இல்லாத நிலையில், மனைவியை வைத்து சூதாடினார். அப்போது நான்கு நண்பர்கள் அவருடன் சூதாடினர். அதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டனர். இதையடுத்து, மனைவி ஷப்ணத்தை தங்களுடன் வரும்படி வற்புறுத்தினர். "என்னை வைத்து என் கணவன் சூதாடியது எனக்கு தெரியாது. நான் உங்களுடன் வர மாட்டேன். மிரட்டினால் போலீசில் புகார் செய்வேன்' என்று கூறினார். ஆனால், நண்பர்களோ கேட்பதாக இல்லை. அவரை வலுக்கட்டாயமாக தங்களுடன் வரும்படி கையை பிடித்து இழுத்தனர். பயந்துபோன ஷப்ணம், தன் இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சல் போட்டார். இதையடுத்து, கிராமத்தில் உள்ளவர்கள் ஷப்ணத்தை காப்பாற்றி, நண்பர்களை விரட்டினர். நண்பர்களால் தனக்கு தொடர்ந்து தொந்தரவு வரும் என்று நினைத்து, போலீசில் புகார் செய்தார் ஷப்ணம்.
தகவலறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், கிராமத்துக்கு விரைந்து, முக்தாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரின் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

தீபாவளியன்று ரூ_100 கோடி சரக்கு விற்பனை 'டாஸ்மாக்' சாதனை


தமிழக டாஸ்மாக் கடைகளில் தீபாவளியன்று சரக்கு விற்பனை இரு மடங்கு அதிகரித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் "டாஸ்மாக்'கில் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள 6,700 டாஸ்மாக்
கடைகளில் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் "சரக்கு' விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.இதன் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.


அரசு தீவிர முயற்சி: சாதாரண நாட்களை விட பொங்கல், புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் விற்பனை இரு மடங்கு அதிகரித்து வந்துள்ளது. விழாக்களில் புத்தாடை, பலகாரம் போன்றவையோடு மதுபான விருந்தையும் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியிருப்பதே இதற்கு காரணம்."டாஸ்மாக்' மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக "டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது.


"டாஸ்மாக்' நிர்வாகம் முழுமூச்சில் : சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும், மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க "டாஸ்மாக்' நிர்வாகம் முழுமூச்சில் இறங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் கூடுதலாக சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் டாஸ்மாக் கிடங்குகள் திறந்து வைக்கப்பட்டு, சரக்கு டெலிவரி செய்யப்பட்டது.


ரம், பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஒயின் :
தீபாவளியன்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி பாவளி
வந்ததால், இரு நாட்களிலும் விற்பனை களை கட்டியது.சாதாரண நாட்களில் ரம், பிராந்தி, விஸ்கி, வோட்கா, ஒயின் உள்ளிட்ட அயல்நாட்டு மது வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது


இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள் அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.சென்னையில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடந்துள்ளது. சேலத்தில் இரண்டு நாட்களிலும் எட்டு கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.சாதாரண நாட்களில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனை நடந்து வந்தது. இது தீபாவளியன்று மூன்று மடங்கு அதிகரித்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது.


சரக்குகள் விலை அதிகரிப்பு: கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி மதுபானங்கள் விலை ஏற்றப்பட்டது. அப்போது குவாட்டருக்கு நான்கு ரூபாய் என்ற அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது. விலையேற்றம் செய்யப்பட்டு 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் மறைமுகமாக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதால் குடிமகன்கள் திர்ச்சியடைந்துள்ளனர்.வழக்கமாக விற்பனையாகும் சரக்குகளின் பெயரில் கூடுதலாக "டீலக்ஸ்' என்ற லேபிள் சேர்க்கப்பட்டு, விலை ஏற்றப்பட்டுள்ளது. பழைய பெயரில் உள்ள சரக்குகள் "சப்ளை' நிறுத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்ட மது வகைகள் மட்டுமே
"டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.


குடிமகன்கள் அதிருப்தி : உதாரணமாக, "சிவாஸ் டிஸ்டல்லரீஸ்' தயாரிப்பு மதுவகையான மானிட்டர் பிராந்தி ஒரு குவாட்டர் விலை 57 ரூபாயாக இருந்தது. தற்போது "டீலக்ஸ் மானிட்டர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 59 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 115 ரூபாய்க்கு விற்று வந்த மானிட்டர் "ஆப்' தற்போது டீலக்ஸ் என்ற பெயரில் 120 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுகிறது. "மானிட்டர் விஸ்கி' ரகமும் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற கம்பெனிகளும் பழைய மது ரகங்களின் சப்ளையை படிப்படியாக நிறுத்தி வருகின்றன.இவ்வாறு பழைய மது ரகங்களை நிறுத்திவிட்டு, பழைய பெயருடன் "டீலக்ஸ்' என்று சேர்த்து, விலையை அதிகரித்து விற்கும் தந்திரத்தை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு, குவாட்டருக்கு இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை திடீர் என விலை
அதிகரிக்கப்பட்டுள்ளது.


மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி, மது வகை விலையை அதிகரிக்க வேண்டும் என மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அரசு அனுமதிக்காததால் இந்தப் பெயர் மாற்றத் தந்திரம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது."டாஸ்மாக்' நிர்வாகம் இப்படி நூதனமாக விலையை உயர்த்தியுள்ளதால் குடிமகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பணக்காரர் - ஏழைகள் இறப்பு இடைவெளி 40 ஆண்டு


புதுடில்லி: பணக்காரர்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர்; ஏழைகள் முன்னதாகவே இறக்கின்றனர். பணக்காரர்கள் - ஏழைகள் இறப்பு இடைவெளி 40 ஆண்டுகள்! - உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. பல நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: ஜப்பானியர் தான் அதிக ஆண்டுகள் வாழ்கின்றனர்; இவர்களின் சராசரி அதிகபட்ச ஆயுள் 81 ஆண்டு ஆறு மாதம். மிகவும் குறைவான ஆண்டுகள் வாழ்பவர்கள் ஜாம்பியா மக்கள். இவர்களின் சராசரி வாழ்நாள் 32 ஆண்டுகள் எட்டு மாதங்கள். உலக நாடுகளில் நடத்தப் பட்ட சர்வேயின் அடிப்படையில் பார்த்தால், சர்வதேச அளவில் மக்களின் சராசரி வாழ்நாள் 67 ஆண்டுகள். இந்தியாவில், இந்த சராசரி வாழ்நாள் 63 ஆண்டு. ஆண்களுக்கு சராசரி வாழ்நாள் 62; பெண்களுக்கு 64 ஆண்டு.


ஏழை மக்களுக்கு அரசு சுகாதார செலவுகளை செய்வதில் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. ஒருவருக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 800 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஏழை நாடுகளில் உள்ள நிலை இது. அதுவே, பணக்கார நாடுகளில் அதிகபட்சமாக ஒருவருக்கு செலவிடப்படும் ஆண்டு தொகை மூன்று லட்சம் ரூபாய். ஆனால், இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், பணக்கார நாடுகளிலும் ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் சுகாதார செலவு குறைந்துவருகிறது. அரசு உதவி பெறாமல், தாங்களாகவே சுகாதார செலவுகளை செய்யும் ஏழை, நடுத்தர மக்களின் எண்ணிக்கை 560 கோடி. அரசு உதவி குறைவதால், இவர்களின் எண்ணிக்கை 10 கோடி அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுகாதாரத்துக்கு அரசு செய்யும் செலவை விட, மக்களில் அவரவர் தங்கள் பட்ஜெட்டில் செலவு செய்வது தான் அதிகம். அரசின் மொத்த சுகாதார செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் வெறும் ஒரு சதவீதம் தான். ஆனால், மக்கள் செலவு செய்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தாய், சேய் நல சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில், இந்தியா, அதற்கு நிகரான பொருளாதார நாடுகளை விட பின்தங்கியுள்ளது. இந்தாண்டு, உலகம் முழுவதும் 13 கோடியே 60 லட்சம் பெண்கள், குழந்தை
பெறப்போகின்றனர். அவர்களில் ஐந்து கோடியே 80 லட்சம் பேருக்கு தாய், சேய் நல உதவிகள் கிடைப்பதில்லை. பல நாடுகளில் அதற்கு போதுமான நிதி இல்லை.

இந்தியாவில், 43 சதவீத பெண்களுக்கு சுகாதார உதவியை அரசால் கொடுக்க முடியாத நிலையில் நிதி பற்றாக்குறை உள்ளது. இவர்கள் தாங்களே செலவு செய்து கொள்வதுடன்,போதுமான சுகாதார வசதிகளை பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை, நகரங்களில் வாழும் பெண்களில் 75 சதவீதம் பேர் சுகாதார வசதிகளை பெறுகின்றனர்; கிராமங்களில் உள்ள பெண்களில் 39 சதவீத பேருக்கு தான் சுகாதார வசதி கிடைக்கிறது. இன்னமும் கூட, 59 சதவீத பெண்கள்,வீட்டில் தான் பிரசவம் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இப்படிப்பட்ட நிலை, இந்தியாவில் மட்டுமல்ல, ஆப்ரிக்க நாடுகளில் பலவற்றில் உள்ளது. கென்யாவில் ஐந்து வயதுக்கு கீழ் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம்.

புஷ்டியான குழந்தைகள் அழகா ஆபத்தா


சத்துணவு பற்றாக்குறையால் ஒருபுறம் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் உடல் உழைப்பில்லாமல் உட்கொள்ளும் சத்தான
உணவால் ஏற்படும் நோய்களும் அதிகரித்து வருகின்றன. உணவு பஞ்சத்தால் ஏற்பட்ட நோய்களை சமாளிப்பதை விட, இன்று உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படும் நோய்களை சமாளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் முடிந்துவிட்டாலும், சமச்சீரான சத்துணவை அனைத்து மக்களுக்கும் சீராகக் கொண்டுசெல்வதில் இன்னும் பின்தங்கியே உள்ளது. இதனால் வசதி மிக்க மக்கள் அதிக ஊட்டச்சத்தால் ஏற்படும் நோய்களாலும், வசதி இல்லாதவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்களாலும் தவிக்கின்றனர்.


எதனால் குறைபாடு? : அரிசி, கோதுமை ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தாலும், பருப்பு வகை விளைச்சலில் பற்றாக்குறை உள்ளது. தவிர, சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பிற தானிய உற்பத்தி அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நகரத்தில் வசிக்கும் மக்கள்தொகையும் 40 சதவீதம் வரை அதிரித்துள்ளது. இதனால் குழந்தைகள் உள்ளிட்ட பிறருக்கு சரிவிகித சத்துணவு முழுமையாகக் கிடைப்பதில்லை. நமது முன்னோர் இயற்கையாக விளைவித்த காய்கறிகள், பழங்கள், விளைபொருட்களால் ஆன உணவை உண்டனர்; பல மைல் தூரம் காலாற நடந்ததால் உடலில் கொழுப்பும் இனிப்பும் சேராமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்றைய வேகமான நகர வாழ்க்கையில் வாகனங்களில் பயணிப்பது அதிகரித்து விட்டது; உடல் உழைப்பே இல்லாமல் போய் விட்டது. கிடைத்ததை உண்டு பறக்கும் அவசர வாழ்க்கை முறை நோய்களை வரவேற்கிறது. பெற்றோரின் தவறான வாழ்க்கை முறைக்கு குழந்தைகளும் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.


புஷ்டியால் ஆபத்து: பீசா, பப்ஸ், பர்கர், நூடுல்ஸ், சிப்ஸ் போன்ற "பாஸ்ட் புட்' உணவுக்கு அடிமையாகி வரும் குழந்தைகள், வயதை மீறிய உடல்வாகுடன் வலம் வருகின்றனர். இதை உணராத பெற்றோர், தங்கள் குழந்தைகள் அதிக புஷ்டியாக வளர்வதாக மகிழ்கின்றனர் பெற்றோர் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் "கொழுகொழு குழந்தை' போட்டிகளில் தங்கள் குழந்தைகளை பங்கேற்கச் செய்து பெருமைப்படுகின்றனர். இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்
விதமாக, "சிறு வயதில் வயதுக்கு மீறிய எடையுடன் உள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இருதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள் வர வாய்ப்புள்ளது' என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். வளரும் தலைமுறையை நோயாளிகளாக மாற்றி வரும் இன்றைய உணவு முறையின் அபாயம் பற்றி, கோவை, அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு குறித்து துறைத் தலைவர் பிரேமகுமாரி கூறுகையில், ""அதிகச் சத்து பிரச்னை, வசதியான பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் மத்தியில் மட்டுமே உள்ளது. சராசரி எடையை விட 10 சதவீதம் அதிக எடையுள்ள குழந்தைகள் "ஓவர் வெயிட்' குழந்தைகளாகவும், 20 சதவீதம் அதிக எடை உள்ள குழந்தைகள் "ஒபிசிட்டி' குழந்தைகளாகவும் கருதப்படுகின்றனர்,' என்றார்.


ஊளைச்சதை வேண்டாம்: சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து உலக சுகாதார கழகம் ஆய்வு நடத்தியது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 12.4 சதவீத சிறுவர்கள் ஊளைச்சதை (ஒபிசிட்டி) பிரச்னையால் பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. அவிநாசிலிங்கம் பல்கலையின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர்கள் கல்பனாவும் லட்சுமியும், கோவையில் 20 தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 முதல் 12 வயது வரையிலான 9,000 குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் குறித்து ண்மையில் ஆய்வு நடத்தினர். இதில் 9 சதவீத குழந்தைகள் அதிக எடையுடனும், 7 சதவீத
குழந்தைகள் "ஒபிசிட்டி' பிரச்னையுடன் தவிப்பதும் கண்டறியப்பட்டது.


இது குறித்து பேராசிரியர் கல்பனா கூறியதாவது: குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு பெற்றோரே முழுக் காரணம். குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர்; குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. "டிவி'
பார்க்கும் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க, குழந்தைகளின் கைகளில் நொறுக்குத் தீனி திணித்து கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் ஈடுபடுத்துகின்றனர். உடல் உழைப்பு இல்லாத இக்குழந்தைகள் வயதுக்கு மீறிய எடையுடன் வளர்கின்றனர். நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்குதான் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் குழந்தைகளை ஒரு மணி நேரம் சுதந்திரமாக விளையாட அனுமதிப்பதே இப்பிரச்னைக்கு தீர்வு. இவ்வாறு கல்பனா கூறினார்.


உணவின் இன்னொரு பக்கம்: ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக இன்றைய பள்ளிக் குழந்தைகளில் "உயரத்துக்கு ஏற்ற எடையின்மை', "வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை' ஆகிய இரு குறைபாடுகளும் அதிகரித்து வருவதும், 70 சதவீத "டீன் ஏஜ்' மாணவர்களுக்கு ரத்த சோகை, அயோடின் குறைபாடு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாதவர்களின் எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது; இன்று 19 சதவீதமாக உயர்ந்துள்ளது. 12 முதல் 60 மாதம் வரையுள்ள குழந்தைகளில் 50 முதல் 60 சதவீதத்தினர் எடைக்குறைவாக உள்ளனர்.
குழந்தைப் பருவத்திலிருந்து தொடரும் ஊட்டச்சத்து குறைபாடு, அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று ஆகியவை இதற்கான முக்கிய காரணங்கள்.


நுண்ணூட்டச் சத்து குறைபாடு: இன்று நாடு சந்திக்கும் முக்கிய பிரச்னை நூண்ணூ ட்டச் சத்து குறைபாடு. சத்து குறைவால் எடைக் குறைவான குழந்தை பிறப்பு, குறைந்த செயல்திறன், தொற்றுநோய் பாதிப்பு, கருச்சிதைவு, மூளை வளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாட்டின் 321 மாவட்டங்களில் நடத்திய ஆய்வில், 260 மாவட்டங்களைச் சேர்ந்த 10 சதவீதத்துக்கு அதிகமானோர் "காய்ட்டர்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேசமயம், வசதி படைத்தவர்கள் அதிக ஊட்டச்சத்து உணவு உண்பதால் ஏற்படும் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். தொந்தி பிரச்னை சமீபகாலமாக குழந்தைகளையும் பாடாய்ப் படுத்தி வருகிறது. இந்தியாவில் இன்று 30 சதவீத குழந்தைகள் "ஒபிசிட்டி' பிரச்னையில் சிக்கித் தவிப்பதாக, டில்லி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, கோவையை சேர்ந்த உணவு மற்றும் "பிட்னஸ்' சிகிச்சை டாக்டர் அசன் முகமது கூறுகிறார். ""முன்பு பெண் குழந்தைகள் 15 வயதுக்குப் பின்னரே
பூப்பெய்து வந்தனர். நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாகும் இன்றைய பெண் குழந்தைகள், குழந்தைத் தன்மை முழுமையாக விலகாத பத்து வயதுக்குள்ளேயே பூப்பெய்து விடுகின்றனர். இப்பருவத்திலேயே ஹார்மோன் உற்பத்தி துவங்கி விடுவதால், 20 வயதிலேயே உடல் எடை அதிகரித்து நோய்களுக்கு ஆளாகின்றனர்; 25 வயதில் 50 வயது பெண்ணுக்கான தோற்றம் வந்து விடுகிறது. இது உடல் ஆரோக்கியத்தையும் திருமண வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கும்,'' என்கிறார் டாக்டர் முகமது அசன்.


"ஒபிசிட்டி'யை கண்டுபிடிப்பது எப்படி?:
ஒருவர் தனது உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருக்க வேண்டும். உடல் எடையை (கிலோ) உயரத்தின் (மீட்டர்) இரு மடங்குடன் வகுத்தால் "பாடி
மாஸ் இண்டெக்ஸ்' (பி.எம்.ஐ) தெரிந்து விடும். பி.எம்.ஐ. 25 க்கு குறைவாக இருந்தால் நார்மல்'; 25 முதல் 27 க்குள் இருந்தால் அதிக எடை; 27 முதல் 30க்குள் இருந்தால் உங்கள் உடல் ஊளைச்சதையின் ஆதிக்கத்தில் சிக்கி விட்டது என பொருள். பொதுவாக ஆண்களின் வயிறு திருமணத்துக்குப் பின்பும், பெண்களின் வயிறு குழந்தை பிறந்த பின்பும் பெருத்து விடுகிறது. வயிறு, இடுப்புச் சுற்றளவு அதிகரிப்பதுதான் ஆபத்து நெருங்குவதன் அறிகுறி. ஆண்களின் இடுப்புச் சுற்றளவு 37-40 இன்ச் வரையும், பெண்களின் இடுப்பு
32-35 இன்ச் வரையும் இருந்தால் கவலை இல்லை. இந்த அளவு கூடினால் ஆபத்துதான். நேராக நின்றபடி உங்கள் பாதத்தை உங்களாலேயே பார்க்க முடியவில்லை என்றால், நீங்கள் டாக்டரை பார்க்க வேண்டும் என பொருள்


சம்பாதிக்கும் பெண்களால் ஆபத்து: அதிகரித்து வரும் ஊளைச்சதை பிரச்னைக்கு, குடும்ப வருவாய் உயர்ந்துள்ளதும் காரணம். 20 ஆண்டுகளுக்கு முன் வரை பெண்கள் வேலைக்கு செல்வது அபூர்வமாக இருந்த நிலை இன்று மாறி விட்டது. நகரங்களில் வசிக்கும் பெண்களில் 70 சதவீதத்தினர் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். உட்கார்ந்த இடத்திலேயே வேலைகளில் ஈடுபடும் இளம் பெண்கள் உடல் பருத்து, நாற்பது வயது அம்மணிகள் போல் மாறி வருகின்றனர். இவர்களுக்கு பணம் ஒரு பிரச்னை இல்லை என்பதால் வார இறுதி நாட்களில் ஓட்டலில் சாப்பிடுவதை விரும்புகின்றனர். இப்பழக்கம் அவர்களின் குழந்தைகளையும் தொற்றுகிறது. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் ஓட்டல் உணவு ருசிக்கு அடிமையாகி, அதிக உடல் எடை பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.


என்னதான் தீர்வு?: சரிவிகித சத்துணவு பற்றி ஒரு குடும்பத்தில் முதலில் பெண் அறிந்திருக்க வேண்டும்; பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.


குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், குறைந்தபட்சம் ஓராண்டு வரை தாய்ப்பால் புகட்டுவது முக்கியம்.


குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை தவறாமல் போட வேண்டும். வீட்டு உணவில் வாரம் இருமுறை கீரை சேர்க்க வேண்டும். அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தவறாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகள் செய்ய வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

Tuesday, October 21, 2008

காசுக்காக கடலில் மூழ்கும் "வாண்டுகள்'


ராமநாதபுரம்: பண்டைய காலத்தில் தூத்துக்குடி கடலில் மூழ்கி முத்து எடுத்தனர். தற்போது ராமேஸ்வரம் பகுதியில் சிறுவர்கள் மூழ்கி காசு எடுக்கின்றனர். ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில், வாகனங்களை நிறுத்தி ரயில் தூக்கு பாலத்தை வேடிக்கை பார்த்தபின் தீவிற்கு செல்வது வழக்கம்.


பெரும்பாலான பயணிகள் பாம்பன் பாலத்திற்கும் தூக்கு பாலத்திற்கும் இடையில் உள்ள கடல் பகுதிகளில், காசுகளை வீசி எறிந்து விட்டு செல்கின்றனர். கடலில் காசு வீசினால், நன்மைகள் நிகழும் என்பது நீண்ட நாள் ஐதீகம். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வீசும் காசுகளை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கடலுக்குள் குதித்து, மூழ்கி சேகரிக்கின்றனர். இவ்வாறு குதிக்கும் சிறுவர்கள் உப்பு நீரில் இருந்து தங்களின் கண்களை பாதுகாத்துக் கொள்ள கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். பொதுவாக விடுமுறை நாட்களில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதுபோன்ற நாட்களில் தலா ஒரு சிறுவனுக்கு குறைந்தபட்சமாக 100 ரூபாய் கிடைக்கிறது.

நாலுகால் கோழி குஞ்சு


கோவை: பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மனோகரன். இவர் வளர்க்கும் ஒரு கோழி ஒன்பது முட்டைகள் இட்டு, குஞ்சு பொரித்தது. அதில், ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் வித்தியாசமாக உள்ளது. சாதாரண கோழிகளுக்கு இருப்பது போன்று அடிப்பகுதியில் இரண்டு கால்களும், இறக்கையின் பின்புறத்தில் இரண்டு கால்களும் சேர்ந்து, அந்த கோழிக்குஞ்சுக்கு நான்கு கால்கள் உள்ளன. "நான்கு கால்கள் உள்ள இந்த கோழிக்குஞ்சை தாய் கோழி உடன் சேர்ப்பதில்லை. மற்ற கோழிகளும் இந்த கோழிக்குஞ்சை சேர்க்காமல் விரட்டுகின்றன.



அதனால், கூட்டத்தை விட்டு தனித்தே இந்த கோழி குஞ்சு சுற்றி வருகிறது. வேகமாக ஓட முடியாததால், தீவனம் வைத்த உடன் மற்ற கோழிக் குஞ்சுகளைப் போல வேகமாக ஓடிவந்து சாப்பிட முடிவதில்லை. இதனால், மற்ற கோழிக் குஞ்சுகள் தீவனத்தை சாப்பிட்டு விடுகின்றன. எனவே, நாலு கால் கோழிக்குஞ்சை தனியாக பராமரிக்க வேண்டியுள்ளது' என்கிறார்
மனோகரன்.

உலகின் பெரிய தங்க வளையல்!


தஞ்சாவூர்: டாடா குழுமத்தைச் சேர்ந்த டைட்டன் இண்டஸ்டிரீசின் ஆபரணப் பிரிவான ஈரோடு கோல்ட் பிளஸ், உலகின் மிகப்பெரிய 22 காரட் சுத்தமான வளையலை உருவாக்கியது. ஆயிரத்து 830 மில்லி மீட்டர் குறுக்களவும், 140 மில்லி மீட்டர் அகலமும் கொண்ட இந்த வளையலின் எடை 24 ஆயிரத்து 505 கிராம். இதன் மதிப்பு 3 கோடியே 50 லட்சம் ரூபாய்.


இந்த வளையல், நான்கு 22 காரட் வளையங்களின் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது. 30 பொற்கொல்லர்கள் இணைந்து, 21 நாட்களில் இந்த
வளையலை உருவாக்கினர். இந்தியா முழுவதும், கோல்டு பிளஸ் கிளைகளில் மக்கள் பார்வைக்காக இந்த வளையல் வைக்கப்பட உள்ளது. சமீபத்தில், தஞ்சாவூர் கோல்டு பிளஸ் கிளையில் வைக்கப்பட்டிருந்த இந்த "மெகா'
வளையலைப் பார்த்து பொதுமக்கள் வியந்தனர்.

ஜூனியர் மாணவனின் தலையில் ஆணி அடித்த சீனியர் மாணவர்கள்


லக்னோ: ஜூனியர் மாணவனின் தலையில், சீனியர் மாணவர்கள் ஆணி அடித்து கொடுமைப்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் மீரட் மாவட்டத்தில் நடந்துள் ளது. உத்தர பிரதேசம் மீரட்டில் உள்ள ஜெயின் இன்டர் கல்லூரியில், இன் டர்மீடியட் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் விகாஸ். ஜூனியர் மாணவனான இவனை, சீனியர் மாணவர்கள் பலர் கடந்த சில நாட் களாக கேலி செய்துள் ளனர். விகாஸ், பெண்கள் போன்று மென்மையான குரலில் பேசியதால், இப்படி கேலி செய்தனர். இந்தக் கேலிப் பேச்சுக்களை சகித்துக் கொண்டிருந்த விகாஸ், சமீபத்தில் சீனியர் மாணவன் ஒருவனை பட்டப் பெயர் சொல்லி அழைத்தான். இதில், சீனியர் மாணவர்கள் எரிச்சல் அடைந்தனர். கடந்த திங்களன்று விகாஸை பிடித்த அந்த மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் ஆளில்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு பிரம்பாலும், ஹாக்கி மட்டையைக் கொண்டும் தாக்கினர்.


அத்துடன் அவனின் தலையை சுவரிலும் மோத வைத்தனர். அதேநேரத்தில், வேறு இரண்டு மாணவர்கள் விகாஸின் தலையில் சுத்தியல் மூலம் ஆணி
அடித்தனர். விகாஸின் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு அடித்ததும், சீனியர் மாணவர்கள் ஓடி விட்டனர். பின்னர் விகாஸ், தனக்கு நேர்ந்த கொடுமையை தன் உறவினருக்கு மொபைல் மூலம் தெரிவித்தான். அவர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, விகாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். விகாஸின் தலையில் அடிக்கப்பட்ட ஆணி, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவன் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டாலும், இன் னும் டாக்டர்களின் கண்காணிப்பில் தான் உள்ளான்.

உலகை சுற்றும் ரஷ்ய வாலிபர்


சென்னை : நடந்தே உலகைச் சுற்றும் ரஷ்ய வாலிபர் நேற்று சென்னை
வந்தார். இந்தியாவில் இருந்து அடுத்ததாக இலங்கை செல்ல உள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த வாலிபர் செர்கே சிகாசேவ் (34). எம்.பி.ஏ., படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து ஒரே மாதிரியான வேலைகளை செய்வதில் விருப்பம் இல்லாத அவர், நடந்தே உலகைச் சுற்றி வர கிளம்பினார்.கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி ரஷ்யாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல்வேறு நாடுகளை சுற்றிய பின் இந்தியா வந்துள்ளார்.


அவர் நேற்று சென்னை வந்தார்.செர்கே சிகாசேவ், நமது நிருபரிடம் கூறியதாவது:உலகில் உள்ள வெவ்வேறு கலாசாரம், நாகரிகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை நேரடியாக பார்த்து தெரிந்துகொள்ளவும், அதைப் புத்தகமாக எழுதவும் நான் இந்தப் பயணத்தை துவக்கினேன். "வாழ்க்கையில் முடியாதது எதுவும் இல்லை' என்பதே எனது பயணத்தின் கொள்கை.


இதுவரை மங்கோலியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கிழக்கு தைமூர், புரூனே, ஆஸ்திரேலியா, திபெத், நேபாளம் ஆகிய நாடுகளைக் கடந்துள்ளேன். தற்போது இந்தியாவில் மும்பை, டில்லி உள்ளிட்ட பகுதிகளைப் பார்த்து வந்துள்ளேன்.அடுத்ததாக இலங்கைக்கு செல்லவிருக்கிறேன். தினமும் 10 மணி நேரம் நடப்பேன். நெடுஞ்சாலையாக இருந்தால் சராசரியாக 40 கி.மீ., - மலைப்பகுதிகளில் - 15 கி.மீ., - அடர்ந்த காடுகளில் - 10 கி.மீ., என்ற விகிதத்தில் நடந்து வருகிறேன்.நான் செல்லும்
இடங்களில் எங்குமே ஓட்டல்களில் தங்குவதில்லை. உள்ளூர் மக்களின் உதவியுடன், அவர்கள் ஏற்பாடு செய்யும் இடங்களிலேயே தங்கி வருகிறேன்.


அவர்களது வாழ்க்கை முறையை நெருக்கமாக பார்த்து அறிந்துகொள்ள இது உதவியாக இருக்கும். எனது மனைவியும் ஒரு வயது மகனும் ரஷ்யாவில் உள்ளனர்.தென்துருவம், வடதுருவம், எவரெஸ்ட் மலைச் சிகரங்களுக்குச் சென்று வர வேண்டும் என்பது என் விருப்பம். இதுவரை ஐந்து லட்சம் கி.மீ., தூரம் நடந்துள்ளேன். நடப்பதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காலணி அணிந்துள்ளேன்.எளிதில் காற்று உட்புகுந்து வெளியேறும் வகையில் இந்த காலணி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது பயணம் 2010ம் ஆண்டு நிறைவடையும் என கருதுகிறேன்.



அப்போது 10 லட்சம் கி.மீ., தூரம் நடந்து முடித்திருப்பேன்.நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் இடையூறாக உள்ளனர். கிழக்கு மலேசியாவில் உள்ள காட்டுப் பகுதியில் 18 நாட்கள் இடைவிடாது நடந்து வந்தது உடல் சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது.இவ்வாறு செர்கே சிகாசேவ் கூறினார்.

75 ஆண்டு 'சர்ச்'சை நகர்த்த 400 சக்கர 'கான்கிரீட்' வாகனம்


பீஜிங்:இரு தளங்கள் கொண்ட சர்ச்சை இடம் பெயர்த்து வைக்க முடியுமா? முடியும் என்று சீனாவில் சாதித்துள்ளனர்.மாகாணத்தில் உள்ள செயின்ட் டோமினிக் கதீட்ரல், இர ண்டு தளங்களை கொண்டது; 1933ல் கட்டப் பட்டது. பழமையான இந்த சர்ச்சை இடம் மாற்ற வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது.சர்ச் உள்ள பகுதியில் புதிய தெருவை உருவாக்க வேண்டியிருக்கிறது. மக்களின் வசதிக்காக அமைக்கப்படும் இந்த புது தெருவை அமைக்க இடைஞ்சலாக இந்த சர்ச் இருந்தது. இதன் மொத்த எடை 1,500 டன்கள்.எல்லாரும் கூடிப்பேசி, சர்ச் கட்டடத்தை, அப்படியே இடம்பெயர்த்து,வேறிடத்தில் வைப்பது என்று முடிவு செய்தனர்.


இதற்காக நூற்றுக்கணக்கான "ஜாக்' சாதனங்கள் கொண்டு வரப்பட்டன. வாகனத்தை தூக்கி நிறுத்தி பழுது பார்க்க வசதியாக பயன் படும் "ஜாக்' உலோக சாதனங்கள் எல்லா பக்கமும் பொருத் தப்பட்டு, அதன் மூலம், கட்டடம் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, மூன்றடி உயர்த்தி நிறுத்தப்பட்டது. அதன் பின், அதன் கீழ் கான்கிரீட் பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டது. அதன் மீது சர்ச்சை நிறுத்தப்பட்டது. எட்டு கான்கிரீட் பாதைகளின் கீழ் 400 சக்கரங்கள் பொருத்தப்பட்டன. இந்த சக்கரங்கள் உதவியுடன், சர்ச் கட்டடம் நகர்த்த முடிவு செய்யப்பட்டது. சர்ச் கட்டடத்தை 90 டிகிரி கோணத்தில் திருப்பி, அதன் பின், கிழக்கில் இருந்து தெற்கு
நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும். இதற்கான ஆரம்பப்பணிகள் துவங்கி விட்டன. இன்னும் ஒரு வாரத்தில் சர்ச்சை நகர்த்தும் பணிகள் ஆரம்பமாகும். 250 அடிநகர்த்தி, பக்கத்தில் உள்ள தெருவில் இந்த சர்ச் நிர்மானிக்கப்படும்.

Sunday, October 19, 2008

கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு

இலங்கை வன்னிப்பகுதியில் இதுநாள் வரை என்ன நடக்கிறதென்றே சரிவரத் தெரியாத நிலையில், இருட்டைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னல் கீற்றாக வெளியே வந்திருக்கிறது ஒரு சி.டி. வன்னிப் போர்க்களத்தில் சிக்கி தமிழ்மக்கள் அகதிகளாகப் படும்பாட்டை விளக்கும் அந்த சி.டி., கடல் கடந்து தமிழகக் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த சி.டி. `சீறும் தலைவர்' ஒருவரிடம் சிக்க, அவர் கடந்த 13-ம்தேதியன்று முதல்வர் கலைஞரை நேரில் சந்தித்து, அந்த சி.டி.யைக் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் (14-ம்தேதிதான்) இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நிலையில் அந்த சி.டி.யை வீட்டில் போட்டுப் பார்த்திருக்கிறார் கலைஞர். கூடவே அவரது குடும்பத்தாரும்.முப்பத்திரண்டு நிமிடங்கள் ஓடக் கூடிய அக் குறுந்தகடு முடிவதற்கு முன்பாக கலைஞரின் முகத்தில் பலவித மாற்றங்கள். இடையிடையே கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி இருந்திருக்கிறார் அவர். சி.டி. ஓடி முடிந்த பின்னர், கண்கள் குளமான நிலையில் நீண்டநேரம் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். அவரை தொந்தரவு செய்யும் துணிவு யாருக்கும் வரவில்லை.``இனி ஆட்சியென்ன வேண்டிக் கிடக்கு?'' என்று புலம்பியிருக்கிறார் கலைஞர். அதன் வெளிப்பாடுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், `இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு விதிக்கப்பட்ட இரண்டுவார கெடுவும், தவறினால் தமிழக எம்.பி.க்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவும்.'கலைஞரை ஆட்டி அசைத்துவிட்ட அந்தக் குறுந்தகடு, தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட முக்கியஸ்தர்களுக்குப் போய்ச் சேர இருக்கிறதாம். கலைஞரை மனம் குலைய வைத்த அந்தக் குறுந்தகட்டில் அப்படி என்னதான் இருந்தது என்று நாம் ஆராய முனைந்தோம். நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்த அந்த சி.டி.யை லேப் டாப்பில் சுழல விட்டோம்....வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ் மக்கள் பதுங்கு குழிகளில் ஓடிப்போய் விழுகிறார்கள். இப்போது குண்டுகள் வெடித்து வானில் செம்மண் புழுதிப்படலம். அங்கங்கே அலறலும் கதறலுமான சத்தங்கள். அந்தப் பகுதி முழுக்க பற்றி எரிந்தபடி இருக்க, வீடுகள் பல தரைமட்டமாகிக் கிடக்கின்றன. பதுங்கு குழி ஒன்றில் வெள்ளை முயல்கள் போல பதுங்கிக்கிடந்த பள்ளிச்சிறுமிகள் சிலர் வெளியே வருகிறார்கள். ஒரு சிறுமி பித்துப் பிடித்தவள் போல வெளியே வர மறுத்துக் கதறுகிறாள். அவளை ஆசுவாசப்படுத்தி அழைத்து வருகிறார்கள் தோழிகள்.இதனிடையே குண்டுவீச்சு நடந்த இடம் முழுக்க சடலங்கள். பிணக்குவியல். ரத்தச் சகதியில் சிதைந்து கிடக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள். உயிர் பிழைத்தவர்கள் ஓடிவந்து இறந்த உடல்களை ஏதோ விறகுக்கட்டைகளை ஏற்றுவதைப் போல ஒரு மினி லாரியில் ஏற்றுகிறார்கள். நடுத்தர வயதுக்காரர் ஒருவர் தேகம் முழுக்க ரத்தக்குளியலாய்‌க் கிடக்க, `தண்ணீர், தண்ணீர்' என்று கதறுகிறார். பார்க்கும் நம் மனம் உள்ளுக்குள் `ஓ'வென கதறுகிறது. வார்த்தைகள் எழ மறுக்கின்றன. கண்கள் கண்ணீரில் மூழ்குகின்றன.அடுத்ததாக ஒரு மருத்துவமனைக் காட்சி. ஸ்ட்ரெச்சர்களில் ஒவ்வொன்றாக சடலங்களைத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ வளாகம் முழுக்க மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு `ஐயோ' என்று கதறுகிறார்கள்.ஒரே படுக்கையில் மூன்று குழந்தைகள் ரத்தம் தோய்ந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தையின் ரத்தம் தோய்ந்த சட்டையைக் கழற்ற முடியாமல் கிழித்து எடுக்கிறார்கள். `இந்த குண்டடிக்காகவா பிறவி எடுத்தோம்?' என்பது மாதிரி பிரமை பிடித்த மாதிரி இருக்கின்றன அந்தக் குழந்தைகள். ``இங்கட மருந்து மாத்திரை கூட இல்லையே. டாக்டர்கள் வசதியும் இல்லையே'' என்று அருகில் கதறியபடி இருக்கிறார் ஒரு தாய்.மற்றொரு காட்சி. மரணத்தை எதிர்நோக்கியபடி படுக்கையில் படுத்திருக்கும் ஒரு சிறுவன் சிரித்தபடி கையை அசைக்கிறான். `என்னடா உங்கள் போர் தர்மம்?' என்று கேட்பது போல இருக்கிறது அவனது பார்வை.அதன்பின் வேறொரு காட்சி. தொடரும் சிங்கள குண்டுவீச்சுகளால் டிரக் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக கிளிநொச்சியை நோக்கி நகரும் தமிழ் மக்கள், வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்களும் `ஒரு பொருளாக` பயணிக்கிறார்கள். அவர்களது வளர்ப்பு நாய்கள் ஒரு வண்டியில் வருகின்றன. அதற்குக் கூட வசதியில்லாத மற்ற நாய்கள் எஜமான விசுவாசத்தில் வாகனங்களைப் பின்தொடர்ந்து ஓடிவருகின்றன.வழியில் ஒருவரது டிரக் வண்டி (டயர்கள் பஞ்சர் போலும்) இரண்டு சக்கரங்களும் கழற்றப்பட்டு அப்படியே ரோட்டில் நிற்கிறது. அதில் வந்தவர்கள் பயணக் களைப்பால் மரநிழலில் படுத்துறங்க, அந்த சாலையில் அகதிகளின் வாகன வரிசை அணிஅணியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடுத்த காட்சி. காடு, கழனி, சாலையோரங்களில் அகதி மக்கள் தொண்டுநிறுவனங்கள் தந்த தென்னை ஓலைக்கீற்றுகளால் குருவிக்கூடுகளைப் போல சிறுசிறு வீடுகளைக் கட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். அதற்கும் கூட வழியில்லாதவர்கள் துணிகளால் கூடாரம் அமைக்கிறார்கள். இடிந்து சிதறிக் கிடக்கும் வீடுகளிலிருந்து அட்டை, தகடுகளை எடுத்து வந்தும் `கூடு' கட்டுகிறார்கள். நேற்று வரை மாளிகை, மாடி வீடுகளில் தூங்கிய குழந்தைகள் இன்று மரங்களில் கட்டிய தூளிகளில் உறங்குகிறார்கள்.இன்னொரு காட்சி. பன்னாட்டுத் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவரைச் சூழ்ந்துகொண்டு கதறுகிறார்கள் தமிழ் அகதிகள். அவர்களை வெளியேறச் சொல்லிவிட்டதல்லவா சிங்கள அரசு? இனி அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வோம்? என்ற கவலை, பதற்றம் தமிழ் அகதிகளுக்கு.``கவலைப்படாதீர்கள். நாங்கள் மீண்டும் வருவோம். உதவிகள் செய்வோம்'' என்கிறார் அந்த வெள்ளை அதிகாரி. அடுத்த காட்சி. உணவுப் பொருள் ஏற்றிவந்த லாரிகள் வரிசையாக நிற்கின்றன. தடுப்பணையைத் தாண்டி வரும் அதிகாரியைப் பார்த்து அகதிகள் ஓவென அலறியபடி கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். பிறிதொரு காட்சியில் யூனிசெஃப் தொண்டு நிறுவன அலுவலக வாசலில் யாராவது வந்து உதவ மாட்டார்களா? என்று காத்துக் கிடக்கிறார்கள் அகதிகள். ஒருவேளை உணவுக்காவது வழி பிறக்காதா என்ற கவலை அவர்களுக்கு. அந்தக் காத்திருப்பில் காலம்தான் கரைகிறது. கடைசி வரை யாரும் வந்தபாடில்லை.இந்தக் குறுந்தகட்டில் இடையிடையே அகதிகள் பேசுகிறார்கள். ``ராணுவம் குண்டுவீச்சு நடத்துற தெல்லாம் எங்கட மேல்தான். ஏற்கெனவே யாழில் இருந்து வன்னிக்கு அகதியா வந்து நின்ன நாங்கள் இப்போ கிளிநொச்சிக்கு வெளிக்கிட்டுப் போறோம். இலங்கை அரசை நம்பி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போக முடியாது. போனால் சித்திரவதைப் படுவதோடு அங்கே போய் அடிமையாய்த்தான் நிற்கணும். அங்கே ஒட்டுக்குழு (கருணாபிரிவு) போராளிகள் எங்கட பிள்ளைகளை துப்பாக்கி முனையில் கடத்திப் போய்விடுவினம்'' என்கிறார்கள் அந்த மக்கள். வன்னிப்பகுதிக்குள் பள்ளிக்கூட வேன் ஒன்று சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. உபயம் சிங்கள விமானக் குண்டுவீச்சுதான். அந்த வேனுக்குள் உருக்குலைந்து கிடக்கும் பள்ளிச்சிறார்களை சிலர் அள்ளியெடுத்தபடி ஓடிவருகிறார்கள். இறந்து விட்ட சிறுமிகளைக் கீழே கிடத்திவிட்டு குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடப்பவர்களைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். யாருக்கும் கதறி அழக்கூட நேரமில்லை. இந்த அவலங்களைப் பார்க்கும் நம் கண்கள் குளமாகிப் போகின்றன. இதயத்தின் ஒரு மூலையில் `ஓ'வென்ற அழுகுரல் எதிரொலித்தபடியே இருக்கிறது.காட்சிகள் இருளாகி மறைகின்றன. `உலகத் தமிழினமே, எங்களுக்காகவும் பேசுங்களேன்' என்ற டைட்டில் விழுந்து நம்மை உலுக்கிப் போடுகிறது. ``எம் தாய்த் தமிழ் சொந்தங்களே. உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் அகதிகளாக நாங்கள். கைநீட்டும் தூரத்தில்தானே நிற்கிறோம். வாரி அணைத்துக் கொண்டால் போதுமே. ஓர் ஆதரவுக்குரல் எழுப்பினால் போதுமே. `இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் இன்னல் என்றால் தாய்த் தமிழகத்து உறவுகள் நான்குகோடி மக்களும் ஓடிவந்து நிற்போம்' என்று பேரறிஞர் அண்ணா சொன்னாரே'' என்ற குரல் பதிவுகள் நம் நெற்றிப் பொட்டில் சம்மட்டியாக விழுகின்றன.கடைசியாக முடியும்போது, `எம் தமிழினமே! தான் ஆடாவிட்டாலும், தம் சதை ஆட...' என்ற டைட்டிலோடு நிலைகுத்தி நின்று முடிகிறது. அலை அலையாய் அதிர்ச்சிகள் நம் நெஞ்சுக்குள் மோதிய படி இருக்கிறது நீண்ட நேரமாய்..தமிழக முதல்வர் கலைஞர், இந்த வயதிலும் இப்படியொரு காட்சியைப் பார்ப்பதற்கு என்ன மன உறுதியைப் பெற்றிருந்தாரோ? ஸீ
ஸீ பா. ஏகலைவன்விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவராக இருப்பவர் கேனல் பானு. புலிகளுக்காகப் பல களங்களைக் கண்டு, வெற்றிகளைக் குவித்தவர்.
இலங்கை ராணுவம், புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி-யைப் பிடிக்க இப்போது இடையூறாக நின்று கொண்டிருப்பவர் தளபதி பானு. ஈழப்போர் முனையில் இருந்த அவரை மிகுந்த சிரமத்திற்குப் பின் நாம் பேட்டி கண்டோம். தமிழக இதழ் ஒன்றுக்கு அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவே.
இலங்கைப் போரில் புலிகள் பின்-வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையா?
``நாங்கள் கூறினால் நம்பவா போகிறீர்கள்? பன்னாட்டு ஊடகவிய-லாளர்கள் எல்லாம் இங்கே வந்து பார்க்கட்டுமே. பார்த்தால் உண்மை தெரியும். இன்று வரை இலங்கை ராணுவம் எங்கள்மேல் போர் தொடுக்கவில்லை. அப்பாவி தமிழ்மக்கள் மீதுதான் தாக்குதல் நடாத்துகிறார்கள். சில இடங்களில் நாங்கள் தடுப்பு நடவடிக்கையில் இறங்குகிறோம். அவர்கள் பின்வாங்கி ஓடுகிறார்கள். இங்கே பாரிய (பெரிய) யுத்தம் நடப்பதாகக் கூறும் அவர்கள் வரைபடத்தை வைத்து அதை உறுதி செய்யட்டுமே.!'' தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு இலங்கை அரசு அழைக்கிறதே? அதை தமிழ் மக்கள் ஏற்கிறார்களா?``அப்படிப் போகத் துணியாமல்தான் அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். ஏற்கெனவே மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்தை நம்பிச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாதவர்களா நம் மக்கள்? அங்கே ராணுவச் சித்திரவதை தொடர்கிறது. ஒட்டுப்படைகள் (ராணுவத்துக்கு ஆதரவாக இயங்கும் தமிழ்க்குழுக்கள்) கையில் துவக்குகளோடு ஆள் கடத்தல், அழித்தொழிப்பு வேலைகளை ராணுவத்துடன் சேர்ந்து செய்கிறார்கள்.அதனால்தான் வீடின்றி, உணவு, மருந்து கிடைக்காத நிலையிலும் தமிழ் மக்கள் கிளிநொச்சி நோக்கி நகர்கிறார்கள். அந்த மூன்றே முக்கால் லட்சம் மக்களும் யார்? 22 ஆயிரம் போராளிகளைப் பலி கொடுத்துள்ள குடும்பத்தினர்தானே? அதில் இருப்பது என் தாய், தந்தை, பிள்ளை, மாமன், மைத்துனன் தானே? அவர்கள் எப்படி அறுத்துக்கொண்டு போவார்கள்? அதனால்தான் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் அவர்கள் இங்கேயே நிற்கிறார்கள்.''`பிரபாகரன் சரணடைய வேண்டும். தன்னையும் இயக்கத்தவர்களையும் அவர் காப்பாற்றிக் கொள்ள இதுதான் கடைசி வாய்ப்பு' என்று மகிந்த ராஜபக்சே பேசியிருக்கிறாரே?``இதைக் கேட்டு நாங்களும், எங்கட மக்களும் மட்டுமல்ல. சிங்கள ராணுவமே கூட சிரித்துக் கதைக்கிறது. ஒவ்வொரு அதிபருமே இப்படித்தான். பதவிக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் பாரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்கள். அடிவாங்கி ஓடுவார்கள். தேர்தல் நெருங்கினால் `சமரசப் பேச்சு வார்த்தை, சமரசத் தீர்வு' என்பார்கள். தேர்தலில் வென்றால் மீண்டும் மூன்றாண்டுகளுக்கு சண்டை பிடிப்பார்கள். வாக்களித்த மக்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே, அதற்காகத்தான் `இதோ நெருங்கிட்டோம். பிடிச்சிட்டோம். சரணடைங்க' என்கிறார்கள்.''புலிகளை முற்றாக அழித்தொழிக்காமல் ஓயப் போவதில்லை. புலிகளின் நாட்கள் எண்ணப்-படுகின்றன என்கிறார்களே சிலர்?``நாங்களே நினைத்தாலும் இனி இந்த இயக்கத்தை அழிக்க முடியாது. `சரி போதும்' என்று நாங்களே முடிவெடுத்தாலும் இனிமேல் இந்த இயக்கம் இலக்கை அடையாமல் ஓயாது. கரும்புலிகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடுமே தவிர குறையாது. எமது இயக்கத்தின் பலம் ஆயுதமல்ல. மனஉறுதியும், உலகம் முழுவதும் வியாபித்துள்ள எங்கள் தமிழ் உறவுகளும்தான். அதனால் ராஜபக்சே அப்படிக் கதைக்கிறார் என்றால், அவர் கடைசிவரை கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.''அமெரிக்கா, சீனா, கொரியா, இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவில் இலங்கை அரசு ஆயுதம் வாங்கிக் குவிக்கிறதே? அதைச் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் ஆயுத பலம் இருக்கிறதா?(சிரிக்கிறார்) ``அதுபற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்கள்தான் பிரேமதாசா காலத்திலிருந்தே வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறார்களே? அவர்கள் கஷ்டப்பட்டு வாங்கி பாதுகாப்பாகக் கொண்டு வந்து கடைசியில் எங்கட காலடியில் போட்டுவிட்டுத்தானே ஓடுவார்கள்? எங்களுக்கு எப்போதும் ஆயுதம் வாங்க வேண்டிய அவசியம் வந்ததே இல்லை. அவர்களது ஆயுதத்தைப் பிடுங்கித்தான் அவர்களை அடிக்கிறோம்.ஆனையிறவு சண்டையில் அவர்களிடம் இருந்து 152 மி.மீ. ஆட்லரி பீரங்கியைப் பிடுங்கினோம். பிறகு 122 மி.மீ. பீரங்கி. அவற்றை வைத்துத்தான் அவர்களை அடிக்கிறோம். ஒவ்வொரு பீரங்கிக்கும் இதுவரை இரண்டாயிரம் பேர்வரை மடிந்திருப்பான்கள். இப்படிப் பறித்த ஆயுதம் நிறைய இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம்.''தடுப்பு நடவடிக்கை முடிந்து எப்போது தான் நீங்கள் சண்டை பிடிப்பீர்கள்?``சிங்கள ராணுவத்தின் கை ஓங்கி விட்டது என்பது பொய்ப்பிரசாரம். நாங்கள் தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம். எங்கட தரப்பில் ஆயிரம் குண்டுகள் செலவானால் அவர்களிடமிருந்த பத்தாயிரம் குண்டுகளை நாங்கள் பறிக்க வேண்டும். இப்போது மழைக்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். பலத்த மழையில் அவர்களை அடித்தால்தான் சரிப்படும். தப்பி ஓடமுடியாமல் தண்ணீரில் விழுந்து அவர்கள் சாக வேணும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். எவ்வளவு மழை வெள்ளம் எண்டாலும் நாங்கள் களத்தில் நிற்போம். எங்கள் பயிற்சி அப்படி.''கடந்த ஒரு மாதத்தில் `கொத்துக் கொத்தாகப் புலிகள் பலி' என்ற செய்திகள்....?``உண்மை ராஜபக்சேவுக்கே தெரியும். எங்கட தரப்பு வீரச்சாவுகளை நாங்கள் மறைக்க மாட்டோம். அவர்கள் கூறும் கணக்குப்படி பார்த்தால் எங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கையையே தாண்டிவிடும் போலிருக்கிறது. ம். வேடிக்கைதான்....

ஆடு மேய்க்கும் சிறுவன் 'போல் வால்ட்டில்' முதலிடம்


அவிநாசி: பள்ளியில் படித்துக்கொண்டே வறுமையின் காரணமாக, ஆடு மேய்க்கும் சிறுவன், "போல் வால்ட்டில்' மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான். அவிநாசி, அரசு மேல்நிலைப் பள்ளியில், திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான கூட்டு குறு மைய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. ஆண்களுக்கான போட்டிகளில், "போல் வால்ட்' சீனியர் பிரிவில், காட்டம்பட்டி டி.எஸ்.ஏ., அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் பழனிசாமி, முதலிடம் பெற்றான். முறையான பயிற்சி எதுவுமில்லாமல், 2.60 மீட்டர் உயரத்தை எளிதாகத் தாண்டி முதலிடம் பெற்ற பழனிசாமியின் வாழ்க்கை வறுமை நிறைந்தது.
இவரது தந்தை மோகனசுந்தரம், கரும்புச் சோகை உரிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். உடன்பிறந்த இரு அண்ணனும், தம்பி மற்றும் அக்காவும் கூலி வேலைக்குச் செல்கின்றனர். வறுமை காரணமாக, குடும்பத்தில் உள்ள யாருமே ஆறாம் வகுப்பைத் தாண்டாத நிலையில், பழனிசாமி மட்டும் தற்போது, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி நேரம் போக, அருகிலுள்ளவர்களின் ஆடுகளை மேய்த்து கூலி பெற்று, குடும்ப பாரத்தையும் பழனிசாமி சுமந்து வருகிறான். அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி அருகே கல்லுக்குழிமேடு என்ற கிராமத்தில் கரும்புச் சோகையை கூரையாகக் கொண்ட குடிசையில் வசிக்கும் பழனிசாமி, குடும்ப வறுமையை எப்படியாவது தாண்டி விட வேண்டுமென்ற ஒரே லட்சியத்தில், தற்போது, மாவட்ட அளவில் "போல் வால்ட்டில்' முதலிடம் பெற்று ஒரு படி முன்னேறியுள்ளான்.
தனது லட்சியம், விளையாட்டு பற்றிய கனவு குறித்து, பழனிசாமி கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டாக, விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். குறுமைய போட்டிகளில் உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவற்றில் ஏற்கனவே பங்கேற்றுள்ளேன். அவிநாசி போட்டியில் கம்பின் உயரம் குறைவாக இருந்ததால், என்னால் 2.60 மீட்டருக்கு மேல் தாண்ட முடியவில்லை. என்னுடைய கம்பை பஸ்சில் எடுத்து வர முடியவில்லை. விளையாட்டுத் துறையில் சாதித்து, எனது குடும்பத்தை உயர்த்த வேண்டுமென்பதே லட்சியம். உடற்கல்வி ஆசிரியர் துரைசாமி மற்றும் உடன்படிக்கும் மாணவர்கள் தந்த ஊக்கத்தின் காரணமாகவே, நான் வெற்றி பெற்றேன். விளையாட்டுக்குத் தேவைப்படும் முறையான பயிற்சி கிடைத்தால், இன்னும் சாதிப்பேன். இவ்வாறு பழனிசாமி கூறினான்.


ஒரு வாரத்தில் ஒரு லட்சம் கோடி இழப்பு

மும்பை: மிகப்பெரிய சரிவை கண்டு இருக்கும் இந்திய பங்குச்சந்தையில், முதலீட் டாளர்கள், புரோக்கர்கள், கதிகலங்கி போய் இருக்கின்றனர். சந்தையில் கோலோச்சிய முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுவரை சிறப்பாக இருந்த பங்குச்சந்தைக்கு இந்தாண்டு போதாத காலம். ஜனவரியில் ஆரம்பித்த சரிவு, கடந்த வெள்ளிக்கிழமை பெரும்சரிவுடன் முடிந்துவிட்டது. 'சென்செக்ஸ்' ஐந்து இலக்கத்தில் இருந்து நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது. 'சென்செக்ஸ்' பத்தாயிரத்தில் இருந்து 21 ஆயிரம் புள்ளிகளை எட்டுவதற்கு இரண்டு ஆண்டுகளை எட்டியது. ஏறுவதற்கு மட்டும் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்ட சந்தை, 21 ஆயிரத்தில் இருந்து 9,000 புள்ளிகள் சரிவதற்கு மட்டும் பத்து மாதங்கள் எடுத்துக் கொண்டது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால், சந்தையில் கோலோச்சிய முன்னணி நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு நாளுக்குநாள் சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த 10ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் முன்னணி பத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 734 கோடியாக இருந்தது. இது 17ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் ரூ.10 லட்சத்து 44 ஆயிரத்து 245 கோடியாக குறைந்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் ரூ.94ஆயிரம் கோடியை இழந்துள்ளது. இந்த சரிவிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், மொத்த சந்தை மூலதனம் ரூ.4,000 கோடி அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வங்கித்துறை பங்குகள் ஏற்றம், இறக்கம் கண்டு இறுதியில் சரிவில் முடிந்தது. இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஏற்றம் கண்டு இருப்பதற்கு காரணம் வலுவான அடிப்படையை கொண்டு இருப்பதே காரணம். ஒரு நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது, அதன் மொத்த பங்குகளை, அன்றைய அதன் விலையை கொண்டு பெருக்கினால் கிடைப்பது.
* சந்தையின் முன்னணி நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் சந்தை மூலதனம் கடந்த வாரத்தில் மட்டும் 34 ஆயிரத்து 898 கோடி ரூபாய் சரிந்துள்ளது.
* பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யின் சந்தை மூலதனம் 29ஆயிரத்து 933 கோடி ரூபாய் இழந்துள்ளது. கடந்த 17ம் தேதியன்று இதன் மொத்த சந்தை மூலதனம் 1,65,954 கோடியாக ரூபாயாக இருந்தது.
*தனியார் வங்கிகளில் முன்னணி வகிக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சந்தை மூலதனம் முந்தையை வாரத்தை ஒப்பிடுகையில் 3,000 கோடி அதிகரித்து, 43 ஆயிரத்து 606 கோடியாகியுள்ளது.

தீபாவளி சுவீட் கிடையாது: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் 'பெப்பே'


பெங்களூரு: சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், பல தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கும், சாக்லேட் உள் ளிட்ட இனிப்பு பண்டங் களை இந்த ஆண்டு வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, அந்த நாட்டை மட்டுமல்லாமல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பல நிறுவனங்கள் குறிப்பாக விமான மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை ஒத்தி வைத்துள்ளன. பணவீக்க உயர்வு காரணமாக திணறி வரும் பல நிறுவனங்கள், சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பரிசாக இனிப்பு பண்டங்களை பரிசாக வழங்குவது வழக்கம். இந்தாண்டு அதை வழங்குவது இல்லை என முடிவு செய்துள்ளன. பல நிறுவனங்கள் குறைந்த அளவு இனிப்பு பண்டங்களை கடைகளில் ஆர்டர் செய்துள்ளன. இதனால், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாமல், சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரியங்கா சிங்கானியா கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டு தீபாவளியின்போதும், நிறுவனங்களால் மட்டும் 50 முதல் 80 சதவீதம் வரை சாக்லேட் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக உள்ளது. போதிய அளவில் ஆர்டர்கள் வரவில்லை. கடந்தாண்டில் அதிகமான சுவீட் வாங்கிய நிறுவனங்கள், இந்தாண்டு இதுவரை ஆர்டர் தரவில்லை' என்றார். பெங்களூரில் சாக்லேட் ஜங்ஷன் என்ற கடையை நடத்தும் அனுபாமா கூறுகையில், 'ஒரு நிறுவனம் எங்கள் கடையில் தீபாவளிக்காக 80 ஆயிரம் சுவீட் பாக்ஸ்கள் ஆர்டர் செய்திருந்தது. சில நாட்களில் அந்த ஆர்டரை 40 ஆயிரமாக குறைத்து விட்டது' என்றார்.

Friday, October 17, 2008

உலகின் பணக்கார டென்னிஸ் வீரர்





வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர். தற்போதைய மதிப்பின் படி 43.29 மில்லியன் டாலர் அளவிற்கு டென்னிஸ் விளையாட்டில் சம்பாதித்துள்ளார்.


தற்போது மாட்ரிட் ஏடிபி டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் உள்ள பெடரர் கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் அவரது சொத்து மதிப்பு 43.5 மில்லியன் டாலர் அளவைத் தொடும்.





இதற்கு முன்பாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவின் பீட் சாம்ப்ராசின் சொத்து மதிப்பு 43.27 மில்லியன் அமெரிக்க டாலராகும்.













தற்போதைய நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 20.5 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளார்.

மலைப்பாம்பின் வாயில் ஊழியர் தலை தப்பியது


பெர்லின்:வனவிலங்குப்பூங்காவில், பாம்பு கூண்டை சுத் தம் செய்து கொண்டிருந்த பெண் ஊழியர் தலையை மலைப் பாம்பு விழுங்க முயற்சித்தது. ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கர்ட் மாகாணத்தில் உதிங்க்டன் என்ற இடத்தில் வனவிலங் குப்பூங்கா உள்ளது. இங்குள்ள விலங்குகளில் 24 வயது மலைப் பாம்பும் உள்ளது.சமீபத்தில் வழக்கம் போல, பாம்புக் கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார் பெண் ஊழியர் ரெனட்.


அப்போது, மலைப் பாம்பு திடீரென அவர் தலையை விழுங்க முயற்சித்து வாயால் இழுக்க முயற்சித்தது. தலை முக்கால் பகுதி உள்ளே போன நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல்,கூக்குரலிட்டபடி,தன் இரண்டு கைகளையும் பாம்பு வாயில் விட்டு தலையை மீட்க முயன்றார். ஆனால், முடியவில்லை.தன் இரு கைகளின் கட்டை விரல்களையும் பாம்பின் வாயில் இரு பக்கமும் கீழ்ப்பக்கமாக அழுத் தியபடி இருந்தார். அவர் கத்தியதை பார்த்த ஊழியர் கள் சிலர் ஓடி வந்து அவரை மீட்க முயற்சித்தனர். அப்போதும்
ரெனட் தலையை மலைப்பாம்பு விடுவதாக இல்லை.


வனவிலங்கு அதிகாரிகள் அப்போது ஒரு சமயோசித முடிவை எடுத்தனர்.தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் தண்ணீர் குழாயில் இருந்து நீண்ட பைப்பை செருகி, பாம்பின் வாயில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தனர்.அடுத்த சில நொடிகளில், ரெனட் தலையை பாம்பு விட்டுவிட்டது. தலையில் பல இடங்களில் அவருக்கு பாம்பின் பற்கள் பட்ட கீறல்கள் இருந்தன.உடனே, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"பாம்புக்கு மனிதவாடை பிடிக்கும்; அதனால், ரெனட் தலையை அது விடாமல் இருந்தது. ஆனால், தண்ணீரை பீயச்சி அடித்ததால், அதற்கு வாசனை உணர்ச்சி போய் விட்டது. இதனால்தான் , ரெனட் தலையை அது விட்டு விட்டது' என்று தெரிவித்தனர்.

தீராத வெளிநாட்டு வேலை மோகம்


ள்ளூரில் வேலை இல்லை, வறுமை, அதிக சம்பளம் ஆசை போன்ற காரணங்களால் தமிழக இளைஞர்கள் பலர் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லத் துடிக்கிறார்கள். ஆனால் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் ஒட்டகம் மேய்த்தல், கோழிக்கறி வெட்டுதல், துணி சலவை செய்தல், முடி திருத்துதல், மருத்துவ கழிவுகளை அகற்றுதல், கனரக வாகனங்கள் ஓட்டுதல், சுமை தூக்குதல், உயரமான கட்டடங்களுக்கு பெயின்ட் அடித்தல், சமையல் உதவியாளர் போன்ற உடல் உழைப்பு வேலைகளை செய்து வயிற்றை கழுவுகிறார்கள். இதற்காக வீடு, நிலம், மனைவியின் நகைகளை விற்று சில போலி தனியார் ஏஜென்சிகளையும், அதன் ஏஜென்ட்களையும் நம்பி பணத்தை கொடுத்து விடுகின்றனர்.



அவர்களில் ஒரு சிலர் மட்டுமே "சிறிய' காகிதத்தில் பணம் கொடுத்த விபரத்தை தேதியுடன் எழுதி வைத்துள்ளனர். மற்றவர்கள் பணம்வாங்கிய ஏஜென்ட்டிடம் கையெழுத்து கூட பெறுவதில்லை. இதற்கு ஏஜென்ட்களும் உடன்படுவதில்லை. இதில் தான் ஏஜென்ட்டுகளின் "தொழில் ரகசியம்' உள்ளது. "ஒரு மாதத்தில் வெளிநாட்டுக்கு விசா வந்து விடும், 20 நாளில் வந்து விடும்' எனக்கூறும் ஏஜென்ட்களின் பேச்சை நம்பி, பணம் கொடுத்தவர்கள் தினமும் தபால் நிலையங்களில் காத்து கிடந்து ஏமாற்றமடைகின்றனர். இன்னும் சில போலி ஏஜென்ட்டுகள் வெளிநாட்டு வேலை கேட்டு வருவோரிடம் பணம் வாங்கியதும், அவர்களை குறிப்பிட்ட நாளில் சூட்கேஸ் சகிதமாக வரவழைத்து ரயில் அல்லது ஆம்னி பஸ்களில் சென்னை அழைத்து செல்கின்றனர். அங்கிருந்து விமானத்தில் மும்பைக்கு அழைத்து சென்று ஒரு வீட்டில் தங்க
வைக்கின்றனர். ஓரிரு நாளில் "விசா' வந்ததும் வெளிநாடு பயணம் தான் என கூறி வேறு சிலரிடம் ஒப்படைத்து விட்டு ஏஜென்ட்கள் கிளம்பி டுகின்றனர். கையில் இருக்கும் சிறிய தொகையில் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்தவர்கள் 3 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். அவ்வப்போது ஏஜென்ட் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்பர். அப்போது "விசா' இன்று வந்துவிடும்...என ஒரே பதிலையே சொல்வார்.

ஒரு வாரத்திற்கு பின் ஏஜென்ட் கொடுத்த போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியாதபோது தான் ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்ட விபரமே அந்த தொழிலாளர்களுக்கு தெரிய வரும். அதன்பிறகு,சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொடுத்த பணத்தை வாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். சிலர் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி மன நோயாளிகளாக மாறுகின்றனர். இன்னும் சிலரோ உறவினர்களுடன் சென்று மோசடி ஏஜென்ட்டிடம் தகராறு செய்தோ, மிரட்டியோ பணத்தை பெற முயற்சிக்கின்றனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும் பலன் கிடைக்கிறது. எந்த வழியும் தெரியாத சிலரே கடைசியாக போலீசில் புகார்செய்கிறார்கள். போலீசார் அது போன்ற புகார்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறார்கள். அப்படியே ஆதாரங்கள் இருந்தாலும் உடனே வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பல சுற்று கட்டப்பஞ்சாயத்துக்கள் நடத்தப்படுகின்றன.



பின்னர் போலீசாரின் நெருக்குதலால் சில போலி ஏஜென்ட்கள், வாங்கிய பணத்தை, குறிப்பிட்ட நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக உடன்பாடு ஏற்பட்டது போல் வெற்றுத்தாளில் எழுதிக்கொடுத்து விட்டு போலீஸ் தலையீட்டை தவிர்த்துக் கொள் கின்றனர். அதன்பிறகு வழக்கம் போல் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பணம் கொடுத்தவர்களை லையவிடுகின்றனர். பின்னர், "வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும்படி கேட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய வகையிலும், அதற்காக ஏற்பாடுகளை செய்த வகையிலும் ஏற்பட்ட செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து கொண்டு மீதத்தொகையை மட்டுமே தர முடியும்' என்கின்றனர்.


வாங்கிய கடனுக்கு வட்டி அதிகரிப்பதாலும், வீடு, நிலம்,நகையை இழந்த குடும்பத்தினரின் குமுறலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் ஏமாற்றப்பட்டவர்கள், இந்த தொகையாவது கிடைத்ததே என்று மனதை தேற்றிக்கொண்டு போலி ஏஜென்ட் தரும் குறைந்த தொகையை பெற்றுக் கொள்கின்றனர். அதை கொடுக்கும்போது கூட போலி ஏஜென்ட்கள் சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளாதபடி தங்களுக்கும், பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கும் இனி எந்த பிரச்னையும் இல்லை, பண விவகாரத்தை
சுமுகமாக முடித்துகொண்டதாக எழுதி வாங்கிக்கொள்கின்றனர். போலி ஏஜென்ட்களின் மோசடியில் சிக்காமல் ஒரு வழியாக வெளிநாடுகளுக்கு வெல்டிங், பிட்டர், பிளம்பர் போன்ற பணிக்கு செல்வோரில் சிலருக்கு மட்டுமே அந்தந்த பணிகள் கிடைக்கின்றன. உதாரணமாக வெல்டிங் படித்தவர்களுக்கு ஒட்டகங்கள் மேய்த்தல் போன்ற எதிர்பாராத, வேலைகளை செய்யும் நிலை ஏற்படுகிறது. சிலர் அந்த பணியையும் ஏற்று சிரமங்களை தாங்கிக்கொண்டு ஒப்பந்தப்படி பணிபுரிந்து விட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள். ஒரு சிலர் அந்த வேலை பிடிக்காமல் சொந்த ஊர் திரும்புகிறார்கள்.


வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற பலருக்கு அங்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி சம்பளம் தருவதில்லை. குறைவாக சம்பளம் தருவதை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் பல நாடுகளில் நேரடி சித்ரவதை, பொய் புகாரின் பேரில் சிறை தண்டனை, அதிகமான வேலைப்பளு போன்றவைகளுக்கு ஆளாகுகின்றன. பொறுமை இழந்த பல தொழிலாளர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களில் புகார் செய்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் காலம் வரை புகார் கொடுத்த தொழிலாளர்கள் வசதி குறைவான தங்கும் இடத்திற்கு மாற்றம், இரவுப்பணிகளில் மட்டுமே பணியாற்றும் நிலை, போதிய ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை போன்ற மறைமுக சித்ரவதைக்கு ஆளாக நேரிடுகிறது. இதுபோன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்புபவர்கள் தங்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி ஏமாற்றிய ஏஜென்ட்கள் மீது போலீசாரிடமும், மாவட்ட கலெக்டர்களிடமும் புகார்
கொடுக்கின்றனர்.இதுபோன்ற நிலைமைக்கு ஆளான பெரும்பாலானோர்
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, சேலம், தர்மபுரி,விருதுநகர் போன்ற மாவட் டங்களையும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களையும் சேர்ந்தவர்களே ஆவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 2006ல் 6 வழக்குகளும், 2007ல் 7 வழக்குகளும், 2008ல் (செப்.,) 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் எந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை வரை கூட முன்னேற்றம் இல்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு இம்மாவட்டத்தில் "போலி' ஏஜன்டுகள் துணிகரமாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை டவுன், இருக்கன்குடி போலீசில் தலா 2 வழக்குகளும், அருப்புக்கோட்டை தாலுகா மற்றும் ராஜபாளையம்
வடக்கு போலீசில் தலா ஒரு வழக்கும், மாவட்ட குற்றப் பிரிவில் 3 வழக்குகளுமாக மொத்தம் 9 வழக்குகள் பதிவாகியுள்ன. இவற்றில் இரு வழக்குகளை விசாரித்த போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என முடிவு செய்துள்ளனர். மீதமுள்ள ஏழு வழக்குகளில் மூன்று கோர்ட் விசாரணையிலும், மூன்று போலீசார் விசாரணையிலும் உள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ளமுத்துசிவலிங்கபுரம் கிராமத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் (த/பெ. மகாலிங்கம்) போலி ஏஜென்ட்டை நம்பி கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்காக ரூ.ஒரு லட்சத்து 40 ஆயிரம் கொடுத் துள்ளார். அவரை சுற்றுலா "விசா'வில் சவுதியிலுள்ள கப்பல் நிறுவனத்துக்கு வேலைக்கு போலி ஏஜென்ட் அனுப்பி வைத்தனர். அங்கு 5 மாதம் கார்த்திகேயன் வேலை செய்தார். அதன் பிறகு "வேலை இல்லை' என்று கூறி இந்தியாவிற்கு அனுப்பி விட்டனர். அவரோ சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சொந்த ஊர் திரும்புவது பெரும் பாடாகிவிட்டது. இதேபோல் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகரை சேர்ந்த மகாதேவன் மகன் பாஸ்கரனை வெளிநாட்டு வேலைக்கு போலி ஏஜென்ட் ஒருவர் கொரியாவிற்கு அனுப்பி வைத்தார். பாஸ்கரனிடம் இருந்தது போலி விசா என தெரிய வந்ததால் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.



ஏஜென்ட்டிடம் இதை தெரிவித்தபோது, "கொரியா என்ன... அடுத்து லண்டனுக்கு அனுப்பி வைக்கிறோம்' எனக் கூறி மொத்தம் ரூ.மூன்றரை லட்சம் வரை கறந்துள்ளார். இதை நம்பி லண்டன் சென்றபோது அங்கும் விமான நிலையத்திலேயே தவறான விசா என கண்டுபிடித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுகுறித்து செந்தில்குமார் எஸ்.பி., கூறுகையில், வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் தாங்கள் அணுகும் ஏஜென்ட் நேர்மையானவரா; அவர் மூலம் நல்ல வேலை கிடைக்குமா என்பதை விசாரித்து உறுதி செய்து தெரிந்து கொண்ட பின் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.


வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை:


வெளிநாட்டிற்கு செல்லும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.வெளிநாட்டிற்கு குடிபெயர்வோர் நல வாரியம் என மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தனித்துறை செயல்பட்டு வருகிறது. இந்த கிளை தற்போது சென்னையிலும் உள்ளது. வெளிநாடு வேலைக்கு
செல்பவர்களுக்காக இந்திய அரசின் முறையான அங்கீகாரம் பெற்ற ஏஜென்ட்டுகள் உள்ளிட்ட பல தகவல்களை அந்த அமைச்சக கிளையின் தீதீதீ.ட்ணிடிச்.ஞ்ணிதி.டிண அல்லது டிணஞூணி@ட்ணிடிச்.ணடிஞி.டிண என்ற வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர். பரமக்குடியில் செயல்பட்டுவரும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பு நல இயக்கம் என்ற நிறுவனத்தின் துணைத்தலைவர் மாதவன் கூறுகையில், " இந்திய அரசிடம் பதிவு சான்றிதழ் பெற்ற ஏஜென்ட்களை மட்டுமே நம்பி செல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் மும்பையில் ஒருவர் பதிவு பெற்ற ஏஜென்ட்டாக இருந்தால் அவருக்கு கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சப் ஏஜென்ட்கள் விளம்பரங்களை கொடுத்து லாட்ஜ்களில் தங்கி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிலை உள்ளது. சட்டப்படி ஏஜென்ட் பதிவு பெற்ற இடத்தில் மட்டும்தான் வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டும். கண்டிப்பாக சப் ஏஜென்ட்கள் வைத்திருக்க கூடாது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் ஏஜென்ட்கள் சொல்வதை மட்டும் நம்பி செல்லக்கூடாது. தாங்கள் செல்லும் முன், வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து வேலைக்கான கான்ட்ராக்ட் கடிதத்தை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். அந்த கடிதத்தில் வேலை விபரங்கள், சம்பளம், தங்கும் வசதி, உணவு, ஓ.டி., சம்பளம், விடுமுறை, வேலை நேரம் போன்ற அனைத்து நிபந்தனைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் வெளிநாட்டில் உள்ள தூதரகத்தில் புகார் தெரிவிக்கலாம். பலர் சரியான சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ளாமல் ஏஜென்ட்டுகளை மட்டும் நம்பி செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் வெளிநாட்டிற்கு சென்றவுடன் தங்களது பாஸ்போர்ட்டை வெளிநாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவதால் அடிமை போல் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அமெரிக்காவில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் எங்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவருகிறோம். இவ்வாறு மாதவன் கூறினார்.


வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன!
வெளிநாட்டு வேலைக்கு செல்லும்போது கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் வருமாறு: * கண்டிப்பாக பாஸ்போர்ட்டை தங்களது பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும்


* வேலை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் ஊழியர் ஒப்பந்த கடிதம்.(வேலை நியமன கான்ட்ராக்ட் காப்பி)


* வேலை நியமன உத்தரவு நகல்
* வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் முகவரி மற்றும் டெலிபோன் எண்களை தெரிந்து எந்நேரமும் தயாராக சட்டை பையில் வைத்திருக்க வேண்டும்.
* உள்ளூர் முகவரி மற்றும் டெலிபோன் எண்கள், வெளிநாட்டில் யாரேனும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் இருந்தால் அவர்களது முகவரி மற்றும் டெலிபோன் எண்களை கையில் வைத்திருக்க வேண்டும்.


இன்சூரன்ஸ் அவசியம்:
ராமநாதபுரம் வக்கீல் தினகரன் கூறும்போது, "சட்டப்படி ஒருவர் வெளிநாடு செல்லும் முன் அணுகும் ஏஜென்ட் இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டவரா என்றும் பதிவு அலுவலகத்தில் பதிவு சான்றிதழை அனைவரும் பார்க்கும்படி
வைத்துள் ளாரா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் பதிவு சான்றிதழை கேட்டு பார்த்து கொள்ள உரிமை உண்டு. வெளிநாடு செல்லும் முன் கண்டிப்பாக இன்சூரன்ஸ் எடுத்து, பாண்டு பத்திரத்தை குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும். இந்த இன்சூரன்ஸ் பாண்டு பத்திரத்தை பலர் ஏஜென்ட்களிடம் கொடுத்துவிடுகின்றனர். வெளிநாட்டில் ஏதாவது விபத்து, மரணம் ஏற்பட் டால் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு கண்டிப்பாக பாண்டு பத்திரம் குடும்பத்தினரிடம் இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் குறித்த தகவல் கள் அரசுக்கு தெரிவித்த பின் தான் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. இவ்வாறு வக்கீல் தினகரன் கூறினார்.



அதிக வேலைபாலியல் தொல்லை: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் பலர் குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் இருந்து விடுபடவே சில நாட்கள் ஆகும். அதற்கு பிறகு வேலைக்கு வந்த நாட்டில் தங்கும் இடம், உணவு, தட்பவெப்ப நிலை போன்றவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சில நாட்கள் ஆகும். ஆனால் அதற் குள்ளாகவே வேலை சிர மங் கள், சம்பள பிரச்னை, அந்தந்த நாடுகளின் மொழி மற்றும் சட்ட திட்டங்கள் போன்றவற்றால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் கள்ளத்தனமாக தப்பி
வந்தால் போதும் என கருதி, ஏதாவது சட்டச்சிக்கலில் சிக்கி சிறைக்கு செல்கின்றனர். அவர் களை மீட்க குடும்பத்தினர் யார் உதவியை நாடுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

நர்ஸ், வீட்டு வேலை போன்ற வேலைக்கு செல்லும் பெண்களில் பலர்
கொத்தடிமைகள் போல் ஓய்வின்றி அதிக நேரம் உழைத்தல், பாலியல் தொல்லை போன்ற இன்னல்களுக்கு ஆளாகி இறந்து விடுவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. அவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வர குடும்பத்தினர் படும் கஷ்ட ங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதன்பிறகு வேலை கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவோ, நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவோ பாதிக்கப் பட்டவர்களின் குடும் பத்தினருக்கு எந்த வழியும் தெரியாமல் போய் விடுகிறது.

ஐ.சி.எல்., வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதம்.


ஐதராபாத்:ஐ.சி.எல்., "டுவென்டி-20' தொடரில் ஐதராபாத் ஹீரோஸ் அணி, தாகா வாரியர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது.கபில்தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) சார்பில் இந்தியன் சாம்பியன்ஷிப் "டுவென்டி-20' தொடர் ஐதராபாத்தில் நடக்கிறது. 7வது போட்டியில் ஐதராபாத் ஹீரோஸ், தாகா வாரியர்ஸ் அணிகள் மோதின.


முதல் சதம்: "டாஸ்' வென்று முதலில் பேட் செய்த தாகா வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. தாகா வாரியர்ஸ் அணியின் அலோக் கபாலி அதிரடியாக ஆடி 60 பந்தில் 5 சிக்சர், 11 பவுண்டரி உட்பட 100 ரன்கள் எடுத்தார். இது தான் ஐ.சி.எல்., வரலாற்றில் அடிக்கப்பட்ட முதல் சதம். இதற்கு முன் லாகூர் பாட்ஷாஸ் அணியின் ஹசன் ராசா
அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்திருந்தார். "மிடில்-ஆர்டர்' அபாரம்: பின்னர் களமிறங்கிய ஐதராபாத் ஹீரோஸ் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. "மிடில்-ஆர்டரில்' களமிறங்கிய ஐதராபாத் ஹீரோஸ் அணியின் பின்னி(30), போஜே(31), ஹாரிஸ்(37) பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.


சதம் விளாசிய அலோக் கபாலி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டெஸ்ட்ல் அதிக ரன்கள் எடுத்து முதல் ஏழு இடங்களை பிடித்த வீரர்கள்


சச்சின் 152 போட்டிகளில் 12000 என்ற இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் ‌போட்டிகளில் 39 சதமும், 50 அரைசதமும் அடித்துள்ளார்.


வெ. இண்டீஸ் அணியின் லாரா 11953 ரன்கள் அடித்தார். 34 சதமும், 48 அரைசதமும் அடித்துள்ளார்.


ஆஸி., வீரர் பார்டர், 156 போட்டிகளில் விளையாடி, 11174 ரன்கள் எடுத்துள்ளார்.
27 சதமும் 63 அரைசதமும் அடித்துள்ளார்.


அஸி., வீரர் ஸ்டீவ் வாக் 168 போட்டிகளில் விளையாடி, 10927 ரன்கள் எடுத்துள்ளார், 32 சதமும் 50 அரைசதமும் அடித்துள்ளார்.


டிராவிட், 127 போட்டிகளில் விளையாடி 10341 ரன்கள் எடுத்துள்ளார், 25 சதமும் 53 அரைசதமும் அடித்துள்ளார்.


ஆஸி., வீரர் பாண்டிங் , 121 போட்டிகளில் விளையாடி, 10239 ரன்கள் எடுத்துள்ளார், 36 சதமும் 40 அரைசதமும் அடித்துள்ளார்.


கவாஸ்கர் 125 போட்டிகளில் விளையாடி, 10122 ரன்கள் எடுத்துள்ளார். 34 சதமும் 45 அரைசதமும் அடித்துள்ளார்.

மொபைலில் அதிக நேரம் பேசுபவர்களுக்கு தோல் நோய் வரும் : பிரிட்டிஷ் டாக்டர்கள் தகவல்


லண்டன் : இப்போது மொபைல் போன் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாகி விட்டது. அது இல்லை என்றால் அன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு முக்கிய பொருளாகி விட்டது. ஆனால் அதை உபயோகிப்பவர்களுக்கு தோல் அரிப்பு நோய் வரும் வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் டெர்மடாலஜிஸ்டுகள் அசோசியேஷனை சேர்ந்த டாக்டர்கள் குழு வெளியிட்ட அறிக்கையில் நிக்கல் கோட்டிங் இருக்கும் மொபைல் ஹேண்ட்செட்டை உபயோகிப்பவர்களுக்கு நிக்கலால் ஏற்படும் அலர்ஜி காரணமாக முகம் மற்றும் காது பகுதியில் தோல் அரிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆராய்ச்சியில், அதிக நேரம் மொபைலில் பேசுபவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு நிக்கல் அலர்ஜி இருக்கிறது. மொபைல் போன் ஹேண்ட்செட்களில் பட்டன்கள், ஸ்கிரீனின் விளிம்பு போன்றவற்றில் அதிகளவு நிக்கல் கலந்திருப்பதால், அதை உபயோகிப்பவர்களின் கன்னம், காது போன்ற பகுதிகளில் தோல் பாதிக்கப்படும் என்கிறார்கள். தோல் சிவப்பாகி, வறண்டு, வெடித்து விட வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். பொதுவாக தங்க நகை அணியும் மங்கையர்களுக்கும், பெல்ட் அணியும் ஆண்களுக்கும் ( பெல்ட்டில் இருக்கும் பக்கிலால் ), அதில் நிக்கல் இருப்பதால் அலர்ஜி ஏற்படுவது உண்டு. அம்மாதிரி நபர்கள் மொபைலில் அதிக நேரம் பேசினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மொபைல் பட்டன்களை அதிக நேரம் அழுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு விரல்களில் கூட தோல்நோய் வர வாய்ப்பு உள்ளதாம்


பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது


மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளது. காலை வர்த்தகம் துவங்கி சில நிமிடங்கள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ் பின்னர் குறைய துவங்கியது.மதியத்திற்கு மேல் அதிக அளவில் விற்பனை நடந்ததால் சென்செக்ஸ் மளமளவென்று வீழ துவங்கியது. மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 606.14 புள்ளிகள் குறைந்து 9,975.35 புள்ளிகளில் முடிந்தது.கடந்த 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் சென்செக்ஸ் இந்த அளவுக்கு வீழ்ச்சியை கண்டிருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 194.95 புள்ளிகள் குறைந்து 3,074.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. நிப்டியும் 2006 ஜூலைக்குப்பின் இப்போதுதான் இவ்வளவு குறைந்திருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டிருந்த முன்னேற்றத்தை அடுத்து காலை வர்த்தகத்தின் போது 205 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த சென்செக்ஸ், பின்னர் நடந்த அதிக அளவிலான விற்பனையால் விழ துவங்கியது.இன்று அதிகம் பாதிக்கப்பட்டது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பார்தி எர்டெல், இன்போசிஸ், எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பெல், என்,டி.பி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்ஃராஸ்டெக்சர், டிசிஎஸ் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள்தான். இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 5.8 சதவீதமும் நிப்டி 6 சதவீதமும் குறைந்திருக்கிறது. முன்பு 10,000 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 21,207 புள்ளிகள் வரை உயர்வதற்கு, அதற்கு 384 வர்த்தக நாட்கள் தேவைப்பட்டிருந்தது. ஆனால் 21,207 புள்ளிகளில் இருந்து 10,000 புள்ளிகளாக குறைந்ததற்கு அதற்கு 192 வர்த்தக நாட்கள் மட்டும் போதுமானதாக இருந்திருக்கிறது. 21 ஆயிரம் புள்ளிகளில் இருந்து சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளாக குறைந்ததற்கு அதிகம் காரணமாக இருந்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூம், ஐசிஐசிஐ பேங்க்கும்தான். இந்த இரு நிறுவனங்களால் மட்டுமே சென்செக்ஸ் 30 சதவீதம் குறைந்திருக்கிறது.அதற்கு அடுத்தாற்போல் அதிகம் வீழ்ச்சி அடைந்திருந்தது எல் அண்ட் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி.,தான்.

Wednesday, October 15, 2008

விவசாயி செருப்பு 12 கிலோ கின்னசுக்கு தீவிர முயற்சி


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் ஜோடி செருப்பு எடை 12 கிலோ; எப் படித்தான் நடந்து செல்கிறாரோ என ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். கின்னஸ் சாதனை படைக்கும் தாகத்தில் உள்ள இவர், அது பற்றி கவலைப்படுவதே இல்லை! மகாராஷ்டிர மாநிலம், வசாய் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தாஜி டோல்டாட்; வயது 60. இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். ஏதாவது புதுமையாக செய்து, சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணியதன் விளைவு, இவருக்கு செருப்பின் மீது தான் கவனம் பதிந்தது. தன் செருப்புகளை தானே தயாரிக்க ஆரம்பித் தார். முதலில் ஒரு கிலோ எடையுள்ள செருப்பை உருவாக்கினார். அதன்பின், 2 கிலோ, 3 கிலோ, 8 கிலோ எடையுள்ள செருப்புகளை தயாரித்து அணிந்து பழகினார்.


இப்போது அவர் அணிந்திருக்கும் ஜோடி செருப்பு எடை 12 கிலோ. எருமைத் தோலினால் ஆன இந்த செருப்புகளில், பளிச் சிடும் சிறிய விளக்குகளும் பொருத்தியுள்ளார்; சிறிய மணிகளையும் கோர்த்து சலங்கையும் அணிந்துள்ளார். இந்த மெகா எடையுள்ள செருப்பை அணிந்து இவர் நடக் கும் போது, இவரது "ஒலியும் ஒளியும்' செருப்புகளில் இருந்து வண்ண விளக்குகளும் பளிச் சிடும்; கிண்கிணி ஒலியும் எழுப் புவதால், பலரும் வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், துணை உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் வந்தபோது, இவர் செருப்பை பார்த்து வியந்தார். "உங்கள் சா தனை முயற்சிக்கு அரசின் பாராட்டுகள் உண்டு' என்று சொல்ல, சான்றிதழும் அளித்தார். உலகில் வேறு எங்கும், யாரும்
இவ்வளவு அதிக எடையுள்ள செருப்புகளை அணிந்ததில்லை. அதனால், கின்னஸ் சாதனை படைக்க முடியும் என்று தாஜி டோல்டாட் நம்புகிறார்.


இவர் கூறியதாவது:என்னிடம் உள்ள எல்லா செருப்புகளும் ஒரு கிலோவுக்கு மேல் தான் எடையுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக, தனி பீரோ வாங்கியுள்ளேன். அவற் றில் அவற்றை பராமரித்து வருகிறேன். அதிக எடையுள்ள செருப் புகளை அணிந்தபோது, கால்களில் கீறல்கள், வெடிப்புகள் விழுந்தன. ஆனால், போகப் போக அவை பழகி விட்டன. இப்போது 12 கிலோ எடையுள்ள செருப்புகளை அணிந்தபோது, சற்று கடினமாக இருந்தது. ஆனால், எல்லாரும் பாராட்டவே, எனக்கு அந்த வலி தெரியவே இல்லை. இந்த செருப்பை தினமும் சோப்பு போட்டு சுத்தம் செய்கிறேன். வாசனை வெளிப்படும் வகை யில் வாசனை திரவியங்கள் கொண்ட "ஸ்ப்ரே'யும் பயன் படுத்துகிறேன். இந்த செருப்புகளை போட்டுக்கொண்டு, தினமும் 8கி.மீ., தூரம் நடந்து செல் கிறேன். அதிக எடையுள்ள செருப்பை போட்டுக்கொண்டு அதிக தூரம் நடந்தவன் என்ற பெருமை நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது; அதனால், தபால் கல்வி மூலம் ஆங்கிலம் கற்று வருகிறேன். நான் இறந்த பின், "இவன் சாதனை படைத்தவன்' என்று உலகம் பேச வேண்டும். அது தான் என் குறிக்கோள். இவ்வாறு தாஜி டோல்டாட் கூறினார்.

வருமானவரி வழக்கில் சிக்கினார் ஐஸ்வர்யா ராய் நெருக்கடி


மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் தாக்கல் செய்த, 1996-97ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில், அவர் சலுகை பெற்றதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உலக அழகிப் பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், கடந்த 1996-97ம் ஆண்டுக்கு தாக்கல் செய்திருந்த வருமான வரி கணக்கில், வரி கணக்கிடுவதற்கான ஆண்டு வருமானம், 2.14 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த ஆண்டில் தான் அவர் உலக அழகிப்பட்டம் பெற்றார். அதன்மூலம் அதிக பரிசுத் தொகை கிடைத்தது. உலக அழகிப் பட்டம் பெற்றதன் மூலம் உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.



186 நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் இருந்ததால் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்ற பிரிவில் சலுகை பெற்றார்.கடந்த 2003ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஐஸ்வர்யா ராயின் வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்தனர். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்ததில்
அவர் என்.ஆர்.ஐ., இல்லை என்பது தெரியவந்தது.வருமான வரித்துறையின் தனது வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்வதை எதிர்த்து ஐஸ்வர்யா ராய் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு
செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் கடந்தாண்டு வருமான வரித்துறையினர் முடிவுக்குத் தடை விதித்தது.இதை எதிர்த்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.


இம்மனுவை நீதிபதி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுமதித்தது.வருமான வரித்துறை சார்பில் ஆஜரான பென்னி சட்டர்ஜி வாதிடுகையில் கூறியதாவது:ஐஸ்வர்யா ராயின் வருமானம் குறித்து கேள்வி எழுப்பப்படவில்லை. ஆனால் அவர் என்.ஆர்.ஐ., பிரிவில் சலுகை பெற்றது தான், கேள்விக்குறியாகியுள்ளது. "மிஸ் வேர்ல்டு' பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்ற பிரிவில் தான் வருவதாகக் கூறி சலுகை பெற்றுள்ளார்.


அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது, அவர் 186 நாட்களுக்கு குறைவாகத் தான் அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்துள்ளார்.எனவே, அவர் உலக அழகிப் பட்டம் பெற்றதற்குப் பின் வெளிநாடுகளில் சம்பாதித்த 26 லட்ச ரூபாயிற்கு வருமான வரியை வட்டியுடன் செலுத்த உத்தரவிடவேண்டும்
இவ்வாறு பென்னி சட்டர்ஜி கூறினார்.

பிச்சைக்காரர்களின் வருமானம் ஒரு ஆண்டுக்கு 180 கோடி ரூபாய்


ஐதராபாத்: நம் நாட்டில் 7.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்களின் மொத்த ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 180 கோடி ரூபாய்.ஐதராபாத் மனித நல கவுன்சிலின் இயக்குனராக இருப்பவர் முகமது ரபியுதீன். இவர் "ஐதராபாத் பிச்சைக்காரர்கள்' என்ற நூலை எழுதியுள்ளார். இதுகுறித்த தகவல்களை சேகரிப்பதற்காக நாடு முழுவதும் சென்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு நடத்தினார். இதில், தெரியவந்துள்ளதாவது:இந்தியா முழுவதும் 7.3 லட்சம்
பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆண்டில், ரூ.180 கோடி சம்பாதிக்கின்றனர்.


கிடைக்கும் வருமானத்தில், 20 சதவீதத்தை :
ஐதராபாத்தில் மட்டும் 11 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும், பிச்சை எடுப்பதன் மூலம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். இருந்தாலும், இவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவில்லை. இன்னும் வறுமையில் தான் வாடுகின்றனர். பிச்சை எடுப்பதால் கிடைக்கும் வருமானத்தில், 20 சதவீதத்தை மட்டுமே உணவுக்காக செலவிடுகின்றனர். 30 சதவீத வருவாயை தவறான பழக்க வழக்கங்களுக்காக செலவு செய் கின்றனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப் பட் டுள்ளது.


ஐதராபாத்தில் நடந்த விழாவில், தேசிய குழந்தைகள் நல ஆணைய தலைவர் சாந்தா சின்கா இந்த விவரங்களை வெளியிட்டு பேசினார். அவர் மேலும் பேசியதாவது:



பிச்சைக்காரர்களின் வாழ்வு மேம்பட, முறையான ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள், இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்து விடுகின்றனர். இதற்கு தீர்வு காண, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, எங்கோ தவறு நடப்பதை சுட்டிக் காட்டுகிறது.


இவ்வாறு சாந்தா சின்கா பேசினார்.

சென்னை துறைமுகத்தில், 'மிதவை பல்கலை' கப்பல்


சென்னை: நவீன வசதிகள் கொண்ட "எம்.வி., எக்ஸ்புளோரர்' மிதவைப் பல்கலைக் கப்பல் 676 மாணவர்களுடன் நேற்று சென்னைத் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலில் உள்ள "வெர்ஜினியா' மிதவைப் பல்கலைக் கழகத்தில் அமெரிக்கா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 676 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களது படிப்பின் ஒரு பகுதியாக இம்மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டின் கலாசாரம், கல்வி, சரித்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். பிரேசில், பகாமாஸ், நமீபியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்தியாவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, "மிதவை பல்கலைக்' கப்பல் நேற்று காலை சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. சென்னையில் ஐந்து நாட்கள் தங்கும் இவர்கள் இந்தியாவில் சுற்றுப்புறச் சூழ்நிலை, மக்களின் கலாசாரம் ஆகியவற்றை அறிந்துக் கொண்டு, பழங்கால புராதனச் சின்னங்கள் பற்றியும் ஆய்வு செய்ய உள்ளனர். பல்கலைக் கழகத்தைப் போன்றே பல்வேறு வசதிகளுடன் "எம்.வி., எக்ஸ்புளோரர்' கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு மாடிகளைக் கொண்ட இக்கப்பலில் வகுப்பறைகள், ஓய்வறைகள், விளையாட்டுக் கூடம், நீச்சல் குளம் மற்றும் "லிப்ட்' என அனைத்து நவீன வசதிகள் உள்ளன. கம்ப்யூட்டர் லேப் வசதியும் உள்ளது. அன்றாட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் செயற்கோள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Monday, October 13, 2008

இதற்கு நான் அரசியலுக்கு வரமட்டேன் என்று அறிக்கை விட்டிருக்கலாம்


சென்னை: ""அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது,'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, "சூப்பர் ஸ்டாராக' வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை, அவரது ரசிகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.


ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி: ரஜினியின் நண்பரான நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், "ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என்ற குரல், ரஜினி ரசிகர் களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும், வேண்டுகோள் விடுத் தும் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.கோவையில் ஒரு படி மேலாக ரஜினி பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிய ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி, உறுப்பினர் விண்ணப்பம் உள்ளிட்டவற்றையும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினர்.


இந்த மாதம் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது."எந்திரன்' படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்ததால், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. இதனால், எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்படைந்தனர். இரு நாட்களாக, ரஜினிக்குச்
சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கினர்.


ரசிகர்கள் உணர்வு குறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:


சமீப காலமாக ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டை மாநிலத்திலும், தமிழகத்திலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம், எனக்கு நன்றாகப் புரிகிறது.


அனுமதிக்க மாட்டேன்: தற்போது பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் "எந்திரன்' படப்பிடிப் பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள், அவரவர்களுக்கு விருப்பமுள்ள கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப் படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை, அந்தந்த மாவட்ட தலைவர்கள், தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.


அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, நான் நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். "அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.


அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்.


இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசிலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று தெளிவாகக் கூறாமல் மீண்டும் குழப்பமான அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அடுத்தவர் புகையை சுவாசித்தாலும் கேன்சர்!


இந்தியாவில் அக்டோபர் 2ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் புகை பிடிப்பது அடுத்தவர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பதாலே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.அடுத்தவர் ஊதும் புகை பற்றிய பொதுவான சந்தேகங் களுக்கு இங்கு விடைகள் இடம்பெறுகின்றன.


அடுத்தவர் வெளியிடும் புகை கெடுதலானதா?


ஆம். அடுத்தவர்கள் புகை பிடிக்கும் போது வெளியாகும் புகை, நம் உடலுக்கு தீங்கானது. நாம் புகைபிடிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அந்த விளைவுகள் அடுத்தவர் புகையிலும் உண்டு.



புகையில் என்னென்ன நச்சுகள் உள்ளன?

சிகரெட் புகையில் 4 ஆயிரம் வகையான நச்சுத் தன்மை கொண்ட துகள்கள் உள்ளன. நிகோடின், பென்சீன், பென்சாபைரீன், கார்பன் மோனாக்சைடு, அம்மோனியா, ஹைட்ரஜன் சயனைடு இவற்றில் முக்கியமானவை. சிகரெட்டில் உள்ள 60 வகையான நச்சுகள் கேன்சர் உருவாவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. சுவாசக்குழலில் உள்ள மெல்லிய திசுக்களுக்கு அவை எரிச்சலூட்டுகின்றன. கேன்சர் ஏற்பட காரணமாகன கார்சினோஜன் சிகரெட் புகையில் உள்ளதால், நச்சுத்தன்மை மிக்க ஆஸ்பிடாஸ், ஆர்சனிக் ஆகியவற்றுடன் இப்புகை சமமானதாக ஒப்பிடப்படுகிறது.



அடுத்தவர் புகையை சுவாசிப்பதன் ஆபத்துகள் என்ன?
அடுத்தவர் புகையை 30 நிமிடம் சுவாசித்தாலே இதயத்தின் வழியாக செல்லும் ரத்த ஓட்டம் கூட குறையும் அபாயம் உள்ளது. தலைவலி, இருமல், கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் இதுபோன்று புகையை சுவாசிக்கும் போது அவர்களது நுரையீரல் செயல்பாடு குறைந்தது.


நீண்ட காலம் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
புகை பிடிக்காதவர் கூட, அடுத்தவர்கள் புகையை சுவாசிக்க நேரிடும் போது, 25 சதவீத மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பினைப்பெறுகிறார்கள். 50 -60 சதவீதம் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் வாய்ப்புள்ளது. வீட்டிலுள்ள குழந்தைகளின் மனவளர்ச்சி யிலும் புகை கேடு விளைவிக்கிறது. பொது இடங்களில் புகை பிடிக்கும் போது அது அடுத்தவரை பாதிக்கிறது. ஒரு குடும்பத்தில் இருவர் புகைபிடித்தால் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு சுவாசம்
தொடர்பான பிரச்னை வர 72 சதவீத வாய்ப்புள்ளது.


வேறு எந்த நாடுகளில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை
செய்யப்பட்டுள்ளது?


உலகிலேயே முதன்முறையாக பொது இடங்களில் புகைபிடிக்கக்கூடாது ன்று தடை செய்த இடம் வாடிகன்தான். 1590ம் ஆண்டில் போப் ஏழாம் அர்பன் இத்தடையை விதித்தார். 1600 களில் ஆஸ்திரியா, 1876ல் நியூசிலாந்து, 1941ல் ஜெர்மனி பொது இடங்களில் புகைப்பதற்கு தடை விதித்தன. சமீபத்தில் நார்வே 2004, இத்தாலி, ஸ்வீடன் 2005, பிரிட்டன் 2006 மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பொது இடங்களில் புகைக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது.



தடை ஏன்? :


பொதுமக்களின் உடல் நலன் மற்றும் நாட்டின் சுகாதார செலவு கியவற்றை கருத்தில் கொண்டே பொது இடங்களில் புகைபிடிக்க தடை திக்கப்பட்டுள்ளது. பிறரது உடல் நலனை கெடுக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க திக்கப்பட்டுள்ள
தடையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.






Sunday, October 12, 2008

அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏன்? நடந்தது என்ன


கடந்த 15 நாட்களாக பங்குச்சந்தை பற்றிப் பேசாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. காரணம், சிறிய அளவு சேமிப்பையும் முதலீடாக்கிய ஒரு சாதாரண நபரும் இந்த சந்தை வீழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கடந்த இரு ஆண்டுகளில் பங்குச்சந்தையில் முதலீடு என்பது ரேஸ் குதிரைப் பந்தயத்தில் முதலீடு போல பெரிதாகப் பேசப்பட்ட விஷயம்.


பங்குச்சந்தை குறியீட்டெண் 10 ஆயிரத்தை தாண்டியபின் மடமட வென அதிகரித்து, 15 ஆயிரத்தை தாண்டியதும், அதில் முதலீடு செய்யாமல், வங்கி நிரந்தர வைப்பில் பணத்தைச் சேமித்தவர்கள் அப்பாவிகளாகக் கூட காணப்பட்டனர்.இன்று பங்குகள், பங்குச்சந்தையின் செயல்கள், முதலீட்டில் அதன் தாக்கம் ஆகியவை பற்றி அறிந்தவர்களை விட அறியாத பலரும் ஆர்வத்தில் முதலீடு செய்துவிட்டு, தற்போதைய சந்தையின் அதலபாதாள வீழ்ச்சியில் குன்றிப் போய் இருக்கின்றனர்.


இந்நிலைக்கு அமெரிக்காவின் போக்கே காரணம். வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற கருத்தை நோக்கி செயல்படும் பொருளாதாரத்தை அங்கே ஊக்குவித்தனர். தவிரவும், எல்லாவற்றையும் நுகரும் கலாசாரம் என்ற நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன் வாங்கிய வீடுகள் தற்போது மும்மடங்கு வரை விலை அதிகரித்தது.இந்த வீட்டு வசதிக்காக வங்கிகள் கடன் தரும் நடைமுறையில் அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறை பெரிய ஆபத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.


கடன் பெற்றவர்கள் : ஏதோ லேமென் வங்கி வீழ்ச்சி என்று ஆரம்பித்த கதை, 70 ஆயிரம் கோடி டாலரை அரசு தரமுன்வந்தும் அமெரிக்க நிலைமையை மோசமாக்கியிருக்கிறது.உதாரணமாகச் சொன்னால், மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் டாலரில் ஒரு வீடு (அன்று அதன் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம்) வாங்கினால், அமெரிக்காவில் அதற்குப் பெரிய ஆதாரம் ஒன்றும் கேட்காமல் கடன் தந்துவிடும் வங்கி.முகவரிக்கான அத்தாட்சி கூட இல்லாமல் கடன் பெற்றவர்கள் உண்டு. கிரெடிட் கார்டு கலாசார வேகம் அப்படி. வீடு வாங்கினால் அது அதிகவிலைக்கு எதிர்காலத்தில் விற்கப்படும் என்ற கருத்தில், அமெரிக்காவில் வீடு வாங்கும் மோகம் அதிகரித்தது. அந்தக் கடன்பத்திரங்களை அப்படியே அமெரிக்க வங்கிகள்,


"அதிக லாபம் தரும் கடன் உதவி வசதிகள்' என்று கவர்ச்சிகரமாகப் பெயரிட்டு மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றன.இதில் திவாலான அமெரிக்க நிதிநிறுவனம் லேமென் வாங்கிக்குவித்த கடன்பத்திரங்கள் ஏராளம். இந்தக் கடன் பத்திரங்கள் பல்வேறு வங்கிகளுக்குக் கைமாறி, அதற்கு கமிஷன் பெற்றவர்கள் ஏராளம். நீர்க்குமிழி போல இந்த வர்த்தகம் உலகெங்கும் வங்கிகளிடம் பரவியது.ஆனால், கடந்த ஆண்டு வீட்டு விலை இறங்கத் தொடங்கியது. தவணை கட்ட வேண்டியவர்கள் படுத்து விட்டனர்.
நிறைய வீடுகளை விற்க முன்வந்தனர், கிடைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்க முயன்றனர். ஆனால், வாங்குவதில் அதிக வேகம் இல்லை.அதேசமயம், அதிகலாபத்தில் இந்தப் பத்திரங்களை விலைக்கு வாங்குவதை லேமென் முதலிய நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டன. அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வங்கிகள் நிதிப்புழக்கம் இன்றி முடங்கின. பத்திரங்களைப் பெற்று கணிசமான வட்டிக்குப் பணம் தரும் வங்கிகளின் சாமர்த்தியம் முடிவுக்கு வந்தது. தங்களிடம் உள்ள ஆஸ்திமதிப்பு குறைந்ததும் ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வழக்குகள் தொடர்ந்தன.


அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் தடுமாறின. இது ஆசியாவுக்கும் பரவி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த "சப்பிரைம்' பிரச்னை இன்று உலகையே நிம்மதியில்லாமால் ஆக்கி விட்டது.முடிவில் 70 ஆயிரம் கோடி டாலரை அமெரிக்க அரசு தர வேண்டியதாயிற்று; உழைத்துச் சேமித்தவர்கள் பணத்தை அழித்து விட்டது. பொதுவாக ஒருவர் கடன் பெற்று வீடு வாங்கினால் அது சொத்து அல்ல; பொருளாதார சுமை. அதே போல கிரெடிட் கார்டில் மளிகைச் சமான்கள் வாங்கினால் அது சுமை; சுகம் அல்ல.


ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசை : பணக்காரர்கள் தங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்க மாட்டார் கள், அதைப் பெருக்கு வழிகாண் பார்கள். மாறாக, ஸ்டாக் புரோக்கரிடம் போனில் பேசி பங்குகள் வாங்கினால் அது பணமரமாகக் காய்க்கும் என்றால் அவ்வளவு தான்! அந்தப்பாடத்தை இப்போது அமெரிக்க அனுபவத்துடன் பலரும் கற்று வருகின்றனர். நல்ல வேளையாக, "சப்பிரைம்' நடைமுறையை இந்தியாவில் பின்பற்றவில்லை.இன்று பங்குச்சந்தை அதலபாதளத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசையால் ஏற்பட்ட பீதி தீபாவளி கொண்டாடுவேன்' : மும்பை ஸ்டாக் புரோக்கர் ஜுன்ஜுன்வாலா வெளிப்படையாக, "பங்குச்சந்தையில் 20 ஆயிரம் வரை புள்ளிகள் உயரும் என்று நான் கணிக்கவில்லை, ஆபத்தில்லா முதலீடு செய்தவர்கள் நன்றாக வரும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள், "மேலும் தீபாவளிக்கும், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல, பேச வேண்டாம். நான் நன்றாகவே வழக்கப்படி தீபாவளி கொண்டாடுவேன்' என்கிறார். அப்படி எத்தனை ஸ்டாக் புரோக்கர்கள் இனிக் கூறப்போகிறார்கள் என்பது கேள்வி தான்.


நெம்புகோல் தத்துவம்: 150 சதவீத லாபம் எப்படி வரும்?: அமெரிக்காவில், 2003ம் ஆண்டு வட்டிவீதம் 1 சதவீதம் என்று ஏற்பட்டதிலிருந்து வீட்டுக்கடன் என்பதில் வந்த பல்வேறு நடைமுறைகள் இன்று அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நிறுவனங்களைக் கலக்குகின்றன.ஏதோ ஆதாயம் வரும் என்று எண்ணி, கையில் இருக்கும் மூலதனத்தை இழப்பது சரியல்ல; ஆனால், கையில் மூலதனமே இல்லாமல் நடக்கும் பரிவர்த்தனைகள், அதற்கான நடைமுறைகள் இப்போது உலகம் முழுவதும் எல்லாரையும் அச்சப்பட வைத்து விட்டது. ஒரு சிறிய உந்து சக்தியை வைத்து பெரிய பாறாங்கல்லைக் கூடப் புரட்டலாம் என்பது நெம்புகோல் தத்துவம், இது இயற்பியலில் உள்ளது


ஒருவர் 1,000 ரூபாயை சேமிப்பில் போட்டு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி என்றால், அது ஆண்டு முடிவில் 1,150 ரூபாயாக உயரும். ஆனால், கையில் 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு மேலும், 9,000 ரூபாய் கடன் வாங்கி பின் மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் எப்படி? அந்த முதலீட்டிற்கு ஆண்டு இறுதியில் வட்டி 15 சதவீதக் கணக்கில் பார்த்தால், அசலுடன் சேர்த்து 11 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.பணம் வாங்கியது உறவினரிடம் என்றால், வாங்கிய அசலை மட்டும் திரும்பக் கொடுத்துவிட்டால், எந்தவித முயற்சியும் இன்றி 2,500 ரூபாய் கிடைக்கிறது. அதில் முதலில் கையில் வைத்திருந்த அசல் 1,000 ரூபாய் மட்டுமே என்பதை நினைத்தால் ஆச்சரியம் அல்லவா? அப்போது 1,000 ரூபாய்க்குக் கிடைத்தது 1,500 ரூபாயா? நினைத்தால் மலைப்பாக இருக்கும். இது, 150 சதவீத லாபம்.இப்படி லாபம் கிடைக்காமல் 15 சதவீத வட்டியும் காற்றில் பறந்து விடுகிறது என்றால், அந்த நிலையில் கிடைப்பது 8,500 ரூபாய் மட்டுமே.
உறவினரிடம் வாங்கிய 9,000 ரூபாயிலும் 500 இழப்பாகி விடுகிறது. கையில் வைத்திருந்த 1,000 ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது. இப்படித்தான், "சப்பிரைம்' கடன் பத்திரங்கள் லாபம் கிடைக்கும் என்று பல்வேறு முதலீடுகளாக மாறி இன்று, "வால்ஸ்டிரீட் மட்டும் அல்ல, உலகையே கலக்குகிறது. இதில் ஒரு நல்ல அம்சம். இந்தியாவில் உள்ள வங்கி ஏதும் இந்த நிதிச்சுழலில் சிக்காததால், அதில் சேமிக்கப்பட்ட டிபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை

அல்போன்சாவுக்கு 'புனிதர்' பட்டம் : போப் வழங்கினார்



வாட்டிகன் சிட்டி: கேரளாவை சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு, வாட்டிகன் நகரில் நடந்த விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குடமலூரில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி அல்போன்சா பிறந்தார். இவருடைய தந்தை ஜோசப், தாய் மேரி. அல்போன்சாவுக்கு பெற்றோர் இட்ட பெயர் அன்னகுட்டி. இளம் வயதில் பெற்றோரை இழந்த அல்போன்சா, உறவினர் வீட்டில் வளர்ந்தார். 13 வயதில் உமி எரிந்து கொண்டிருந்த குழியில் காலை வைத்ததால், கால் கருகி ஊனமானார்.



கல்லறையில் பல அற்புதங்கள் : 1928ம் ஆண்டு, கன்னியாஸ்திரியாகி அல்போன்சா என்ற பெயர் சூட்டப்பட்டார். ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணி புரிந்த சகோதரி அல்போன்சா உடல் நல குறைவால் ஆசிரியை பணியை கைவிட்டார். நிமோனியா மற்றும் அம்னீஷியா, வயிற்று வலி போன்ற நோய்களால் அவதிப்பட்ட அல்போன்சா 1946ம் ஆண்டு 36வது வயதில் இறந்தார்.அவருடைய உடல் பரணன்கணத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த கல்லறையில் பல அற்புதங்கள் நிகழ்வதால் ஏராளமானோர் இங்கு வழிபட ஆரம்பித்தனர்



இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை: கடந்த 1946ம் ஆண்டு, அல்போன்சாவை வழிபட்ட குஞ்சு என்பவருக்கு கால் ஊனம் மறைந்து சரியானது. கடந்த 1999ம் ஆண்டு ஜினிலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு, அல்போன்சா கல்லறையில் வழிபட்டதால் கால் ஊனம் சரியானது. இந்த அற்புதங்களை வாட்டிகன் நகரம் ஏற்றுக்கொண்டு கடந்த 1986ம் ஆண்டு கோட்டயம் வந்த போப் இரண்டாம் ஜான்பால், அல்போன்சாவுக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.இந்நிலையில், ரோமில் உள்ள வாட்டிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடந்த விழாவில், அல்போன்சாவுக்கு, போப் பதினாறாம் பெனடிக்ட்,"புனிதர்' பட்டத்தை வழங்கினார். பைபிள் வாசகத்தை வாசித்து அல்போன்சாவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தார் பெனிடிக்ட். அவர் தன் ஆசியுரையின் முடிவில், "இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது. இச் செயலில், ஈடுபடுவோர் அதைக் கைவிட்டு அன்புக் கலாசாரத்தில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக, எல்லாருடனும் சகோதர ,சகோதரிகளாக இணைந்து செயலாற்ற வேண்டும்' என்றார்

இந்த விழாவில், மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கேரள அமைச்சர் ஜோசப், தாமஸ் எம்.பி.,மற்றும் ஏராளமான கன்னியாஸ்திரிகள் உள்பட 5 ஆயிரம் இந்தியர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.இந்தியாவின் முதல் பெண் புனிதர் என்ற பட்டம் பெற்ற பெருமை அல்போன்சாவுக்கு கிடைத்துள்ளது. இனி சகோதரி அல்போன்சா, "புனிதர் அல்போன்சா'என்ற பெயரில் அழைக்கப்படுவார்.

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு (1910 -1946) வரும் 12ம் தேதி வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படும். எல்லாரும் ஆவலாக எதிர்பார்த்த அன்னை தெரசாவுக்கு முன்னதாக, கேரளாவில் வாழ்ந்த அல்போன்சாவுக்கு இக்கவுரவம் கிடைக்கிறது. கடந்த மார்ச் 1ம் தேதியே இதற்கான முடிவை வாடிகன் நிர்வாகம் எடுத்தபோதும், தற்போது போப் 16ம் பெனடிக்ட் முறைப்படியான அறிவிப்பு வெளியானதும் இந்தியாவின் முதல் பெண் புனிதர் என்ற சிறப்பைப் பெறுவார். அதற்குப் பின் செயின்ட் அல்போன்சா என்று அழைக்கப்படுவார்.



அல்போன்சா, 35 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் உடலை வருத்தும் நோயின் இன்னல்களுக்கு ஆளான போதும், இன்முகத்துடன் காட்சியளிப்பவராகவே வாழ்ந்தார். அவரை வருத்தும் நோய்களைக் குணமாக்க அவர் முயன்றது இல்லை. மற்றவர்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நினைத்தது இல்லை. ""இதுபோன்ற ஒரு வித்தியாசமான பண்பு, மனித சமூகம் பார்த்திராத ஒன்று,'' என்று கார்டினல் கிரேசியஸ் ஒரு முறை குறிப்பிட்டார். அல்போன்சா, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி கோட்டயத்தில் குடமலூர் கிராமத்தில் ஜோசப் மற்றும் மேரிக்கு அருமை மகளாகப் பிறந்தார். அப்போது அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அன்னக்குட்டி.

குடமலூர் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இளம் வயதிலேயே தாயை இழந்துவிட்ட அன்னக்குட்டியை, அவரது பெரிய மாமாவான அருட்தந்தை ஜோசப் வளர்த்தார். 1923ம் ஆண்டு உமி எரிந்து கொண்டிருந்த குழிக்குள் விழுந்ததால், அவர் கால்கள் வெந்துவிட்டன. இதனால், அவர் ஊனமடைந்துவிட்டார். கடந்த 1928ம் ஆண்டிலிருந்து அவர் அல்போன்சா என்று அழைக்கப்பட்டார். 1936ம் ஆண்டில் நிரந்தர உறுதிமொழி எடுத்துக்கொண்ட அவர், சங்கனாச்சேரி திரும்பி ஆரம்பப் பள்ளியில் வகுப்பு எடுத்தார். ஆனால், நோய்வாய்ப்பட்டதால் அவரால் அதை தொடரமுடியவில்லை. பின், பரனன்கணம் சென்றார். தொடர்ந்து அம்னீஷியா பாதிப்புக்கு உள்ளானார்.


கடந்த 1941ம் ஆண்டுக்குப் பின் அவரது உடல்நிலை தேறினாலும் கூட, பின், வயிற்று வலியால் அவதிப்பட்டார். முடிவில் 1946ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி அவர் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். பரனன்கணத்தில் அவருக்கு கல்லறை எழுப்பப்பட்டது. அவரது கல்லறைக்குச் சென்று வழிபடுவோர் அதிசயிக்கும் வகையில் குணமடைவது பற்றி கிறிஸ்தவ சமுதாயத்தில் பலரும் அதிசயிக்கின்றனர். 1985ம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி கவுரவித்தார். 1986ம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது அல்போன்சா கல்லறைக்கும் சென்றார்.


அல்போன்சா நிகழ்த்திய அதிசயங்களில், நடக்க முடியாத ஊனமுற்ற ஒரு வயது ஆண் குழந்தை ஜிலிலுக்கு ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது.
அல்போன்சாவின் கல்லறைக்கு, 1999ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி ஜிலில் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் நன்றாக நடந்தான். க்குழந்தையின் மீது கல்லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அற்புதத்தை 2007ம் ஆண்டு போப் 16ம் பெனடிக்ட் ஏற்றுக் கொண்டார்.


இந்தியாவில் இதற்கு முன்பாக ஒருவருக்கு மட்டுமே புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. செயின்ட் கார்சியாவுக்கு (1556-1597) கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் கழித்து, 1862ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்பின், ஏறத்தாழ 146 ஆண்டுகளுக்குப் பின் அல்போன்சா புனிதர் பட்டம் பெறுகிறார். அல்போன்சா மறைந்து 62 ஆண்டுகளுக்குப் பின், வாடிகனில் அக்., 12ம் தேதி நடைபெறும் இப்புனித நிகழ்ச்சியில் கேரள கார்டினல் வார்க்கி வித்யார்த்தில்
உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

கோட்டயம்:கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அல்போன்சாவுக்கு வரும் 12ம் தேதி, போப் 16ம் பெனடிக்ட், புனிதர் பட்டம் வழங்க உள்ளார். அதற்காக அல்போன்சாவின் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு எலும்புகள் வாடிகன் நகருக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது.இந்த சிறப்பு, இந்தியாவில் வாழ் ந்தவருக்கு முதன் முதலாக வழங்கப்படுகிறது என்பது சிறப்பாகும்.கேரளாவை சேர்ந்தவர் கன்னி யாஸ் திரி அல்போன்சா.
1910ம் ஆண்டு பிறந்த இவர்,35ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தார்.பரனன் கணத்தில் அமைந்துள்ள, இவரது கல்லறையில் வழிபடுவோருக்கு அதிசயிக்கும் வகையில் நோய்கள் குணமா கின. கல் லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அதிசயத்தை, 2007ம் ஆண்டு போப் 16ம்பெனடிக்ட் எற்றுக் கொண் டார்.இதையடுத்து அல்போன்சாவுக்கு வரும் 12ம் தேதி போப் 16ம் பெனடிக்ட், புனிதர் பட்டம் வழங்க உள் ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு, மதர்-ஜெனரல் எஸ்.ஆர்.சிசிலி என்பவர் கத்தோலிக்க பாலா திருச் சபை சார்பாக, புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் வைப்பதற்காக, அல்போன்சாவின் உருவப்படமும், அவரது கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு கை எலும்புகளும் தனித்தனியே இரண்டு பெட்டி களில் வைத்து வாடிகன் கொண்டு சென்றுள்ளார்.
இதில் ஒரு பெட்டியை புனிதர்களின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள, செயின்ட் பீட்டர் அரண்மனையில் வைப்பதற்காக போப்பிடம் கொடுக்கப்படும். மற்றொரு பெட்டி அல்போன்சாவின் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் வைக்கப்படும்.கேரளாவை சேர்ந்த 10 ஆயிரம் கத்தோலிக்கர்கள் மற்றும் மூத்த கிறிஸ்துவ மதக்குருக்கள் பலர், வாடிகனில் நடைபெறவுள்ள, புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில்


இந்தியாவின் முதல் பெண் புனிதர் பட்டம் பெற்றுள்ள அல்போன்சாவின் கல்லறை அமைந்துள்ள கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பரணங்கானத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் வழி வருமாறு. குமுளியிலிருந்து வண்டிப்பெரியாறு, பீர்மேடு, குட்டிக்கானம், முண்டகயம், பாரத்தோடு, காஞ்சிரப்பள்ளி, பின்ணாக்கநாடு, திடநாடு, ஈராட்டுப்பேட்டைவழியாகபரணங்கானம் செல்லலாம். இந்த வழி குமுளியிலிருந்து 127 கி.மீ.,தொலைவாகும்.

கோட்டயத்திலிருந்து பொன்குன்னம், பைகா, பாலா வழியாக 41 கி.மீ., பயணத்தில் செல்லலாம். எர்ணாகுளத்திலிருந்து வைக்கம், ஏற்றுமானூர், பாலா வழியாக 31 கி.மீ., பயணத்தில் செல்லலாம். திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம், சங்கனாச்சேரி, பொன்குன்னம், பாலா வழியாக 130 கி.மீ., பயணத்தில் செல்லலாம். செங்கோட்டையிலிருந்து புனலூர், அடூர், சங்கானாச்சேரி,
பொன்குன்னம், பாலா வழியாக 181 கி.மீ., பயணத்தில் செல்லலாம். பாலக்காட்டிலிருந்து திருச்சூர், அங்கமாலி, தொடுபுலா, பாலா வழியாக 210 கி.மீ., பயணத்தில் செல்லலாம்.